Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நினைவுகளைத் தாங்கி நிற்கும் டிஜிட்டல்

நம் வாழ்க்கையின் அனைத்துப் பிரிவுகளும் டிஜிட்டலாகி வருகி ன்றன. நினைவுகளைத் தாங்கி நிற்கும் படங் கள், போட்டோக்கள் ஆகி யன இதில் முதலிடம் பெறு கின்றன. இவற்றை டிஜிட்ட லாக்குவது மிக எளிமை யான ஒரு பணி யாகக் கம்ப்யூட்டர் மூலம் நிறை வேறி வருகிறது. முன்பெல் லாம் சித்திர ங்கள் வரை யப்பட்டு அதில் சிருங்கார வேலைகள் மேற் கொள்ளப்பட்டன. இப்போது டிஜிட்டல் பைல்களாக படங்கள் எடுக்கப்பட்டு, அவற் றை நம் விருப்பங்களுக்கேற்ப நகாசு வேலைகளை மேற் கொள்கிறோம். படங்களையே மாற்றி அமை க்கிறோம். இந்த போக்கின் அடிப் படை வசதிகளை இங்கு காண லாம்.

முதலில் கம்ப்யூட்டரில் படங்கள் எந்த எந்த பார்மட்களில் உருவாக்கப்படுகின் றன என்று பார்க்கலாம்.

1. பி.எம்.பி. (BMP Bit Map) பைல் பார்ம ட்டாகும். இது முன்னாலேயே வரை யறை செய்யப்பட்ட வகையில் உருவாக் கப்படும் பார்மட். இந்த வகையிலான பார்மட் படம் எப்படி டிஸ்பிளே செய்யப்படுகிறது என்பதன் அடிப் படையில் அல்லா மல், படத்திற்கேற்ற வகையில் பிக்ஸெல் மற்றும் கலர் ஆழம் அமைக்கப்படுகிறது. இதனால் பல்வேறு தன்மைகளில் இது உருவாகிறது. இதன் அனுகூலம் என்ன வென்றால் இதனைப் பல சாப்ட்வேர் தொகுப்புகளில் நம் விருப் பப்படி பயன்படுத்தலாம்.

2. JPG (Joint Photographic Expert Group) என்பது இரண்டாவது வகை. கிராபிக் டேட்டா மற்றும் படங்களை டிஜிட்டல் நெட் வொர்க்குகளில் பரிமாறுவதை முதன்மை நோக்கமாகக் கொ ண்டு வடிவமைக்கப்பட்ட பார்மட். இதற்கு முந்தைய பி.எம். பி. மற்றும் டிப் (TIFF) ஆகிய பார்மட்டில் அமைந்த படங்கள் கொண்ட பைல்களை கம்ப்ரஸ் செய்திடுகையில் டேட்டாவை சிறிது இழக்க நேரிடும். ஆனால் ஜேபெக் பைல் பார்மட்டில் இழப்பு ஏற்படாது. எனவே நெட்வொர்க்கிங்கில் பைல் பரிமாற்றத் திற்கு மிக மிக ஏற்ற பார்மட்டாக இன்றும் இது கருதப்படுகிறது. ஜேபெக் இமேஜ்களை மீண்டும் மேம்படுத்த முடியாது.

3. GIF (Graphics Image Format): Compuserv Inc நிறுவனத்தால் இன்டர்நெட் தளங்களை மையப்படுத்தி அமைக்கப்பட்ட பார்மட். படங்களை இன்டர்நெட் தளங்களில் புகுத்துவதற்கு படங்கள் இந்த பார்மட்டில் இருப்பது வேலையை எளிதாக்கும். இதனை கம்ப் ரெஸ் செய்திடுகையிலும் டேட்டா இழப்பு நேரிடாது. பெரிய அளவிலான இமேஜ் பைல்களுக்கு இந்த பார்மட் உகந்தது.

4. PCX பார்மட்: பயன்படுத்த மிகவும் வகையான இமேஜ் பார்மட். முதலில் டாஸ் இயக்கத்தில் இயங்கிய பி.சி. பெயிண்ட் பிரஷ் என்னும் சாப்ட்வேர் தொகுப்புக்கென இந்த பார்மட் உருவானது. பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதன் உரிமையை வாங்கி விண்டோஸ் சாப்ட்வேர்களுக்கும் இதனை மாற்றியது. கிராபிக் டேட்டாவை பாதுகாத்து வைத்திடவும் டெஸ்க்டாப் பப்ளிஷிங் சிஸ்டத்தில் பயன்படுத்தவும் இந்த பார்மட் உகந்தது.

5. TIFF (Tagged Image File Format): ஆல்டஸ் நிறுவனத்தின் தலைமையில் சில நிறுவனங்கள் சேர்ந்து இந்த பைல் பார் மட்டை உருவாக்கின. டெஸ்க் டாப் பப்ளிஷிங் சிஸ்டத்தில் கலர் மற்றும் கிரே வண்ணத்திலான படங்களைக் காட்ட இந்த பார்மட் பயன்படுகிறது.

6. PNG: இந்த பார்மட் அண்மைக் காலத்திய வடிவமைப்பு. பார்மட் புழக்கம் இழந்த நிலையில் அதன் இடத்தில் இந்த பார்மட் கொண்டு வரப்பட்டது. நெட்வொர்க் இணைப்புகளில் பயன்படுத்த உகந்தது. இதனைக் கம்ப்ரஸ் செய்திடுகையில் டேட்டா இழப்பு ஏற்படாது.

7. WMF: விண்டோஸ் அல்லாத அப்ளிகேஷன்களால் விண்டோ ஸ் அப்ளிகேஷன்களுடன் தகவல் பரிமாற்றத்திற்கு இந்த பார்மட் பயன் படுகிறது. எனவே இது ஒரு பொதுவான பார்ம ட்டாகக் கருதப்படுகிறது. இது அனைத்து வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

படங்கள் பரிமாற்றம்: படங்கள் உருவானவுடன் அவற்றிற்கு பொலிவு சேர்க்க கம்ப்யூட்டருக்கு மாற்றப்பட வேண்டும். முத லில் படங்களை உருவாக்கும் சாதனங்களைப் பார்க்கலாம். டிஜி ட்டல் கேமரா அந்த வகையில் முதல் இடம் பெறுகிறது. ஒளித் தூண்டுதல்களுக்கு உள்ளாகக் கூடிய சென்சார்களில் படங்களை ப் பதிக்கும் வேலையை டிஜிட்டல் கேமரா மேற்கொள்கிறது. இந்த சென்ஸாரின் அளவு,லென்ஸின் தன்மை, பிக்ஸெல் அமை ப்பு ஆகிய மூன்று தான் அடிப்படையில் இமேஜ் ஒன்றின் தன்மை யை உருவாக்குகின்றன. இப்படி உருவாக்கப்படும் டிஜிட்டல் படங்களை கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் பிற சாதனங்களுக்கு மாற்றுவதற்கு யு.எஸ்.பி. டிரைவ் போன்ற பல டிஜிட்டல் சாதன ங்கள் இருக்கின்றன. இவற்றின் மூலம் மேலே குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த படங்கள் மாற்றப்படுகின்றன. இவை அனைத்திலும் PTP Picture Transfer Protocol என்னும் வழி பின் பற்றப்படுகிறது.

படங்களை உருவாக்கி தருவதில் ஸ்கேனர்களும் பயன்படு கின்றன. படங்கள், அச்சடிக்கப்பட்ட டெக்ஸ்ட் அல்லது கையெழு த்துப் பிரதி அல்லது ஒரு ஆப்ஜெக்ட் (நகையணி) போன்றவ ற்றை அலசிப் பார்த்து டிஜிட்டல் இமேஜ் பார்மட்டில் தரும் வேலையை ஸ்கேனர்கள் மேற்கொள்கின்றன. இந்த படங்களும் மேலே கூறப்பட்ட பார்மட்டுகளில் டிஜிட்டல் இமேஜ்களை அளிக் கின்றன.

இவ்வாறு உருவாக்கப்பட்ட டிஜிட்டல் இமேஜ்களைக் கம்ப்யூ ட்டருக்கு மாற்றியபின் அவற்றைச் சரி செய்து பொலிவூட்டும் பணி கம்ப்யூட்டரில் நடைபெறுகிறது. இதற்கான பல்வேறு நட வடிக்கைகளை இங்கு காணலாம். இவ்வகைப் பணிகளுக்குப் பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் இருந்தாலும் அனைத்திற்கும் முதன்மையாய் அனைத்து வசதிகளும் கொண்டு இயங்குவது அடோப் போட்டோ ஷாப் சாப்ட்வேர் தொகுப்புதான்.

1. கிராப்பிங்: (Cropping): ஒரு டிஜிட்டல் இமேஜை வலுப்படு த்தவும் குறிப்பிட்ட நிலைக்கு முக்கியத்துவம் அளித்திடும் நோக் கத்துடன் தேவையற்ற பகுதிகளை நீக்குதலே கிராப்பிங் ஆகும்.

2. ரீசைஸிங்: (Resizing) இமேஜின் உயரம், அகலம் மற்றும் அத னை உருவாக்கியவற்றின் விகித நிலையை மாற்றி அமைத்தலே ரீசைஸிங் பணியாகும்.

3. ரொடேட்டிங்: (Rotating) இது இமேஜை சுழற்றி வைத்திடும் பணி யாகும். இது முழு படத்தையும் சுழற்றும். தனி ஒரு லேயரை மட்டும் எடுத்துக் கொள்ளாது.

4. இமேஜ் வண்ணங்கள்: பலவகையான வண்ணக் கலவைகள் வரை யறை செய்யப்பட்டுள்ளன. CMYK, Lab Color, Bitmap Color, Indexed Color, Duotone Color, Multichannel Color என்ற பலவகை வண்ணக் கலவைகளை இமேஜ்களில் மேற்கொள் ளலாம். படத்தினை எதற்கு எவ்வாறு பயன்படுத்தப் போகிறோம் என்பதே இவற்றைத் தீர்மானிக்கின்றன.

5. ரெட் ஐ ரிமூவல்: (Red Eye Removal) டிஜிட்டல் போட்டோ எடுக்கையில் பயன்படுத்தப்படும் பிளாஷ் கண்களில் பட்டு ஒளி மீண்டும் கேமராவை அடையும்போது கண்களின் மீது சிகப்பு சிறி ய வட்டம் ஏற்படும். இதனை நீக்குவதே இந்த பணி. இதனை சில கேமராக்களில் முதலிலேயே தடுத்து விடலாம். இல்லையேல் சாப்ட்வேர் தொகுப்பின் துணையுடன் எடுத்துவிடலாம்.

6. நாய்ஸ் ரிமூவல்: (Noise Removal) போதுமான ஒளி இல்லாத வேளைகளில் படம் எடுக்கும் போதும் தூசுகள் அதிகம் எழுந்து வரும்போது படம் எடுக்கப் போதும் தெளிவில்லாத படம் ஏற்படு கின்றன. இவற்றைச் சரி செய்து படங்களுக்குப் பொலிவு ஊட் டுவதனை நாய்ஸ் ரிமூவல் என்கிறார்கள். இதனையும் சாப்ட் வேர் துணை கொண்டு மேற்கொள்ளலாம்.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: