Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஓசோன் படலம்

ஓசோன் மண்டலம் என்பது வளிமண்டலத்தில் உள்ள (ஓசோன்-O3) ஒரு வகை காற்றுப் படலம்தான். சூரிய னில் இருந்து உமிழப்படும் ஆபத்தான புற ஊதாக் கதிர் களை பூமியில் விழாமல் தடு ப்பது ஓசோன் அடுக்கு தான். 93 முதல் 99 சதவீத புறஊ தாக் கதிர்களை `ஓசோன் படலம்` கிரகித்து விடுவதா ல்தான் நம்மால் இங்கு நிம்ம தியாக வாழ முடிகிறது. இந் தப் படலத்தில் துளை விழுந்திருப்பதால்தான் சமீபகாலமாக வெப்பம் அதிகரித்துள்ளது. காற்று மாசுபடாமல் தடுப்பதன் மூலம் ஓசோன் படலம் சேதமடையாமல் பார்த்துக் கொள் ளலாம்.

***

ஓசோன் படலம் தரையில் இருந்து 10 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை யுள்ள காற்றுமண்டலத்தில் காணப்படுகிறது. பிரஞ்சு இயற்பியல் வல்லுனர்கள் சார்லஸ் பே ப்ரி, ஹென்றி புய்சன் ஆகி யோர் (1913-ல்) ஓசோன் படல த்தை கண்டுபிடித்தனர். `சிட்னி சேப் மேன்’ என்ற இங்கிலாந்து விஞ்ஞானி (1930 -ல்) இரு அணுநிலை ஆக்சிஜனும், ஒரு முழு ஆக்சிஜனும் இணைந்ததே ஓசோன் (O3) என்று கண்டு பிடித்தார். சூரியஒளியில் உள் ள புற ஊதாக்கதிர் தாக்குவதால் ஆக்சிஜன் அணுக்களில் ஏற்படும் மாற்றமே ஓசோனை தோற்றுவிக்கிறது என்றார். மற் றொரு இங்கிலாந்து ஆய்வாளர் டோப்சன், ஓசோனின் அடர்த் தியை அளவிடும் `ஸ்பெக்ட்ரோபோட்டோ` மீட்டரை (டோப் சான் மீட்டர்) உருவா க்கினார்.

***

ஓசோன் மூலக்கூறும் நிலையற்றது தான். புறஊதாக்கதிரின் தாக்குதலால் உருவாகும் ஓசோன் அணு க்கள் மீண்டும் அந்த கதிர்கள் தாக்கும் போது அணுநிலை ஆக்சிஜனாகவும், ஆக்சி ஜனா கவும் பிரிகிறது. இது ஓசோன்-ஆக்சிஜன் சுழற்சி எனப்படுகிறது. ஸ்ட்ரே டோஸ்பியர் (50கி.மீ. உயரத்திற்குள்) அடு க்கில் உருவாகும் ஓசோன் படலம் மட் டுமே இந்த சுழற்சிக்கு தப்பி நிலைக் கிறது. அதற்கு மேலுள்ள ஓசோன் அணுக்கள் இந்த சுழற்சியால் சிதைந்து விடுவதும், மீண் டும் உருவாவதுமாக இருக்கிறது. ஸ்ட்ரேடோஸ்பியர் அடுக்கில் மட்டும் 90 சதவீத ஓசோன் படலம் இருக்கிறது.

***

ஓசோனின் செறிவு மிகவும் குறைவாக இருப்பது உயிரின ங்களின் வாழ்க்கைக்கு இன்றியமை யாதது. ஏனெனில் செறிவு குறைந்த ஓசோன் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை மிகுதியாக உட்கிரகி க்கிறது. புறஊதாக் கதிர்கள்(UV) அதன் அலைநீளத்தைச் சார்ந்து யு.வி. – ஏ, பி, சி என மூன்று வகை களாகப் பிரிக்கப்படுகிறது. UVA (400315 நா.மீ ), UVB (315280 நா.மீ ) மற்றும் UVC(280 – 100 நா.மீ.) அலை நீளம் கொண்டது. `சி` புறஊதாக்கதிர் (UVC) மனிதர்களுக்கு மிகவும் தீங்கிழைக்கக் கூடியது. UVB கதிர்களால் தோல் புற்றுநோய் ஏற்படலாம். UVA கதிர் மரபு சார்ந்த பாதிப்புகளை உருவாக்கும் ஆற்றலுடையது.

***

அண்டார்டிக்கில் ஓசோன் ஓட்டை இருப்பது அமெரிக் காவில் 1985-ம் ஆண்டில் கண்டறிய ப்பட்டது. 1978-ம் ஆண்டில் அமெரி க்கா, கனடா மற்றும் நார்வே போன்ற நாடுகள் குளோ ரோ புளோரோ கார்ப ன் உள்ள பல பொருட்களை பயன்படுத்த தடை விதித் தன. குளிர்பதனம் மற்றும் தொழிலகத் தூய்மை பணி களில்  கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. `த மோன்ட்ரியல் புரோட் டோக்கால்’ என்ற சர்வதேச உடன்பாட்டின் படி 1987 முதல் சிதிசி உற்பத்தி கடுமையாகக் குறைக்கப்பட்டு 1996-ம் ஆண்டு பெருமளவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஓசோன் ஓட்டை பெரிதாவது தடுக்கப்பட்டுள்ளது.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: