Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் மிகவும் கோபப்படுபவரா? உங்கள் கோபத்தை கையாள எளிய வழிகள்

நீங்கள் மிகவும் கோபப்படுபவரா? இதனால் வீட்டிலும், அலுவல கத்திலும் பல பிரச்சனைகளுக்கு உள் ளாக்கப்படுகிறீர்களா? இதோ உங்கள் கோபத்தை கையாள எளிய வழிகள்.

1. கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த் திடும்.

2. தண்ணீர் குடித்திட கோபம் தணியும்.

3. ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம்.

4. கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.

5. கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம்.

6. கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.

7. கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறை வதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல்.

8. கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட் டியல் இட்டு எழுத கோபம் குறையும்.

9. தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.

10. வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.

11. நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும்.

12. தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறையும். 13. பழச்சாறுகள், இயற் கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

2 Comments

  • SIR BASICALLY I AM SILENT PERSON BUT MY SURROUNDING PEOPLE DO NOT BEHAVE LIKE THAT NOWADAYS I AM GETTING MORE PRESSURE AND JOB STRESS SO I CANT CONTROL MYSELF PLEASE MAKE ME FREE MIND KINDLY SAY SOME EASIEST METHODS TO AVOID THAT ANGER

    • தனிமையான இடங்களுக்கு செல்லுங்கள். அல்ல‍து வீட்டில் இருக்கும்போது வாக்மேன்னில் இனிமையான பாடல்களை கேட்டுக்கொண்டே இருங்கள். உங்களை சுற்றிலும் இருப்ப‍வர்கள் என்ன‍ பேசினாலும், அத்தருணத்தில் செவிடாகவும், ஊமையாகவும் தற்காலிகமாக உங்களை நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள். பிறகென்ன‍, போக போக நீங்கள் விரும்பும் அமைதி தன்னால் வந்துவிடும்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: