Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

2 வினாடியில் காய்ந்துவிடும் அழியாத `மை’ ; தலைமை தேர்தல் அதிகாரி

வாக்காளர் கைவிரலில் வைத்த 2 வினாடியில் காய்ந்துவிடும் அழியாத மை மைசூரில் இருந்து வந்துவிட்டது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். தமிழக சட்ட   மன்ற தேர்தலையொட்டி ஒருபக்கம் கட்சி களிடையே சுறுசுறுப்பு அதிகரித் துள்ளது.
மறுபக்கம் பணம், பரிசுப் பொரு ட்கள், மதுபானம் கொடுத்து வாக் காளர்களை கவர்வதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடி க்கையில் இறங்கியுள்ளது. அண் ணா, காமராஜர், ராஜீவ்காந்தி, எம்.ஜி. ஆர். சிலைகளை தேர்தல் முடியும் வரை மூட வேண்டும் என்பது போன்ற கிடுக்கிப்பிடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியதாவது:-
இறந்த தலைவர்களின் சிலைகளைத்தான் மூடி வைக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உயிருடன் இருக்கும் தலை வர்களின் சிலைகளை மூடத்தேவையில்லை. வாகன சோதனையால் வணி கர்கள் பாதிக்கப்படுவதாக புகார் வந்து ள்ளது.
வியாபாரிகள் கோரிக்கை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக் கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் பிறப் பிக்கும் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும்.
ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து செல்பவர்கள், வங்கியில் இருந்து எடுத்து வநததற்கான ரசீது, பணம் செலுத் தியிருந்தால் அதற்கான ரசீது, சம்பளம் போடுவதற்காக பணம் எடுத்துச்சென்றால் சம்பள பட்டியல், வர்த்தகத்திற்காக இருந் தால் அதற்கான ஆவணம் போன்றவற்றை வைத்திருக்க வே ண்டும்.
பணம் எடுத்து செல்பவர்கள் எந்தெந்த ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும் என்று பட்டியலிட்டு கூற முடியாது.   இந்த தேர்தலில் ஓட்டு ப்பதிவின்போது, வாக்காளர் கைவிரலில் வைக்கப்படும் அழியாத மை மைசூரில் இருந்து வந்து சேர்ந் துள்ளது. ஓட்டுப் போடுவதற்காக வாக்கு ச்சாவடியில் நுழையும்  போது முதலில் இருக்கும் அதிகாரி, வாக்காளர் கைவிரலில் மை இடுவார்.
அடுத்து இருப்பவர் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, வாக்கா ளரிடம் கையெழுத்து வாங்குவார். மூன்றாவதாக இருப்பவர், வாக்காளர்கள் கையில் மை இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, மின்னணு வாக்கு ப்பதிவு எந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு யூனி ட்டை இயக்குவார்.
அதன்பின்னர்தான் ஓட்டுப் போட முடியும். இந்த நடைமுறைகள் முடி வதற்கு சில நிமிடங்கள் வரை ஆகும். ஆனால், கைவிரலில் இடப்படும் மை, இரண்டே வினாடிகளில் காய்ந்துவிடும். அதன் பிறகு அந்த மையை அழிக்கவே முடியாது.   கட்சி தலைவர்கள், நடிகர், நடிகைகள், பிரபலங்கள், முக்கியப் பிரமுகர் போன் றவர்கள் குறிப்பிட்ட கட்சி வேட்பாளருக்காக பிரசாரம் செய் வார்கள்.
தேர்தல் ஆணையம் உத்தரவுப்படி, அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசி யல் கட்சிக்கு அதிகபட்சமாக 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு (ஸ்டார் கேம்பைனர்ஸ்) வாகன பாஸ் வழங்கப்படும். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள தே.மு.தி.க., கொங்குநாடு முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளின் நட்சத்திர பேச் சாளர்கள் 20 பேருக்கு மட்டும் வாகன பாஸ் கொடுக்கப்படும்.
அந்த பாஸ் வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த வாகன பாஸைக் கொண்டு மாநிலம் முழுவதும் பிரசாரத்திற்கு செல்ல லாம். அதுபோல மாவட்டத்தில் பிரசாரம் செய்வதற்கான வாகன பாஸ்களை மாவட்ட கலெக்டர் வழங்குவார். அந்த பாஸ் என்ன கலரில் இருக்க வேண்டும் என்பதை கலெக்டரே முடிவு செய்வார்.
தொகுதியில் பிரசாரம் செய்யும் வாகனங்களுக்கான பாஸ், அந்தந்த தொகுதி தேர்தல் அதிகாரியால் வழங்கப்படும். இந்த மூன்று வகை யான வாகன பாஸ்களும் மூன்று வண்ணத்தில் இருக்கும். அதனால் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
கட்சி தலைவர்கள், கட்சிகள் அறிவிக்கும் நட்சத்திரப் பேச்சா ளர்கள் ரெயில், பஸ், ஹெலிகாப்டர், விமானம் என எதில் வந் தாலும் அந்த செலவு வேட்பாளர்களின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படமாட்டாது. ஆனால், வேட்பாளர் தனிப்பட்ட முறை யில் நடிகர், நடிகை, நண்பர்கள் போன்றவர்களை பிரசாரத்துக்கு அழைத்து வந்தால் அந்த செலவு வேட்பாளர் செலவில் சேர்க் கப்படும்.
வாக்குச்சாவடியில் பணியாற்றும் தேர்தல் அதிகாரிகள், வாக் குப்பதிவு அலுவலர்கள், போலீஸ்காரர்கள் கம்ப்யூட்டர் மூலம் குத்துமதிப்பாக (ரேண்டம் செக்) தேர்வு செய்யப் படுவார்கள். முதலில் யார், யார் என்ன பணி என்பது தேர்வு செய்யப்படும்.
அதன்பிறகு எந்த தொகுதி என்பது முடிவாகும். தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு யார், எந்த வாக்குச்சாவடியில் பணியாற்றப் போகிறார் என்பது தேர்வு செய்யப்படும். இதனால் கட்சிக் காரர்களுக்கு வேண்டியவர்களோ, அதிகாரிகளுக்கு வேண்டி யவர்களோ வாக்குச் சாவடிகளில் நியமிக்கப்படுவது முற்றி லுமாக தடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் சுமார் 3 லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுவார்கள்.   அமைச்சர் கே.பி.பி.சாமி வீட்டு முன்பு பணம் கொடுக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து, அங்கு பறக்கும் படை விரைந்தது. ஆனால், அங்கு பணம் எதுவும் விநியோகிக் கப்படவில்லை.
பணம், பொருட்கள் எதையும் வாக்காளர்களுக்கு கொடுக்க க்கூடாது என்று அந்த பகுதியில் இருந்தவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளின் சின்னங்களை தவிர, பதிவு செய்யப்பட்டுள்ள கட்சி களுக்காகவும், சுயேச்சை வேட் பாளர் களுக்காகவும் தேர்தல் ஆணையம் 53 சின்னங்களை ஒதுக்  கியுள்ளது. இவைதவிர வேறு புதிதாக சின்னங்கள் எதுவும் இந்த தேர்தலில் ஒதுக் கப்படவில்லை. இவ்வாறு பிரவீண்குமார் கூறினார்.
( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: