Sunday, October 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிறரை வசீகரிக்க என்ன செய்யவேண்டும்?

1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்த ன்மையானவர்கள். ஒவ் வொரு வர்களு க்கும் கொஞ்சம் தாழ் வு மனப்பா ன்மை, பிரச்சினைகள் இருக் கத்தான் செய்யும். அதனால் ஒப்பி ட்டுப் பார்ப் பதால் எந்தப் பய னும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உய ர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இரு க்கக் கற்றுக் கொள்ளுங்கள். அன் பால் உங்கள் முகம் பிரகாசம் அடை யும். அன்பே உங்கள் முகத்துக்கு அழ கைத் தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலை களைப் பரப்பவேண்டுமா? சிரியு ங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக் கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகர மானவர்களாக மாற்றும்.

4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள். உடல் சுகாதார மாக இருந் தால்தான் உற்சாகமாக இருக்க முடியும். உடலில் பொங்கும் வலிமை யும், சக்தியும் உங்களை சோர்வி ல்லாமல் இருக்க வைக்கும். சோர்வி ல்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்க ளை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவி லிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன் றவற்றில் இருப் பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்ப தைப் பார்க் கிறோம். முகம் அழகானவர்களை விட திறமை சாலிகள் கொடி கட்டி ப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திற மைகளை வளர்த்துக் கொ ண்டீர்கள். அது உங் களைச் சுற்றியுள்ளோ ருக்குத் தெரிய வேண்டுமே!! கல்லூ ரியில் நுழையும் முதல் வருடத் திலேயே திறமையை வெளி ப்படுத் துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகு வதை எல்லோரும் கண்டிருப் போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப் பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படு த்திக் கொள்ளாதீர்கள். எல்லோ ரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெரு ந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோ ருக்கு ம் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டு கொள்ளா தீர்கள். திறம்பட செய்ய முடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்க ளைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப் போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடி யாது.

10.பொறாமையை விட்டுத் தள்ளுங்கள். பிறருடைய திற மை, பணம், புகழ் ஆகிய வற்றைப் பார்த்துப் பொறா மைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்தி கரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத் திருப்தி உங்கள் முகப் பொலி வைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்த ள்ளு ங்கள். உங்கள் முக அமைப் பையோ, நிறத்தை, உயரத் தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொ ழியுங் கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகா  க்கும்.

12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக் கொள் ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply