Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலககோப்பை கிரிக்கெட் 2வது அரையிறுதிப் போட்டி: “கடவுளே இந்தியா வெற்றி பெற வேண்டும்”

கடவுளே இந்தியா வெற்றி பெற வேண்டும்”, இது தான் ஒவ்வொரு இந்தியரின் இன்றை பிரார்த்தனை யாக இருக்கிறது. உலக கோப்பை கிரிக்கெட் 2 வது அரையிறுதிப் போட் டி இன்று மொகாலியில் நடைபெ றுகிறது. இந் தியா – பாகிஸ்தான் அணி கள் மோதும் போட்டி இரண்டு நாடுகளிலும் பலத்த எதிர்பார்ப்பை ஏற் படுத்தியுள்ளது. சிறப்பு பூஜை கள், தொழுகைகள், பிரார்த்தனைகள் என இந் தியா வெற்றி பெற வேண் டுதல்கள் ஒருபுறம், ஹை வோல்டேஜ் கிரிக்கெட் போட்டியை கண்டி ப்பாக பார்த்தே ஆக வேண்டும் என காலேஜ், ஆபீசுக்கு மட்டம் போடும் இளசுகள் ஒரு புறம் என களை கட்டியுள்ளது.

அரை நாள் விடுமுறை: அட பொய் சொல்லி லீவு போட வேண்டாம், நாங்களே லீவு தருகிறோம் என பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி, பாகிஸ்தான் முழுவதும் நன் பகல் முதல் அரை நாள் விடு முறை அளித்து உத்தரவிட்டார். அப்புறம் என்ன லாகூரில் இருக்கும் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மெகா ஸ்கிரீனில் ஒளிபரப்பப்படும் போட்டி யை காண ஒரு படையே கிளம்பும். குவெட்டா, கராச்சி, ஆகிய பகுதிகளில் சிறப்பு தொழுகைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையிலும் அரை நாள் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நட்பு தான் முக்கியம்: இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட் டியை இருநாட்டு பிரதமர்களும் ஒன்றாக அமர்ந்து பார்ப்பதற்கு பின்ன ணியில் அரசியல் சூசகம் மறைந்து இருப்பதாக சில அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வந்தாலும் , இந்த விசிட் முழுக்க முழுக்க நட்புறவை மேம்படுத்த மட்டும் தான் என கூறியுள்ளார் கிலானி. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான நட்புற‌வை மேம்படுத்த வேண்டும் என்பதும், கிரிக்கெட் விளை யாட்டினை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதும் தான் தனது பயணத்தின் லட்சியம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவும், பாகிஸ்தானும் விளையாட்டு போட்டி யினை ரசித்து மகிழ வேண்டும் எனவும் கிலானி கேட்டுக் கொண்டார்.

சத்தமாக பாடுங்கள் ப்ளீஸ்: கிரிக்கெட் போட்டிக்கு ஏகப்பட்ட பில்ட் அப் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்களுக்கு மன ரீதியாக இது ஒரு நெருக்கடியை ஏற்படுத்த தான் செய்யும். ட்விட் டர் சமூக வளை தளத்தில் நேற்றிரவு மெசேஜ் அனுப்பிய இந்திய வீரர் யுவராஜ் சிங் : மொகாலி கிரிக்கெட் ஸ்‌‌டேடியத்தில் கூடும் ரசிகர்கள் அனைவரும் இந்திய தேசிய கீதம் இசைக்கப்படும் போது சத்தமாக பாடி தங்களை உற்சாக படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

சானியா வாழ்த்து: ட்விட்டர் செய்தியில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இந்தியாவுக்கு குட் லக் சொல்லியுள்ளார். சானி யா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்துள்ளார். இவர்கள் திருமணத்துக்கு முன்னர் சானியா அளித்த பேட்டி ஒன்றில்: இந்தியா – பாகிஸ்தான் விளையா டினால் நிச்சயம் இந்தியாவை தான் ஆதரிப்பேன், அதே போட் டியில் என் கணவரும் விளையாடினால் அவருக்கு சப்போர்ட் செய்வேன் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

25 ஏக்கர் நிலம் பரிசு! இந்தியாவுக்கு எதிரான உலககோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் மட்டும் வெற்றி பெற்று விடுங்கள், ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கு 25 ஏக்கர் நிலம் பரிசா தருகிறேன் என அறிவித்துள்ளார் பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாநில முதல்வர் சாபாஷ் ஷெரீப். நேற்று பத்திரிகை யாளர்கள் சந்திப்பின் போது சாபாஷ் ஷெரீப் இந்த மெகா பரிசி னை அறிவித்தார்.

இவ்வாறு இந்தியா – பாக்., கிரிக்கெட் போட்டி உணர்ச்சி ததும்ப பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: