Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலை நேசி: நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின் முதல் படி

அழகு என்பது பார்ப்பவர் கண்களில் உள்ளது என்பது எவ்வளவு உண் மையோ அதே போல் நம் மனதிலும் உள்ளது. நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின் முதல் படி.

அதிக எடை இதற்கு முக்கி யமான எதிரியாகும் எங்கு பார்த்தாலும் எடை குறைப்பு பற்றிய பேச்சு, விளம்பர ங்கள், தொலைக்காட்சியும், திரை ப்படங்களும் தினமும் உயரமான, எடை குறைவுள்ள மாடல் களையும், நடிகர்களையும் பார்த்துப் பார்த்து, ஒல்லியாக இருப் பதே அழகு என்ற எண்ணம் நம் மனதில் வேறூன்றி விட் டது. முதலில் உங்கள் உடலை நேசிக்க கற்றுக் கொள்ளு ங்கள்.

ஆரோக்கியமான உணவு, ஓய்வு, தூக்கம், உடல் பயி ற்சி இவைகளால் உங்கள் உடல் நலன் கூடும். அத் தோடு உங்கள் தன்னம்பி க்கையும் அதிகரிக்கும். கீழே உள்ள குறிப் புகளை பின்பற்றி ஆரோக்கிய மான, அழகாக உள்ள உணர் வை, பெறலாம்.

உடலின் பராமரிப்பு:- நமது உடல்கூறு அதிசயமான உள்ளங்களை உள்ளடக்கியது இதை நல்ல முறையில், பேணி காப்பது நம் கட மை யாகும்.

உடலுக்கு சலுகைகள்:- உடலுக்கு அவ் வப்போது சலுகைகள் அவ சியம். மஸாஜ் செய்து கொள்வது, புதிய உடை வாங்குவது, மேனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்வது. இது போன்ற சலுகை களில் உங்களுக்கு தன்னம்பி க்கையும், உங்கள் உடலைப் பற்றிய நல்ல உணர்வும் ஏற்படும்.

உங்கள் தேவை:- உங்களுக்கு வாழ் வில் எது தேவை என்று முடி வெடு த்துக் கொள்ளுங்கள். மேற்கத்திய நாடு களில் பெண்கள் தங்கள் அழகை யும், உடலையும் பாதுகாப்பதில் தான் அதிகமான நேரத்தை செலவிடுகின்றனர்.

உங்கள் பழக்கங்கள்:- கண்ணாடி முன் நின்று 100 முறை உங்கள் மூக்கை பார்ப்பதற்கு பதிலாக வேறு வேலைகளில் கவனத்தை செலுத் தவும். உங்கள் மூக்கு மட்டுமே நீங்கள் என்ற எண்ணத்தை முதலில் விடவும்.

உண்மையை ஒத்துக் கொள்ளவும்:- ஐஸ்வர்யாராய் போல் தோன்ற வேண்டும் என்று எண்ணம் இருந் தால் அதை விட்டு விடுவது நல்லது. அவர் அவர் தான், நீங்கள் நீங்கள் தான். அவர் அழகு தான்; ஆனால் அவர் மட்டுமே அழகு என்று நினை ப்பது சரியல்ல.

சரியான பார்வை:- பட்டினி கிடந்து உடல் ஆரோக்கியத்தை கெடுத்துகொள்வது தான் அழகாக தோன்ற வழி என்று நினைப்பது தவறு. எது உங்களுக்கு சரி என்று முதலில் தீர்மானி க்கவும். தேவை யான உடல் பயிற்சி, சரியான உணவு இவை யெல்லாம் தான் அழகை மேம்படுத்தும்.

நீங்கள் தனி மனிதர் இல்லை:- இதே பிரச்சினை அதிகபட் சமான பெண்க ளுக்கு உண்டு என்பதை புரிந்துகொள்ளவும். இந்த பிரச்சி னையில் மூழ்காமல் இருப்பது உங்களை கையில் உள்ளது. எது அழகு, யார் சிறந்தவர் என்று மற்றவர் சொல்வதை நம்பாதீர்கள். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பதை மறந்து விடா தீர்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: