Wednesday, July 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செக்ஸ் விஷயத்தில் பெண்களில் சிலருக்கு வெறுப்பு இருக்கிறது. அது ஏன்?

சிறு வயதிலிருந்தே செக்ஸ் என்றால் கெட்ட வார்த்தை என்று சொல்லி வளர்க்கப்படும் பெண்க ளுக்கும், அதைப்பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பே இன்றி வளர்க்கப்படும் பெண் களுக்கும் பெரியவர்களானதும் அந்த விஷ யத்தில் வெறுப்பு அதிகம் ஏற்படு கிறது.

* காதல் கைகூடாமல் வேறு மண மகனை மணக்க நோpடும் பல பெண் களுக்கு செக்ஸ் என்பது வெறுப்பிற்குரிய விஷய மாக மாறி விடுகி றது. காதலனுடன் உடலளவிலும் நெருக்கமாக இருந் திருந்தால் அந்தப் பெண்களால், கணவனுடன் அந்தரங் கமான உறவில் ஈடுபட முடிவதில்லை.
* செக்ஸைப் பற்றிப் பேசவும், அதில் தனது தேவைகளை வெளிப் படுத்தவும் ஆண்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றொரு அபிப் ராயம் உண்டு. எங்கே தனது தேவைகளைப்பற்றிப் பேசி னால் தன் னைத் தன் கணவன் மட்டமாக நினைத்து விடுவானோ என்ற பயமே பல பெண்களுக்கு வெறுப்பாக மாறி விடுகிறது.
* சிறு வயதில் செக்ஸ் கொடுமைகளுக்கும், துஷபிரயோகங் களு க்கும் உட்படுத்தப்படும் பெண்களுக்கு பெரியவர்களானதும், அதைப் பற்றி முழுமையாகத் தெரிய வரும்போது அந்த விஷயமே வெறுக்கத்தக்க தாக மாறி விடுகிறது.
* உடல்நலக் கோளாறுகளும் பெண்களின் வெறுப்பிற்கு முக்கிய கார ணம். அளவுக்கதிக உதிரப்போக்கு, வெள்ளைப் போக்கு, பிறப்புறுப்பு துர்நாற்றம், அரிப்பு போன்ற பல பிரச்சினைகளால் இன்பமாக இருக்க வேண்டிய தாம்பத்திய உறவு பல பெண் களுக்குத் துன்பமாக மாறி விடுகிறது.
* கணவனின் முரட்டுத்தனச் செயல்களுக்கு இணங்கக் கட்டாயப் படுத்தப்படும் பெண்களுக்கும் செக்ஸில் வெறுப்பே மிஞ்சுகிறது.
* பெண்களுக்கு செக்ஸில் விருப்பம் குறைய கணவரது உடல் நலக் கோளாறுகளும் முக் கிய காரணம்.
* குழந்தை பெற்றதுமோ, குறிப்பிட்ட வயதை அடைந்ததுமோ அல்லது மெனோபாஸ் காலக்கட்டத்திற்கு வந்ததுமோ பல பெண்கள் தம க்கு வயதாகி விட்டதாக நினைத்துக் கொள்கிறார் கள். அதன்பிறகு தனக்கு செக்ஸெல்லாம் அனாவசிய விஷயம் என்று அதை வெறுத்து ஒதுக்க ஆரம்பிக்கிறார்கள்
* செக்ஸ் என்கிற விஷயம் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவித அனுபவத்தைத் தரும். அப்படியிருக்கையில் மற்ற பெண்களது செக்ஸ் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்கள் சொல் கிற விஷயங்கள் சில பயங்கரமானதாக இருக்கக் கூடும்.
அதைக்கேட்டு விட்டு, செக்ஸில் அனுபவமே இல்லாத பெண் களுக்கு தனக்கும் அப்படித்தான் நேரப்போகிறது என்ற திகிலு ணர்வு மனத்திற் குள் பதிந்து விடும். அதனால் செக்ஸ் என்றாலே பயத்திற்கும், வெறுப் பிற்குமுரிய விஷயம் என்று அவர்கள் நினைக்க ஆரம்பித்து விடு வார்கள்.
* மனம் அமைதியாக இல்லாதபோது உடலும் ஒத்துழைக் காது. பெண் களுக்கு வீட்டில், வெளியிடங்களில் எனப் பல இடங்களில், பல சூழ்நிலைகளில் சந்திக்கும் பிரச்சினைகளும் செக்ஸில் விருப்பத்தைப் படிப்படி யாகக் குறைத்துவிட வாய்ப்புகள் உண்டு.
இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply