Sunday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முத்தம்: சுவாரஸ்யத் தகவல்கள்: பெண்களின் முத்தம் பற்றி …

அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலை கீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட் டார்கள்.

இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொ ண்டுதான் இருக்கிறது. நியூயார்க் பல்கலை க்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத் திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை :

* பெண்களை பொறுத்தவரை, அவர்கள் தங்கள் இணை உடனான முத் தங்களை வாழ்க்கை யில் ஒரு அங்கமாக கருதுகி றார் கள்.

* தங்களது அன்பையும், மகி ழ்ச்சியையும் முத்த த்தின் மூலமே பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும் புகின்றனர் அல்லது பகிர்ந்து கொள்கி ன்றனர்.

* தம்பதிகள் இடையேயான நீண்டகால உறவு பலமாக இருப் பதற்கு அவர்களுக்குள் நடை பெறும் முத்த பரிமாற்றமும் ஒரு முக்கிய காரணம். செல் போனில் நீண்டநேரம் பேச அடிக்கடி சார்ஜ் செய்வது போல், தம்பதியர் இடையே இணக்கமான உறவு இருக்க வேண்டுமானால் அவர்களும் அடிக்கடி முத்தம் கொடுத்துக் கொள்ள வேண்டும்.

* முத்தத்திற்கு பெண்கள் கொடுக் கும் முக்கியத்துவத்தை ஆண் கள் கொடுபதில்லை. திருமண த்திற்கு முன்பு காதலியிடம் முத்தத்தை பெற துடிக்கும் அவர்கள், திருமண த்திற்கு பிறகு, மனைவியே முத்தம் கொடுக்க தேடி வந்தாலும் கூட வேண்டா வெறு ப்பாகத்தான் அதை ஏற்றுக் கொள்கிறார்களாம்.

* ஆண்களை பொறுத்தவரை, செக் ஸ் உறவின்போது பயன் படுத்த தேவையான சாவியாக மட்டுமே முத்தத்தை கருதுகிறார் களாம்.

* ஆண்கள், தங்கள் துணைக்கு முத் தம் கொடுக்க முன் வந்தால், அவர்களது எதிர்பார்ப்பு அவளுடன் செக்ஸ் உறவு வைக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. மற்ற மகிழ்ச்சியான தருணங்களில் அவர்கள் முத்த த்தை துணையுடன் பரிமாறிக் கொள்ள பெரும் பாலும் தவறி விடுகிறார் களாம்.

*முத்தம் விஷயத்தில் ஆண் கள் தேமே… என்று ஒரு புறம் இருக்க… இந்த முத்த இன்பத் தை அணுஅணுவாய் ரசிப்ப திலும் கொடுப்பதிலும் பெண் கள்தான் `டாப்.’

* ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல், முத்தம் கொடுப்பதும் நாள டைவில் ஆண்களுக்கு சலி த்து போய் விடுகிற தாம். ஆனால், பெண் கள் மட்டும் அதற்கு நேர் எதிராக இருக் கிறார்கள். முத்தத்தை புத்துணர்வு தரும் விஷய மாக அவர்கள் கருதுவது தான் அதற்கு காரணம்.

* தாம்பத்ய உறவின் போது ஒரு ஆண் நினைத்தால், துணையை முத்தமிடாமலேயே உறவை வெற்றி கரமாக முடித்துக் கொள்ள முடியுமாம். ஆனால், பெண்களால் அது முடியாதாம். அவர்கள், முத்தம் கொடுக்கக்கூடாது என்று உறுதியாக முடிவெடுத்து உற வில் ஈடுபட்டால்கூட, அதை மறந்து தங்களை அறியாமல் துணைக்கு முத்த மிட்டு விடுவார்களாம்.

* தாம்பத்ய உறவில், தன் துணையை பலவாறு முத்தமிடுவதன் மூல மே அந்த உறவில் ஒரு திருப்தியான நிறைவை பெறுகிறாளாம். – இப்படி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அள்ளித் தந்து இருக்கிறது, இந்த அமெரிக்க ஆய்வு. ஆனால், நம் பெண்கள் எப்படி…? அவர்களின் ஆழ்மனத்திற்கு மட்டுமே அது வெளிச்சம்!

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: