Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

`கற்றுக்கொள்ளவும்’, பிரச்சி னைகளைக் கண்டறியவும், `சிந்தித்து’ச் செயல்படும் விண்கலம்

இன்று உலகின் முன்னணி நாடுகள் பலவும் விண்கலங்களை விண் வெளிக்கு அனுப்பி வருகி ன்றன. ஆனால் அந்த விண்கலங் களில் ஏதேனும் பிரச்சினை, கோ ளாறு ஏற்பட்டால் அவற்றைச் சரி செய்யக் கஷ்டப்பட வேண்டியிரு க்கிறது. இந்நிலையில், மனிதர் களைப் போல `சிந்தித்து’ச் செய ல்படும் விண்கலத்தை விஞ்ஞா னிகள் வடிவமைத்து வருகிறார் கள்.

`2001: எ ஸ்பேஸ் ஒடிசி’ படத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கண்டுபிடிப்பாகும் இது. அந்தப் படத்தில், செயற்கை அறிவுடன் செயல்படும் விண்கல கணினி, விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர் களைக் கொல்ல முடிவெடுப்பதாக வரும்.

இங்கிலாந்து விண்வெளிப் பொறியாளர்கள், ஐரோப்பிய விண் வெளி நிறுவனத்தின் ஆதரவுடன், செயற்கைக்கோள்களில் பயன்படுத்தக் கூடிய கட்டுப்பாட்டு அமைப்புகள், தானியங்கி ஆய்வு வாகனங் களுடன், தம்மைச் சுயமாகக் கட்டுப் படுத்திக் கொள்ளக்கூடிய விண் கலங்களையும் உருவாக்கி வருகிறார்கள்.

இந்த அதிநவீன விண்கலங்களால், `கற்றுக்கொள்ளவும்’, பிரச்சி னைகளைக் கண்டறியவும், பயணத்தின்போது தேவையான மாறுதல் களைச் செய்துகொள்ளவும், தாமே பழுது பார்த்துக் கொள்ளவும், ஒரு நடவடிக்கையை மேற்கொள்வது எந்தளவு நல்லது என்று முடிவெடு க்கவும் முடியும்.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, தனது தானியங்கி போக்கு வரத்து வாகனம் மூலம் விநியோகத்தை மேற்கொள்ளும் நடவடிக் கையில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஈடுபட்டது. அப்போது மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தன.

`ஏடிவி2′ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தத் தானியங்கி வாகனத்தை விண்வெளி நிறுவனமான ஆட்ரியம் உருவாக் கியுள்ளது. இந்த வாகனம், முன்னதாக `புரோக்கிராம்’ செய் யப்பட்ட வழித் தடத்தின்படி விண்வெளிப் பயணத்தை மேற் கொள்ளும். இதில் பல `சென்சார்களும்’, மோதலைத் தடுக்கும் அமைப்புகளும் இருப்பதால், பாதுகாப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்துடன் போய் இணை யும்.

மனிதர்களைப் பாதுகாப்பாக விண்வெளிக்குக் கொண்டுபோய், திருப்பிக் கொண்டு வரக்கூடிய முதலாவது விண்கலத்தையும் உருவாக்கப் போவதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: