Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தலைவர்கள் சுற்றுப்பயணம்: வேட்பாளர்கள் தீவிர ஓட்டுவேட்டை : தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது;

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முக்கிய தலைவ ர்கள் உள்பட பெரும் பாலான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து விட்டனர். நாளை யுடன் மனு தாக்கல் முடிவடைகிறது.   காங் கிரஸ் கட்சியின் 3 தொகு திகள் தவிர அனைத்து கட்சிக ளுக்கும் வேட்பா ளர்கள் அறிவிக்கப்பட்டு விட் டனர். வேட்பாள ர்கள் அனைவரும் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டு வருகி றார்கள்.
தலைவர்களும் ஊர் ஊராகச் சென்று பிரசாரம் தொடங்கிவிட் டார்கள். தொண்டர்கள் வீடு வீடாக சென்று தாங்கள் கட்சிக்கு ஆதரவு திரட்டுகிறார்கள். எனவே, தேர்தல் கமிஷன் கெடுபிடி களால் முடங்கி கிடந்த பிரசாரம் இப்போது சூடுபிடித்திருக்கிறது.   முதல்-அமைச்சர் கருணா நிதி நேற்று முன்தினம் திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கினார். தங்கபாலு, ராமதாஸ், திருமாவ ளவன், காதர்மைதீன், பெஸ்ட் ராம சாமி, ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களும் அந்த கூட்டத்தில் பேசினா ர்கள்.
நேற்று காலை மனுதாக்கல் செய்த முதல்-அமைச்சர் கருணாநிதி திருவாரூரில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் தேர்தல் பிரசாரம் செய்தார். இரவு தஞ்சையில் நடந்த பிரமாண்ட கூட்ட த்தில் பேசினார். இன்று திருச்சியில் பிரசாரம் செய்கிறார். இரவு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். இதனால் தி.மு.க. மற்றும் கூட்டணி தொண் டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெய லலிதா நேற்று திருச்சியில் மனு தாக்கல் செய்து விட்டு, ஸ்ரீ ரங்கம் தொகுதியில் வீதி வீதி யாக சென்று பிரசாரம் செய்தார். இன்றும், நாளையும் திருச் சியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்கிறார்.
27-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசாரத்தை தொடரு கிறார். ஏப்ரல் 11-ந் தேதி வரை மொத்தம் 18 நாட்கள் பிரசாரம் செய்கிறார். தமிழ்நாடு முழுவதும் ஜெயலலிதா பிரசார சுற்று ப்பயணம் செய் வதால் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி யினர் சுறுசுறுப்பு அடைந் துள்ளனர்.   துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று புதுக்கோட்டையில் பிரசாரத்தை தொடங் கினார்.
இன்று சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். தொட ர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் திறந்த வேனில் சென்று வேட்பாளர் களுக்கு ஆதரவு திரட்டுகிறார். கனிமொழி எம்.பி., திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நடிகர்கள் வடிவேலு, வாகை சந்திர சேகரன், குமரிமுத்து நடிகை குஷ்பு, மத்திய மந்திரிகள் நெப்போலியன், ஜெகத்ரட்சகன், தமிழக அமைச்சர்கள் உள்பட பலர் தி.மு.க. கூட்டணிக்கு பிரசாரம் செய்கிறார்கள். மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களும் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்கிறார்கள்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று மனு தாக்கல் செய்து விட்டு பிரசாரத்தை தொடங்கினார். நேற்று திருக்கோவிலூரில் பிரசாரம் செய்தார். இன்று செஞ்சி பகுதியிலும், நாளை கொள த்தூர் பகுதியிலும் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து தமிழ்நாடு முழு வதும் பிரசாரத் துக்காக சுற்றுப் பயணம் செய்கிறார். இதே போல், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூ னிஸ்டு செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் தா.பாண்டியன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மனிதநேயமக்கள் கட்சி ஒருங்கிணைப் பாளர் ஜவா ஹிருல்லா மற்றும் அ.தி.மு.க. கூட்டணி தலை வர்களும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
தமிழக பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்ட தலைவர் கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். பாராளுமன்ற பா.ஜனதா தலைவர் சுஷ்மா சுவாஜூம் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இது தவிர சிறிய கட்சி தலை வர்களும் பிரசாரத்தில் குதித் துள்ளனர். இதனால் தமிழக தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.
( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: