Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எல்.ஜி. மொபைல்கள் புதியவை மூன்று

இந்திய மொபைல் சந்தையில், அண்மையில் எல்.ஜி. நிறுவனம் புதிய மூன்று மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து ள்ளது. இவை T310i, T325 மற்றும் P520 என அழைக்கப்படுகின் றன. இவை ஒவ்வொன் றையும் இங்கு பார்க்க லாம்.

1. LG T310i: இந்த மொபை லில் சோஷியல் நெட் வொர் க்கிங் அப்ளிகேஷன் தொகுப் புகள் இணைத்து தரப்படுகி ன்றன. பேஸ்புக், ட்விட்டர் மற்றும் ஆர்குட் ஆகியவற் றிற்கான விட் ஜெட் அப்ளி கேஷன்கள் திரையில் காட்டப் படுகின்றன. இவற் றின் மூலம் எளிதாக இவற்றிற்கு இணைப்பு பெற்று இயக்கலாம். Cartoon User Interface என்னும் இடைமுகத்துடன் Mobicomix என்ற காமிக் புக் புரோகிராம் ஒன்றும் தரப்படுகிறது. போ னின் மற்ற குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அம்சங்களாக 2.8 அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், வை-பி, A2DP இணைந்த புளுடூத் 2.0, 2 மெகா பிக்ஸெல் கேமரா, எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 5,999.

2. LG P520: மேலே தரப்பட்டுள்ள மொபைல் போலவே அம்சங்களை உடையது இந்த போன். இதில் தரப்பட்டுள்ள SNS Client மூலம் நெட் வொர்க்கிங் தளங்களுக்குச் செல்லலாம். இது ஒரு இரண்டு சிம் இயக்க போன். 2.8 அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், வை-பி, A2DP இணைந்த புளுடூத் 2.0, 2 மெகா பிக் ஸெல் கேமரா, எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 4ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதிகள் தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,999.

3. LG T325: இது ஒரு 3ஜி போன். முன்பக்கமாக கேமராவுடன், எல்ஜி மொபி காமிக்ஸ் மற்றும் ஸேப் பாக்ஸ் (Zap Box) தரப் பட்டுள்ளது. இதன் மூலம் பாடல்களை டவுண்லோட் செய்வது எளிது. இதில் விண்டோஸ் லைவ் மற்றும் யாஹூ மெசஞ்சர் அப்ளிகேஷன்கள் தரப்பட்டுள்ளன. 2.8 அங்குல தொடுதிரை, 3ஜி மற்றும் வை-பி, புளுடூத், முன்புறம் வைக்கப்பட்டுள்ள 2 மெகா பிக்ஸெல் கேமரா, 16 ஜிபி வரை மெமரி அதிகப் படுத்தும் வசதி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியன உள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,399.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: