Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிக்கன கைபேசி (Budget Mobiles)

அண்மையில் தொடக்க நிலை போன்கள், சில அடிப்படை வசதிக ளுடன் அமைந்து, மக்க ளை அதிகம் கவர்வதாக அமைந்து விற்ப னைக்கு வந்துள்ளன. அவற்றில் இரண்டை இங்கு பார்க்க லாம்.

டூயல் சிம்கார்பன் கே 550 ஐ:
இரண்டு பேண்ட் அலை வரிசைகளில் இயங்கும் இந்த பார் வடிவ மொ பைல், அண்மையில் விற் பனைக்கு வெளி வந்து ள்ளது. கார்பன் கே 550 ஐ (Karbonn K 550 i) என அழைக்கப்படும் இதில், ஆயிரம் முகவரிகளைக் கொள்ளும் அட்ரஸ் புக், 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், 2 மெகா பிக் ஸெல் கேமரா, வீடியோ பதியவும், பார்க்கவும் வசதி, எஸ். எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்புதல், எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, கார்பன் நிறுவனம் வழங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் அதிகபட்ச விலை ரூ. 2,640.

மைக்ரோமேக்ஸ் எக்ஸ் 410:
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் போன்கள், சிறிய அளவில் கைக்கு அடக்கமாகக் குறைந்த எடையில் உருவானதாகவே இருக்கின்றன. எக்ஸ் 410 என அழைக்கப்படும் இந்த மைக்ரோ மேக்ஸ் மொபைல் 86 கிராம் எடையுடையது. இதன் பரிமாணம் 115 x 51 x 10.8மிமீ ஆக உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், தொடர்ந்து 4 மணி நேரம் பேசலாம். இரண்டு அலைவரிசைகளில் இயங்குகிறது. 2.4 அங்குல திரை, 2 மெகா பிக்ஸெல் கேமரா, 512 எம்பி நினைவகம், இரண்டு சிம் இயக்கம், வீடியோ பதிந்து இயக் குதல், எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்., எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, புளுடூத், ஷேக் சென்சார் ஆகியவற்றுடன் வழக்கமான வசதிகளையும் கொண்டு ள்ளது. இதன் விலை ரூ. 2,913.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: