Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களுக்கு கிரியேட்டிவ் திறமை உள்ளதா?

பாடத்தில் உள்ளவற்றைப் படித்து வாங்கும் மதிப்பெண்களை விட, சுயமாக சிந்தித்து உருவாக்கிய ஓவியத்தாலோ, கலைப் பொருளா லோ அதிக மகிழ்ச்சி அடைந்திருக் கிறீர்களா?

அப்படியானால் இது உங்களுக் கானது தான். இரண்டாம் உலகப் போரில் நட ந்த யுத்தத்தைப் பற்றி எழுதி பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று, ஒரு அலுவ லகத்தில் போய் வேலை செய்ய உங்களுக்கு விருப்பம் இல் லையா?

பென்சிலால் கட்டமும், சதுரமும் வரை ந்து புதிய டிசைன்களை உருவா க்குவதிலும், கலைப் பொருட் களை வடிவமைப்பதிலும் உங்க ளுக்கு ஆர்வம் உள்ளதா? அதையே முழு நேர வேலையாக செய் யும் எண்ணம் இருந்தால் நீங்கள் சேர வேண்டியது டிசைனிங் பாடப்பிரிவுகளில்.

இதில் என்ன எதிர்காலம் இருக்கிறது என்ற காலம் போய், இதில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு இந்தி யாவில் தற்போது டிசை னிங் கோர்ஸ் படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உள் ளன.

பெங்களூருவில் உள்ள டிசைன் அண்ட் டெக்னாலஜி படிப்புகளை அளிக்கும் சிருஷ்டி ஸ்கூல் ஆப் ஆர்ட்டின் ப்ரொபஷனல் டிப்ள மோ ப்ரோக்ராம்ஸ் பிரிவின் டீன் அம்பட் வர்கீஸிடம் இது பற்றி கேட்டதற்கு, இந்தியாவில் டிசைனிங் துறையில் குறைந்தது 10,000 முதல் 20,000 வடிவ மைப்பாளர்கள் தேவைப்படு கிறார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் வெறும் 1,000 பேர்தான் இதுபோன்ற படிப்புகளில் சேருகின்றனர். இந்த துறையில் நல்ல எதிர்காலம் இருந்தும் இது பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லாததே முக்கியக் காரணம் என்கிறார்.

அதுமட்டுமல்லாமல், நாடு முழுவதும் சின்ன சின்ன பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் ஏராளமாக உள்ளன. ஆனால் வடி வமைப்பாளர் பயிற்சி அளிப்பதற்கான கல்வி நிலையங்கள் என்றால் அது வெறும் 8 தான் உள்ளன. தற்போது பல கல்வி நிலைய ங்களில் விஷ¤வல் கம்யூனிகேஷன் படிப்பு உள்ளது சற்று ஆறுதல் அளிக்கிறது என்றார்.

விஸ்காம் என்றால் என்ன?
விஷ¤வல் கம்யூனிகேஷன் என்பதைத் தான் விஸ்காம் என்று சுருக்கமாக அழைக் கிறார்கள். விஷ¤வல் கம்யூனிகேஷன் பாடப் பிரிவில் மீடியா தொடர்பான அனை த்து பாடங்களும் கற்பிக்கப் படுகின்றன. அதாவது எழுதுதல், தொகுப்பு, புகைப்படம் எடுத்தல், படம் எடுப்பது, அனிமேஷன், டிசைனிங் மற்றும் ஏனைய விஷய ங்களும் கற்றுத்தரப்படுகிறது.

இளநிலை படிப்பில் இதுபோன்ற பாடப்பிரிவுகளை எடுத்து படி த்த மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் நல்ல எதிர்காலம் காத்திரு க்கிறது. மல்டி மீடியா, அனிமேஷன், விளம்பரத் துறை, புகைப்படம் எடுத்தல், திரைப்படம் எடுத்தல், தொலைக்காட்சி, கிராபிக் டிசைனிங் போன்ற பல்வேறு துறைகளில் வே லை வாய்ப்புகள் காத்திருக் கின்றன.

ஜனலிசம் படிப்பில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் கூட பல்வேறு பிரிவுகளில் தங்கள் திறமையை வெளிப்படுத் தலாம். செய்தி சேகரிப்பு, செய்தி தொகுப்பு, செய்தி வாசித்தல்,  பேட்டி எடுத்தல், சிறப்புச் செய்தி களை உருவாக் குதல் போன்றவற்றில் அவர் களது ஆர்வத்திற்கு ஏற்ப ஒரு பணியை தேர்வு செய்து கொள் ளலாம்.

விஸ்காம் படிக்கும் மாணவர்கள், படிப்பின் இறுதி மாதங்களில் செய்தி நிறுவனங்கள், வடிவமைப்பு கம்பெனிகள், தொழிற் சாலைகள் போன்ற வற்றில் உதவித் தொகையுடன் கூடிய பணியை செய்கி ன்றனர். அவர்களது ஆர்வத்திற்கு ஏற்ப அவர் களது பணித் தேர்வு அமையும். இதனால் அவர்களுக்கு படிப்பின் போதே பணி அனுபவமும் கிடைத்து விடுகிறது.

பெங்களூரில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.எஸ்சி. விஷ¤ வல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு, ஒரு இயக்குநரிடம் உதவி இயக்கு நராக பணியாற்றி வரும் அனந்தகிருஷன்னன் கூறுகையில், மீடியா தொடர்பான பல விஷயங்கள் கற்றுத் தரப்படுகின்றன. வாக்கிய அமை ப்பு, பில்ம் புரொடக்ஷன் போன்ற விஷயங்கள் தெரிந்து கொண்டதால் இந்த பணியை எளிதாக செய்ய முடிகிறது.

கல்வித் தகுதி மற்றும் சேர்க்கை
எப்போதும் காகிதங்களில் ஓவிய ங்களை வரைவதும், கம்ப்யூ ட்டரில் பெயின்ட்பிரஷ்ஷில் கிறு க்கிக் கொண்டிருப்பது மட்டும் இந்த பாடப் பிரிவுகளில் சேர தகுதியாகிவிடாது.

விஸ்காம் பாடப்பிரிவை அளிக் கும் பல கல்வி நிலையங்கள் இதற் கான கல்வித் தகுதியை வைத்துள்ளன. 10வது முடித்து பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சில கல்லூ ரிகள் நுழைவுத் தேர்வினையும் நடத்துகின்றன. சிலவற்றில், வரைதல், புகைப்படம் எடுத்தல், எழுதுதல் அல்லது கிராபிக்ஸ் செய்தல் போன்ற தேர்வுகளும் நடத்தப்படுகிறது.

சில கல்லூரிகள் தங்கள் விஸ்காம் படிப்பில் சேர தனித்தனியாக நுழைவுத்  தேர்வு, நேர்முகத் தேர்வுகளை நடத்தி அதன் பிறகே மாணவர் களை சேர்த்துக் கொள்கின்றன.

வேலை வாய்ப்பு
இளநிலை பட்டப்படிப்பு முடித்திருந்தாலே பல வேலை வாய்ப் புகள் உள்ளன. அதற்கு மேலும் முது நிலை பட்டப்படிப்பு படிப்பது அவர வர் விருப்பம். எழுத்து ஆற்றல், ஒரு சம்பவத்தை நன்கு விவரி த்துக் கூறும் திறமை இருந்தால் ஜனலிசம் ஒரு நல்ல தேர்வாகும். செய்தியாளராக சேர்பவர்களுக்கு குறைந்தது 15,000 மாதச் சம்பளம் வழங்கப்படுகிறது. அதன்பிறகு உங்கள் திறமைக் கேற்ற ஊதியம் பெறலாம்.

திரைப்படத் துறையில் ஆர்வமி ருப்பின், உதவி இயக்குநராக பணியாற்றலாம். அதன்பிறகு படிப்படியாக அந்த தொழிலில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொண்டு மூத்த இயக்குநர் மற்றும் படத்தை இயக்கும் அளவிற்கு வளரலாம். அதுமட்டுமல்லாமல், விளம்பரப் படங்கள் இயக் குதல், குறும்படங்கள் தயாரி த்தல் போன்றவற்றிலும் ஈடு பட லாம்.

ஏஜென்சிகளைத் துவக்கி பெரிய கம்பெனிகளுக்குத் தேவையான வற்றை உருவாக்கித் தருதல், தொலைக்காட்சி, இணையதளம், நாளிதழ்கள், வாரப் பத்திரி க்கைகள் போன்றவற் றிலும் ஏராள மான வேலை வாய்ப்புகள் உள்ளன. அனி மேஷன் துறையில் நீங்கள் அதிக திறமைமிக்கவர் களாக இருப்பின், அனி மேஷன் படங்களை உருவாக்குவதில் ஈடுபட லாம். நல்ல ஊதியம் பெறக் கூடிய துறையாக இது உள்ளது.

சாதாரண கல்வி நிலையங்களில் விஸ்காம் படிக்கும் மாணவர் களை விட, வடிமைப்பிற்கு என தனித்துவம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் படித்த மாணவர்களுக்கு பெரும்பாலும் நிர்வாகங்கள் முன்னுரிமை அளிக்கின்றன.

இளநிலை பாடப்பிரிவை முடித்ததும் வேலை தேடாமல், மேற் கொண்டு உங்கள் ஆர்வம் எதில் உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு அதில் சிறப்பு தேர்ச்சி பெறுங்கள். இது உங்கள் எதிர் காலத்திற்கு நல்ல அடித்தளமாக அமையும்.

கிரியேட்டிவ் துறையில் சிறந்த படிப்பினை அளிப்பதில் சென் னையில் உள்ள லயோலா கல்லூரி, பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரி, உமன்ஸ் கிறிஸ்டியன் கல்லூரி சென்னை, டெல்லியில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகம், கொச் சியில் உள்ள அம்ரிதா ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ், பாரதியார் யூனிவர்சிட்டி, சென்னை பல்கலைக்கழகம் ஆகியவை முன்னிலையில் உள்ளன.

( இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: