Thursday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இளமைக்கு வேண்டிய 3 விஷயங்கள்

என்ன சாப்பிடுகிறீர்கள்?

நமக்குத் தெரிந்தது சாதம்தான். அதை மட்டுமே உணவு என்கிறோம்.  வயிறு நிரம்ப சாப்பிடுகிறோம். இது தவறு. நமது உணவை மூன்று பாகங் களாகப் பிரித்துக்கொள்ள வேண்டும்.

சாதம் போன்றவை ஒரு பாகம் இருந் தால் மற்றொரு பாகம் காய்கறிகள் இரு க்க வேண்டும். இன்னொரு பாகம் புரதச்சத்து தரும் சோயாபீன்ஸ், பருப்பு வகைகள், தயிர் போன்றவை இருக்க வேண்டும்.

நாம் இளமையாக இருக்க இது போன்ற உணவுப் பழக்கம் ரொம்ப முக்கியம். வெறும் அரிசி சாதம், சப்பா த்தி போன்றவைகளைச் சாப்பிடுவதால் கார்போ ஹைட்ரேட்டுகள்தான் உடலில் சேர்கிறது. மற்ற விஷயங்கள் சேருவதி ல்லை.

காய்கறிகளிலும் பழங்களிலும் வயோதி கத்தைக் குறைக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்டுகள் நிறைய இருக்கி ன்றன. அவை நம் உடலை இளமையாக வைத்துக்கொள்ள உதவுகி ன்றன. அதே போல் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. கொஞ்சமாய்ச் சாப்பி  ட்டாலே போதும்.

2. உடற்பயிற்சி கட்டாயம்:

நம் உடல் அழகாக இருக்க வே ண்டும். என்று ஆர்வப்படும் அள வுக்கு அதற்காக நாம் சிரத் தை எடுத்துக் கொள்வதி ல்லை. தின ம் உடற்பயிற்சி செய்ய வே ண்டும் என்றால் அதை ஏதோ ஒரு பெரிய வேலையாக பலர் கருதுகிறார்கள்.

அவர்கள் உடல் இளமையாக இருக்காது. ஒரு நாளில் இருக் கும் இருபத்து நான்கு மணி நேர த்தில் அரைமணி நேரம் கட்டாயம் எக்சர்சைஸ் செய்ய வே ண்டும். உடலுக்கு மிதமான வியர்வை வரும்வரை பயிற் சிகள் செய்யலாம்.

வீட்டிலேயே ஸ்கிப்பிங் போன்ற பயிற்சிகளைச் செய்யலாம். முதல் இரண்டு நாள் செய்வதற்குத் தயக்கமாக இருக்கும். இர ண்டு மூன்று நாட்களைத் தாண்டிவிட்டீர்கள் என்றால் உங்க ளுக்கே உடற்பயிற்சியின் மீது பிடிப்பு வந்துவிடும். புத்துணர்ச் சியுடன் செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள்.

3. மனசையும் கவனியுங்கள்:

இளமைக்கு அடிப்படை யான விஷயம் மனசு. அது சந்தோ ஷமா  இருக்கணும். மனசு சரி யில்லைன்னா எதைச் செஞ் சாலும் இள மை வராது. உட லில் ஒரு களைப்புத் தெரியும். முதி ர்வு வந்திடும். ஆனா நம க்கு இப்ப இருக்கிற சூழல்ல மனசை எப்பவும் சந்தோ ஷமா வச்சிக்கிறது ரொம்பக் கஷ்டமான விஷயம். அதுக்கு நமக்கு உதவுறது தியானம்.

தினம் அரைமணி நேரம் தியானம் பண்ணுங்க. தியானம்னதும் அது ஏதோ சாமியார்கள் செய்யற விஷயம்னு நிறையப்பேர் நினைச்சிட்டு இருக்காங்க. அப்படியில்லை. காலையில் எழுந்த தும் கண்ணை மூடி உட்கார்ந்து முன்தினம் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி யோசித்துப் பார் ப்பதுகூடத் தியானம்தான்.

தியானம் செய்வதால் நம் உடலில் ரத்த ஓட்டம் சீரடைகிறது. நமக்கு இளமையைக் கொடுக்கிற மெலோடோனின்ங்கிற ஹார் மோன் அதிக மா சுரக்குது. இந்த விஷயங்கள் எல்லாம் படிக்கும் போது கஷ்டம் மா திரி தோணலாம்.உண்மையில அத்தனை கஷ்டம் இல்ல. தேவை கொஞ்சம் முயற்சிதான்.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: