கிராபிகல் கால்குலேட்டர் ஒன்றைப் பயன்படுத்த விரும்புபவ ர்களுக்கு மைக்ரோசாப்ட் மேதமடிக்ஸ் 4 என்ற ஆட் ஆன் புரோ கிராம் உதவு கிறது. இதில் நாம் கணிதச் செயல்பாடுகளை (equations) அமைக்கையில், ஒவ்வொரு நிலையாக அவை எப்படி செயல்படு கின்றன எனக் காணலாம். இதனால், இச் செயல்பாடுகள் எப்படி கணக் கிடுதலை மேற்கொள்கின்றன என்பதைக் கண்டறி யலாம். இது கற்கின்ற மாண வர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
மேலும் இந்த கால்குலேட்டரில் பல ஈக்குவேஷன்கள் பதியப் பட்டே கிடைக்கின்றன. குறிப்பாக ஜியோமெட்ரி மற்றும் கெமிஸ் ட்ரி பாடங்க ளுக்கானவை நிறைய கிடைக்கின்றன. நம் தேவைக் கேற்ப செட் செய் திட real and complex numbers, degrees, radians அல்லது gradians, ஆகிய பிரிவுகள் உள்ளன. மேலும் நமக்கு எத்தனை டெசிமல் இலக்கத்தில் விடை வேண்டும் என்பத னையும் செட் செய்து கொள்ளலாம்.
Area, pressure, temperature, velocity, time மற்றும் length ஆகிய பிரிவுகளுக்கான அலகுகளை மாற்றிக் கொள்ளவும் வசதி தரப்ப ட்டுள்ளது. இந்த புரோகிராம் கைகளில் எழுதுவதனை ஏற்றுக் கொள்ளும் வகை யில் அமைக்கப்பட்டுள்ளதால், ஒர்க்ஷீட் ஏரியா வில் நாம் நேரடி யாகவே, ஈக்குவேஷன்களை எழுதி அமைக் கலாம்.
இந்த ஆட் ஆன் புரோகிராமினைப் பெற http://www.microsoft.com/downloads/en/details.aspx?FamilyID=9caca7225235401c8d3f9e242b79 4c3a என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று, இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். இதில் 32 மற்றும் 64 பிட்களுக்கென தனித்தனி புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன.
இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்