Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தி.மு.க.,வின் சூப்பர் திட்டங்கள்: கிரைண்டர் அல்லது மிக்சி, இலவச பஸ்பாஸ், மாணவர்களுக்கு லேப்-டாப்

“இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, இலவச அரிசி, கல்லூரி மாணவர்களுக்கு, “லேப்-டாப்,’ மானியம், நெசவாளர்களுக் கான இலவச மின்சார அளவு அதிகரிப்பு, மூத்த குடிமக்க ளுக்கு இலவச பஸ் பாஸ், மாதம் 750 ரூபாய், உதவித் தொகைகள் உயர்வு’ என, தி.மு.க.,வின் தேர்தல் அறிக் கையில், பல்வேறு இலவச திட்டங் களை செயல்படுத்த உறுதி யளிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை, முதல்வர் கரு ணாநிதி நேற்று வெளியிட்டார். இதில், அனைவரும் எதிர்பார் த்தது போலவே, எல்லாமே இலவசம் எனும் வகையில், பல் வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, கடந்த தேர்தலில் இலவச, “கலர் டிவி’ கொடுத்த போதே, அடுத்த தேர்தலில் இலவச,” கிரைண்டர், மிக்சி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின்’ போன்றவை வழங்குவர் என, பலரும் கிண்டல் செய்தனர். அதை மெய்ப்பிக்கும் வகையில், தி.மு.க.,வின் தேர் தல் அறிக்கையில், பல்வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. ஏற்கனவே, தி.மு.க., அரசு, ரேஷன் கடைகளில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கி வருகிறது.இந்நிலையில், அந்த்யோதயா ரேஷன் கார்டு தாரர்களுக்கு, மாதம் தோறும், 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்ப டும் என, அறிவிக்கப் பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ள தாவது:

தாய்மார்களின் சிரமங்களை குறைக்க கிரைண்டர் அல்லது மிக்சி இலவசமாக வழங்கப்படும். பெண்களுக்கான திருமண நிதி உதவி தொகை, 25 ஆயிரத்தில் இருந்து, 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப் படும். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில், உதவி மானியம், 75 ஆயிரம் ரூபாய் என்பது, ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். கர்ப்பி ணிகளுக்கான நிதி உதவி, 6,000 ரூபா யிலிருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு இரண்டு, “செட்’ சீருடைகளுக்கு பதில், மூன்று, “செட்’ சீருடைகள். மூத்த குடிமக்களுக்கு, அரசு உள்ளூர் பஸ்களில் இல வச பஸ் பாஸ். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் இரண்டரை லட்சம் ரூபாய் கடன் உதவி, நான்கு லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டு அதில், இரண்டு லட்ச ரூபாய் மானியமாக வழங்கப் படும்.பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு மாதங்கள், மூன்றிலிருந்து நான்காக உயர்த்தப்படும். கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.ஏழை மீன வர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம், நகரங்களில் நடுத்தர மற் றும் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு குறைந்த வாடகையில், குடியிருப்பு திட்டம், உழவர்களுக்கு தேவையான இடு பொரு ட்களை, “உழவர் நண்பன் ஊர்திகள்’ மூலம், கிராமங்களுக்கே கொண்டு சென்று மானிய விலையில் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்படும்.

அத்துடன், வசூலிக்க இயலாத பண்ணை சாராத கடன், கடனுக் கான வட்டி படிப்படியாக தள்ளுபடி செய்யப்படும். இலவச மின் சாரம், தென்னை வளர்ப்பு, தோட்டக்கலை பயிர்களுக்கும் விரிவு படுத்தப்படும். முதியோருக்கான மாதந்திர உதவித் தொகை, 500லிருந்து, 750 ரூபாயாக உயர்த்தப்படும்.பொதுமக்களுக்கான சேவைகளை வழங்க வட்ட, கோட்ட அளவில் சேவை மைய ங்கள் ஏற்படுத்தப்படும். நெச வாளர்கள் கச்சாப் பொருட்களும், முதலீட்டு பொருட்களும் பெற, கூட்டுறவு கடன்கள் வழங்கப் படும். இவ்வாறு தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

என்னென்ன கிடைக்கும்? * ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, மானிய விலையில் மளிகைப் பொருட்கள்.

* கிராமங்களில் உழவர் சந்தை போல், நகரங்களில் காய்கறிகளை விற் க நுகர்வோர் சந்தை

*வயது முதிந்தவர்களுக்கு வீட்டுக்கு சென்று மாதம்தோறும் மருத் துவ சிகிச்சை.

* அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு மூன்று செட் சீருடை

* அரசு கல்லூரியில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர், பழ ங்குடியின மாணவர்களுக்கு, “லேப்டாப்’

*அனைத்து மாவட்டங்களிலும் பல்கலை, பொறியியல் கல்லூ ரிகள், நர்சிங் கல்லூரிகள்

*பொங்கல் பண்டிகையின்போது, கிராமங்களில் அரசு செலவில் விளையாட்டுப் போட்டிகள்

*கோவை, மதுரையில் மெட்ரோ ரயில்

*சென்னையிலிருந்து கோவை, மதுரை இடையே, “புல்லட்’ ரயில்

*முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகை 750 ரூபாயாக அதி கரிப்பு

*60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு பஸ்களில் இலவசமாக பயணி க்க பாஸ்

*2006-09ம் ஆண்டு வரை மாணவர்கள் பெற்ற கல்விக்கட னுக்கான வட்டி யை அரசே ஏற்கும்.

* மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நான்கு லட்ச ரூபாய் கடன். அதில் இரண்டு லட்ச ரூபாய் மானியம்

*கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின் சாரம்.

*மீனவர்களுக்கு நிதி தர புதிய காப்பீட்டுத் திட்டம்

* குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு அரசு பணியில் முன்னுரிமை

* கலைஞர் வீட்டு வசதி திட்ட மானியம் ஒரு லட்ச ரூபாயாக உய ர்வு

*”ஏழைகளுக்கு மாதம் 35 கிலோ அரிசி இலவசம்

*கர்ப்பிணிகளுக்கான உதவித்தொகை பத்தாயிரம் ரூபாயாக உயர்வு

*தாய்மார்கள் அனைவருக்கும் இலவச கிரைண்டர் வழங்கப் படும்.

அதனை விரும்பாதவர்களுக்கு மிக்சி

( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: