
2-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்ற இரு அணி களுமே கடுமையாக போராடும். இதனால் நாளைய இறுதிப் போட்டி விறுவிறுப் பாகவும், மிகவும் பரபரப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்திய அணி உலக கோப்பையை வெல்ல இது நல்ல வாய்ப்பு. இதனால் இந்திய வீரர்கள் அனை வரும் முழு திறமையை பயன்படுத்தி விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
லீக் ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவிடம் மட்டுமே தோற்றது. வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வென்றது. இங்கிலாந்துடன் “டை” செய் தது. கால்இறுதியில் 4 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலி யாவையும், அரை இறுதியில் பாகிஸ்தானையும் வீழ்த்தியது. சிறந்த அணிகளை வீழ்த்தி இருப்பதால் இந்திய அணி மிகுந்த நம் பிக்கையுடன் உள்ளது. அதே நேரத்தில் இலங்கை அணியை சாதாரணமாக நினைக்க இயலாது. அந்த அணியும் இந்தியாவை போல சிறப்பாக ஆடி வருகிறது.
ஷேவாக்-தெண்டுல்கர் தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைய வேண்டும். இந்த உலக கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரர் களில் தெண்டுல்கர் (464 ரன்), 2-வது இடத்திலும், ஷேவாக் (380 ரன்) 6-வது இடத்திலும் உள்ளனர். அதே நேரத்தில் மிடில் ஆர்டர் வரிசையும் நன்றாக இருக்க வேண்டும். கால்இறுதி வரை சிறப் பாக ஆடி வந்த யுவராஜ்சிங் பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதியில் சொதப்பி விட்டார். இதனால் முக்கியமான இந்த ஆட் டத்தில் அவர் மீண்டும் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.
இதேபோல கேப்டன் டோனியும் இன்னும் முத்திரை பதிக்கும் விதத்தில் ஆட வேண்டும். கடந்த 2 ஆட்டத்திலும் ரெய்னா நன் றாக விளையாடினார். இதனால் அவர் தொடர்ந்து அணியில் நீடிப்பார். யூசுப்பதான் இடம் பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே. ஒரு வேளை கோலி நீக்கப்பட்டால் வாய்ப்பு கிடைக் கலாம். மிடில் ஆர்டரில் கோலி நன்றாக ஆடக்கூடியவர்.
பாகிஸ்தானுக்கு எதிராக சரியாக ஆடாவிட்டாலும் அவர் நீக்கப் படமாட்டார் என்றே தெரிகிறது. பந்து வீச்சில் மாற்றம் இருக்கும். வேகப்பந்து வீரர் ஆசிஷ் நெக்ராவுக்கு கைவிரலில் எலும்பு முறி வு ஏற்பட்டுள்ளது. இதனால் நாளைய இறுதிப்போட்டியில் அவர் ஆடமாட்டார். அவருக்கு பதிலாக சுழற்பந்து வீரர் அஸ்வின் இட ம் பெறுவார். ஆடுகள தன்மையை பொறுத்து 3-வது வேகப் பந்து வீரர் இடம் பெறுபாரா என்று தெரியும்.
என்றாலும் ஸ்ரீசாந்த் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. இலங்கை அணி பந்து வீச்சில் சிறந்து விளங் குகிறது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் 300 ரன்னுக்கு மேல் எடுப்பதே நல்லது. பிற்பகல் ஆட்டம் சுழற்பந்து வீச்சு சாதகமாக திரும்ப வாய்ப்பு உள்ளது. இதனால் “டாஸ்” முக் கிய பங்கு வகிக்கும். இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தா லும், 2-வது பேட்டிங் செய்தாலும் சிறப்பாக ஆடக்கூடியது. அந்த அணி இங்கிலாந்துக்கு எதிரான கால் இறுதியில் 230 ரன் இலக் கை விக்கெட் இழக்காமல் 10 விக்கெட்டில் வென்றது.
பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய 3 துறையிலும் அந்த அணி சிறந்து விளங்குகிறது. தொடக்க ஜோடியும், மிடில் ஆர்டர் வரி சையும் அபாரமாக இருக்கிறது. உலக கோப்பையில் அதிக ரன் எடுத்தவராக தில்சான் (467) உள்ளார். கேப்டன் சங்ககரா 417 ரன் னும், மற்றொரு தொடக்க வீரர் தரங்கா 397 ரன்னும் எடுத்து ள்ளனர். இதேபோல ஜெயவர்த் தனே, சமரவீரா, சமரசில்வா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் அந்த அணியில் உள்ளனர்.
இலங்கை அணியில் மலிங்கா, முரளீதரன் சிறப்பாக பந்து வீசக் கூடியவர்கள். முரளீதரன் முழு உடல் தகுதியுடன் இல்லை. என் றாலும் தனது கடைசி போட்டி என்பதால் ஆடுவார். மேத்யூசுக்கு பதிலாக ரந்தீவ் அல்லது சமிந்தா வாஸ் அல்லது குலசேகரா இட ம் பெறலாம்.
பிற்பகல் 2.30 மணிக்கு தொடரும் இந்தப்போட்டி தூர்தர்சன், ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர் ட்ஸ் டெலிவிசனில் நேரடி யாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )
*-*-*
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது