Sunday, June 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியானது: 234 தொகுதிகளிலும் பிரசாரம் சூடுபிடிப்பு

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளன. வேட்பு மனுக் களை வாபஸ் பெறுவது நேற்று டன் முடிவடைந்து, வேட்பாளர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டு, அவர் களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டுவிட்டதால், 234 தொகுதிகளிலும் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவ ங்கி, 26ம் தேதி முடிந்தது. இதில், 4,280 மனுக்கள் தாக்கல் செய்யப்ப ட்டிருந்தன. மனுக்கள் கடந்த திங்கள்கிழமை (28ம் தேதி) பரிசீலிக்கப் பட்டன. இதில், 1,153 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன; சிலர் வாபஸ் பெற்றுஇருந்தனர். மீதம் 3,082 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக சென்னையில் 294 மனுக்கள் ஏற்கப்பட்டன. திருப்பூர் வடக்கு தொகுதியில் 70 மனுக்கள் ஏற்கப்பட்டன.மனுக்களை வாபஸ் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இதில், ஏராள மானோர் வாபஸ் பெற்றனர். இதுதவிர, அதிகாரபூர்வ வேட்பாளர் களின் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த வர்களும் வாபஸ் பெற்றனர். இதையடுத்து, வேட்பாளர்களது இறுதிப் பட்டியல் நேற்று இரவு தயாரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கியது போக, மற்ற பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்கு சின்ன ங்கள் ஒதுக்கப்பட்டன.

தே.மு.தி.க.,வுக்கு முரசு சின்னமும், ஐ.ஜே.கே., கட்சிக்கு மோ திரம் சின்னமும் ஒதுக்கப்பட்டன. மற்ற கட்சிகளுக்கு, தேர் தல் கமிஷனின் 53 சின்னங்களில் ஒன்று, அவர்களது விருப் பப்படி ஒதுக்கப்பட்டது. முதலில், பதிவு செய்த கட்சிகளுக்கு சின் னங்கள் ஒதுக்கப்பட்டது. அதன்பின், சுயேச்சைகளுக்கான சின் னங்கள் ஒதுக்கப்பட்டன. வேட்பு மனு பரி சீலனையின் போது, மயிலாப்பூர் தொகுதிகாங்கிரஸ் வேட்பாளராக மனுதாக்கல் செய் திருந்த, ஜெயந்தியின் மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த அவரதுகணவர் தங்கபாலுவின் மனு ஏற்கப்பட்டது. அதேபோல, கிருஷ்ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப் பட்டி ருந்த ஹசீனா சையதுக்கு பதில், மக்பூல் ஜானை புதிய வேட்பாளராக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. ஆனால், அவர் குறிப்பிட்ட நேரத்துக்குள் மனுதாக்கல் செய்யவில்லை. இதை யடுத்து, ஹசீ னாவே காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் எனக் கருதப் பட்டது. ஆனால், இதில் திடீர் திருப்பமாக, அவர் தனது மனுவை நேற்று வாபஸ் பெற்றார். மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த அவரது கணவர் சையத், காங்கிரஸ் கட்சியின் அதி காரபூர்வ வேட் பாளரானார்.ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 12 நாட் களே உள்ளதால், பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. இந்த அனல் பறக் கும் பிரசாரம், ஏப்ரல் 11ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 13ம் தேதி பதிவாகும் ஓட்டுக்கள் எல் லாம், மே மாதம் 13ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக் கப்படும்.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: