Sunday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருமணம் ஆனவரா நீங்கள்? – கட்டிப் போடும் `கட்டிப்பிடி வைத்தியம்’ (திருமணம் ஆனவர்களுக்கு மட்டும்)

திருமணம் ஆனவரா நீங்கள்? வாழ்க்கையில் உற்சாகமே இல்லையா? என்னத்த சம்பாதி ச்சு, என்னத்த வாழ்ந்து… என்று அடிக்கடி புலம்புகிறீர் களா? கவலையே வேண் டாம். இந்த சின்ன ட்ரீட் மென்ட் மட்டும் போதும். எல்லா பிரச்சினை களும் போயே போச்சு!

அது என்ன ட்ரீட்மென்ட்? கட்டி ப்பிடி வைத் தியம் தாங்க அது. கணவன்-மனைவிக்குள் இந்த கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ராப்ளம் என்கிறது ஒரு ஆய்வு. அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு தடவையாவது கணவன்-மனைவியர் கட்டிப் பிடிக்க வேண்டுமாம். அவ்வாறு கட்டிப்பிடி வைத்தியம் செய்யும் போது `இச்` மழை பொழிய வேண்டுமாம்.

அப்போது தான் அந்த வைத்தியத்திற்கு `பவர்’ இருக்குமாம். இப்படி கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்களை அள்ளித்தருகிறது அந்த ஆய்வு. அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 5 ஆயிரம் தம்பதிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆய்வில் பங்கேற்ற தம்பதிகளிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே, நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக, மிகவும் மகிழ்ச் சியாக இருக்கிறீர்கள் என்பது தான்!

எல்லோரும் மளமளவென்று கருத்துக்களை கொட்டினர். சில தம்பதியர் கூறியதை கேட்டு, கேள்வி கேட்டவர்களே கிளுகிளுப் பாகிவிட்டனர். அந்த அளவுக்கு `ஓபனாக’ பதில் கூறிவிட்டனர் அந்த தம்பதியினர். அனைத்து தம்பதியர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு, கூட்டிக்கழித்துப் பார்க்கும்போது பல சுவையான தகவல்கள் கிடைத்தன.

கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தின மும் கட்டிப்பிடிக்க வேண் டுமாம். ஒரு நாளைக்கு குறை ந்தது 4 தடவையாவது அவ் வாறு செய்ய வேண் டுமாம். விருப்பம் இருந்தால் கணக்கு வழக்கின்றி கட்டிப் பிடிக் கலா மாம். வீட்டில் சும் மா இருக்கு ம்போது கட்டிப்பிடித்துக் கொண்டே இருந்தால் `போர்’ அடித்து விடுமாம்.

அதனால், வீட்டை விட்டு புறப்படும்போதோ அல்லது வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்போதே துணையை கட்டிப்பிடித்து முத்த மிட வேண்டுமாம். கட்டிப்பிடி வைத்தியத்தோடு, பொழுது போ க்கு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டுமாம். போ வோமா ஊர்கோலம் என்று அடிக்கடி வெளியிடங்களுக்கு ஜோடியாக `விசிட்’ அடித்தால் வாழ்க்கையில் இன்னும் கொஞ் சம் `கிக்` இருக்குமாம்.

ஒரு மாதத்தில் 7 மாலை நேரங்களில் கணவன்-மனைவியர் ஒன்றாக பொழுதை போக்க வேண்டுமாம். அதில், 2 வேளை களில் வெளியே டின்னர் சாப்பிட வேண்டுமாம். மாதத்திற்கு 2 முறை காதல் உணர்வுடன் கணவன்-மனைவி இருவரும் வெளி யே செல்ல வேண்டுமாம். அவர்கள் செல்லும் இடம் இயற்கை எழில் மிகுந்த தனிமையான இடமாக இருக்க வேண்டியது அவ சியமாம்.

அந்த இடத்தில் காலாற நடந்து செல்வதுடன், அவ்வப்போது செல்லமாக துணையை கிள்ளி கிச்சுக்கிச்சு மூட்ட வேண்டுமாம். இப்படி பார்ட் டைமாக மட்டும் வெளியே செல்வது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என எல்லோரையும் ஓரம்கட்டிவிட்டு மாதத்திற்கு ஒரு நாளாவது கணவன்-மனைவி இருவரும் வெளியே ஊர் சுற்ற போக வேண் டுமாம்.

அப்போது ஓட்டலுக்கு சென்று பிடித்த உணவு அயிட்டங்களை ஒரு வெட்டு வெட்ட வேண்டுமாம். சாப்பிட்டு முடித்ததும், பிடித்த தியேட்டரில் பிடித்த படத்தை பார்க்க வேண்டுமாம். மேலும், மாதத்திற்கு ஒரு முறை கணவன் தனது மனைவிக்கு ஏதாவது ஒரு கிப்ட் வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டுமாம். பெரிய அளவில் கிப்ட் கொடுக்க முடியாவிட்டாலும், பூச்செண் டாவது வாங்கிக் கொடுக்க வேண்டுமாம்.

– இப்படி தகவல்களை கொட்டி இருக்கிறார்கள் அந்த தம்பதி யர்கள். இவ்வாறு வாழ்க்கையை வாழ்ந்தால் திருமண வாழ்க் கையில் பிரச்சினை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அந்த திருமண வாழ்க்கை ஆனந்தமாக இனிக்கும் என்று இறுதியாக தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள், ஆய்வு நடத்தியவர்கள். என்ன தம்பதியரே… நீங்களும் இப்படித் தானே வாழப்போறீங்க? அது சரி… கட்டிப்பிடி வைத்தியத்தை மட்டும் மறந்துவிட மாட்டீ ங்களே….

இணையத்தில் இருந்ததை இமயத்தில் வைக்கிறோம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: