பாம்-க்கும் பாம்புக்கும் அதிக வித்தியாசமில்லை. இரண்டுக்கும் அஞ்சாத கூட்டமேயில்லை! கட்டெறும் புகளுக்கு மத்தியில் கடலை மிட்டாயை வைத்த மாதிரி,ஒரே ஒரு மோனிகா. ஓயாத பாம்புகள் என்று இரண்டே வரியில் வர்ணித்துவிடலாம் நஞ்சு புரம் படத்தை.
ஆடு மேய்க்கிற மோனிகாவுக்கும் ராகவ் வுக்கும் காதல் வருகிறது. இதை சகித்துக் கொள்ள முடியாத பாம்பு ஒன்று வில்ல னாகிவிட, என்ன நடக் கிறது என்பது மீதி. தனியொரு பாம்புக்கு பிரச்சனை யென் றால் ஜகத் தினை அழித்திடுவோம் என்று மற்ற பாம்புகளும் கூடி விட திரையெ ல்லாம் ஒரே நெளிவு சுளிவுகள்தான் போங்க என்கிறார் மோனிகா.
படப்பிடிப்பில் பாம்புகளுடன் பழகியது ஒருபுறம் இருந்தாலும், தன் முகத்தில் கடித்த எறும்புகள் பற்றி முகம் சிவக்க பேசுகிறார் மோனி.
(மாங்கு மாங்குன்னு விழுந்து கடிச்சா முகம் சிவப்பாகாமல் வேறெ ன்ன செய்யுமாம்?) இவர் படப்பி டிப்புக்கு போயிருந்த மலை கிராமத்தில் ஏகப்பட்ட மா மரங்கள்.
காட்டுப்பாதை வழியாக மாட்டு வண்டி யில் போய் கொண்டிருந் தார் களாம் எல்லாரும்.
அந்த நேரத்தில் தன் முகத்தில் மோதிய மாமரக் கிளையையும் இலையையும் ஆசையாக பற்றி முகத்தருகே கொண்டு வந்து சுவாசித்தாராம் மோனிகா. அவ்வ ளவுதான். இலையில் கூடு கட்டியி ருந்த அத்தனை எறும்புகளும் நொடி நேரத்தில் இவரது முகத்தில் ஷிப்ட் ஆகிவிட்டது. ஆம்பளைங்க சிக்கினாலே அதிரி புதிரியா க்கிவிடும் எறும்புகள் மோனிகா கிடைத்தால் சும்மாயிருக்குமா?
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )