Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விண்வெளியில் கரும்பள்ளங்கள்….

1939ஆம் ஆண்டு ஓப்பன் ஹீமர் என்ற விஞ்ஞானி நியூட்ரான் விண் மீன்களைப் பற்றி ஆராய்ந்தார். அவரது கருத்துப்படி நம் சூரிய னை விட 3.2 மடங்கு அதிக நிறை உடைய ஒரு நியூட்ரான் விண் மீன், தன்னுடைய சொ ந்த ஈர்ப்பு விசையை எதிர்க்க முடியாமல், அதனுடைய நியூட்ரான் கள் உள்நோக்கி மேலும் சுருங் குகின்றன.

அப்போது ‘ஒருமைத் தன்மை’ (Singularity) என்ற ஒரு நிலையை அவை அடைகின்றன.

அதாவது அவை பருமன் (Volume) ஏதும் இல்லாமல், ஆனால் முடிவில்லாத (Infinite) ஒரு நிறையையும் அடர்த்தியையும் கொண்டிருக் கின்றன.

இது போன்ற ஒருமைத் தன்மையை அடைந்த நியூட்ரான் விண் ன் களின் மேற்புற ஈர்ப்பு விசை மிக மிக அதிகமாக இருப்பதால், அவற்றின் அருகில் இருக்கும் அல்லது அவற்றிற்கு அருகே வரும் எந்தப் பொருளையும் அவை தன்னுடன் ஈர்த்துக் கொள்கின்றன. ஒளியின் வேகம் எவ்வளவு என்று நமக்குத் தெரியும். (உலகில் உள்ள எந்தப் பொருளுமே ஒளியின் வேகத்தை மிஞ்ச முடியாது) ஒளி கூட இது போன்ற ஒருமைத் தன்மையில் தப்ப முடியாது.

ஒளியைக் கூட இவை தன்னோடு ஈர்த்துக் கொள்கின்றன. இது போன்ற பொருட்களை கரும் பள்ளங்கள் (Black Holes) என்று அழைக்கின்றனர்.

விண்வெளியில் காணப்படும் கரும்பள்ளங்களில் விழும் எதுவு மே அதிலிருந்து தப்ப முடிவதில்லை. கரும்பள்ளங்கள் என்பவை விண் மீன்கள் படு அடர்த்தியாக அமைந்திருக்கும் விண் பகுதி களிலேயே அதிகமாக உருவாக வாய்ப்புள்ளது. முக்கியமாக கால க்சிகளின் மையப் பகுதிகள் மற்றும் கோளக் கூட்டங்களின் மையப் பகுதிகள் போன்ற வற்றில் விண்மீன்கள் அடர்த்தியாகக் காணப்படுவதால், அங்கே கரும்பள்ளங்கள் இருக்கலாம் என நம்ப ப்படுகின்றன.

( இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: