அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தவிர மற்ற கட்சிகள் எத்தனை
தொகுதிகளில் போட்டியி டுவது என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட போ திலும், எந்தெந்த தொகு திகளில் போட்டி யிடுவது என்பதில் சிக்கல் ஏற்ப ட்டது. இந்த சிக்கல்க ளுக்கு நேற்றிரவு ஒரே நாளில் தீர்வு காணப்பட் டது.

தோழமை கட்சி தலைவர் களை போயஸ்கார்டனில் உள்ள தன் வீட்டு க்கு வரவழைத்த ஜெய லலிதா, ஒவ்வொருவரிடமும் தனித் தனியாக பேசி சுமூக முடிவை எட்டச் செய்தார். விடிய, விடிய இந்த தொகுதி பங்கீடு நடந்தது. மராத்தான் மாதிரி நடந்த இந்த பேச்சுவார்த்தை அ.தி.மு.க. மட்டு மின்றி அதன் தோழமை கட்சிகளிடமும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா வீட்டுக்கு வந்த தோழமை கட்சித் தலைவர்கள் திரும்பிச் செல்லும் போது மகிழ்ச்சியுடன் சென்றதை காண முடிந்தது. முன்ன தாக நேற்று மாலை 5.30 மணிக்கு முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்கள் ராமகிருஷ்ணன், டி.கே.ரெங்கராஜன் வந்தனர். இரவு 7 மணிக்கு தே.மு.தி.க. தலைவர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் வந்தனர்.
7.35 மணிக்கு இந்திய கம்யூனிஸ்டு தலைவர்கள் தா.பாண்டியன், நல்லக்கண்ணு வந்தனர். இதற்கிடையே கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணி கழகம், குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை கட்சியினரும் போயஸ் கார்டனுக்கு வந்திருந்தனர். அவர்களுடன் ஜெயலலிதா தனித்தனியாக சந்தித்து சுமார் 5 மணி நேரம் பேச்சு நடத்தினார். அதில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டது.
இரவு 10.30 மணிக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், கூட்டணி கட்சி தலைவர்களும் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட தொடங்கினார்கள். மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல் லாஹ் மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பில் சேதுராமன், கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தனியரசு, குடியரசு கட்சி சார்பில் செ.கு. தமிழரசன், பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் கதிரவன் கையெழுத் திட்டனர்.
நள்ளிரவு 1 மணி வரை இது நீடித்தது. நள்ளிரவு 1.30 மணிக்கு இந்திய கம்யூனியூஸ்டு போட்டியிடும் 10 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டது. அந்த உடன்பாட்டில் ஜெயலலிதாவும், தா.பாண்டியனும் கையெழுத் திட்டனர். இதற்கிடையே இரவு 1 மணிக்கு புதிய தமிழகம் கட்சி தலை வர் டாக்டர் கிருஷ்ண சாமி பேச்சு நடத்த வந்தார். 2 மணி அளவில் அவரது கட்சிக்கு ஒட்டப்பிடாரம், நிலக்கோட்டை தொகுதிகளை கொடு க்க ஜெயலலிதா சம்மதித்தார்.
அதன் பிறகு உடன்பாட்டில் ஜெயலலிதாவும், டாக்டர் கிருஷ்ணசாமி யும் கையெழுத்திட்டனர்.இதற்கிடையே தே.மு.தி.க. தலைவர்களு டன் அ.தி.மு.க. தலைவர்கள் நடத்திய தொகுதி பங்கீடு பேச்சுவார்த் தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. குறிப்பிட்ட 4 தொகுதிகளில் போட் டியிட அ.தி.மு.க.-தே.மு.தி.க. இருதரப்பும் மிகவும் விரும்புவதால் அதில் மட்டும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
மீண்டும் சனிக்கிழமை பிற்பகலில் பேசிக் கொள்ளலாம் என்று கூறி விட்டு தே.மு.தி.க. தலைவர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் இரு வரும் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க.வுடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்தியாக உள்ளது. சனிக் கிழமை தொகுதிகள் தெரிந்துவிடும் என்றனர்.
இதையடுத்து அதிகாலை 3 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலை வர்களுடன் அ.தி.மு.க. தலைவர்கள் பேச்சுவார்த்தை தொடங்கினார் கள். அந்த பேச்சுவார்த்தை அதிகாலை 4.30 மணி வரை நீடித்தது. இறுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போட்டியிடும் 12 தொகுதிகள் தொடர்பாக இருதரப்புக்கும் சமரசம் ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாலை 5 மணிக்கு அந்த கட்சியுடனான உடன் பாட்டில் ஜெயலலிதாவும், ராமகிருஷ்ணனும் கையெழுத் திட்டனர். கூட்டணிக் கட்சிகளுடன் ஜெயலலிதா நடத்திய தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையும், உடன்பாடு கையெழுத்தும் சுமார் 12 மணி நேரம் நீடித் தது. தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு தலைவரும் இப்படி மராத்தான் பேச்சுவார்த்தை நடத்தியது இல்லை.
அ.தி.மு.க. நடத்திய சமரச பேச்சு, தமிழக அரசியலில் திடீர் மாற் றத்தை ஏற்படுத்தி உள்ளது. தே.மு.தி.க., ம.தி.மு.க. கட்சிகளுக்கான தொகுதிகள் மற்றும் உடன்பாடு இன்று மாலை நடைபெறும் என்று தெரியவந்துள்ளது. ஜெயலலிதாவின் இந்த சுமூக நடவடிக் கையால் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )