Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி, பைனலில் இந்தியா…

உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த பர பரப்பான அரையிறுதியில் பாகி ஸ்தானை 29 ரன்கள் வித்தி யாசத்தில் வீழ்த்தியது. 85 ரன்கள் விளாசிய சச்சின், இந்திய அணி யின் வெற்றிக்கு கைகொடு த்தார். வரும் ஏப்., 2ம் தேதி நடக்கும் பைனலில் இந்திய அணி, இலங் கையை எதிர்கொள்கிறது.

இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று மொகாலியில் நடந்த இரண்டாவது அரையி றுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

அஷ்வின் நீக்கம்:ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், இந்திய அணியில் அஷ்வின் நீக்கப்பட்டு, நெஹ்ரா இடம் பெற்றார். பாகிஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய் யப்படவில்லை. அக்தருக்கு இம்முறையும் வாய்ப்பு அளிக்கப் படவில்லை. “டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, “பேட்டிங் தேர்வு செய்தார்.

சேவக் “சரவெடி:இந்திய அணிக்கு வழக்கம் போல் சேவக் அதிரடி துவக்கம் தந்தார். குல் வீசிய முதல் ஓவரில் ஒரு பவுண்டரியு அடித்தார். இவரது அடுத்த ஓவரில் ஐந்து பவுண்டரிகள் விளா சினார். இந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள் எடுக்கப்பட, குல்லை பார் க்கவே பாவமாக இருந்தது. அப்துர் ரசாக் ஓவரில் சச்சின், சேவக் தலா ஒரு பவுண்டரி அடிக்க, ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். தொடர்ந்து குல் ஓவரில் 2 பவுண்டரி அடித்த சேவ க்கின் சரவெடி ஆட்டம் நீண்ட நேரம் தொடர வேண்டும் என ரசிகர்கள் ஏங்கினர். ஆனால், வகாப் ரியாஸ் சிக்கலை ஏற்படுத் தினார். இவரது வேகத்தில் “ரிவியு முறையில் சேவக் 38 ரன் களுக்கு(9 பவுண்டரி) அவுட்டானார்.

வகாப் மிரட்டல்:அடுத்து வந்த காம்பிர் “கம்பெனி கொடுக்க, சச் சின் தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். இவர்கள் இர ண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர். முகமது ஹபீஸ் பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட காம்பிர்(27), கம்ரான் அக்மலின் துல்லிய “ஸ்டம்பிங்கில் வீழ்ந்தார். போட்டியின் 26 வது ஓவரை வீசிய வகாப் ரியாஸ் இரட்டை “அடி கொடுக்க, இந் திய ரசிகர்கள் அதிர்ந்து போயினர். 2வது பந்தில் விராத் கோஹ் லியை(9) வெளியேற்றினார். 3வது பந்தில் யுவராஜ் சிங்கை(0) போல்டாக்க, மொகாலி அரங்கமே அமைதியானது. அப்போது இந்திய அணி நான்கு விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து திண றியது. அடுத்து வந்த தோனி தடுத்து ஆட, ரியாசின் “ஹாட்ரிக் வாய்ப்பு பறிபோனது.

சச்சின் அபாரம்:இதற்கு பின் சச்சின், தோனி இணைந்து நிதா னமாக ஆடினர். இவர்கள் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்தால், ஸ்கோர் விரைவாக உயரவில்லை. ஒரு நாள் போட்டிகளில் தனது 95வது அரைசதம் அடித்த சச்சின், சர்வதேச கிரிக்கெட்டில் 100வது சதம் அடிக்க தவறினார். இவர் 85 ரன்களுக்கு(11 பவு ண்டரி) சயீத் அஜ்மல் சுழலில் வீழ்ந்தார். வகாப் ரியாஸ் “வேக த்தில் தோனியும்(25) நடையை கட்டினார்.

ரெய்னா அசத்தல்:கடைசி கட்டத்தில் “பேட்டிங் பவர்பிளேயை பயன் படுத்தி சுரேஷ் ரெய்னா அசத்தலாக ஆடினார். <உமர் குல் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். ஹர்பஜன் 12 ரன்கள் எடுத்தார். ஜாகிர் கானை(9) வெளியேற்றிய வகாப் ரியாஸ், தனது 5வது விக்கெட்டை பெற்றார். நெஹ்ரா(1) ரன் அவுட்டாக, இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்தது.

திணறல் ஆட்டம்:சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. ஜாகிர் கான் பந்தில் கம்ரான் அக்மல்(19) காலியானார். ஓரளவுக்கு தாக்குப்படித்த ஹ பீஸ் 43 ரன்களுக்கு முனாப் வேகத்தில் அவுட்டானார். மீண்டும் ஒரு முறை சுழலில் மிரட்டிய யுவராஜ் சிங், அசாத் ஷபிக்(30), அனுபவ யூனிஸ் கானை(13) வெளியேற்றி திருப்புமுனை ஏற்ப டுத்தினார். இதையடுத்து பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து தத்தளித்தது.பின் யுவராஜ் சிங் பந்துவீச்சில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார் உமர் அக்மல். இவர், ஹர்பஜன் வலையில் 29 ரன்களுக்கு அவுட்டானார். முனாப் பந்தில் அப்துல் ரசாக்(3) வெளியேற, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

அப்ரிதி ஏமாற்றம்:கடைசி கட்டத்தில் கேப்டன் அப்ரிதி, மிஸ்பா -உல்-ஹக் இணைந்து போராடினர். இதில், மிஸ்பா “ஆமை வேகத்தில் ஆட, “ரன் ரேட் எகிறியது. இந்த பதட்டத்தில் ஹர் பஜன் பந்தை சிக்சருக்கு தூக்க முயன்ற அப்ரிதி(19), பரிதாபமாக அவுட்டாக, பைனல் கனவு முடிவை நெருங்கியது.

தாமதம் ஏன்?:”பேட்டிங் பவர்பிளேயை மிகவும் தாமதமாக 46வது ஓவரில் பாகிஸ்தான் எடுத்தது வியப்பை தந்தது. அப்ரிதி போன்ற அதிரடி வீரர்கள் களத்தில் இருக்கும் போன் ஏன் “பவர் பிளேயை பயன்படுத்தவில்லை என்ற கேள்வியை எழுப்பச் செய்தது. நெஹ்ரா வேகத்தில் ரியாஸ்(8), குல்(2) பெவிலியன் திரும்பினர். போராடிய மிஸ்பா அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். இவர் 56 ரன்களுக்கு வெளியேற, பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் 231 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடை ந்தது. இதன் மூலம் தொடரில் இருந்து வெளியேறியது. ஆட்ட நாயகனாக சச்சின் தேர்வு செய்யப்பட்டார். அபார வெற்றி பெற்ற இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது. வரும் ஏப்., 2ம் தேதி மும்பையில் நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: