Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள, சில சுவாரஸ்யமான கேள்விகளும் பதில்களும் …

நீங்களே தெரிந்து கொள்ளலாம்… ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி சுய ஆய்வு செய்து… குற்றங் குறைகளை நிறையாக்கிக் கொண் டால், அவர்களுக்கு வெற்றி என் பது எளிதாக கிடைக்கும். உங்க ளுக்கும் அந்த ஆசை இருக்கலாம்.

உங்களுக்காகவே இதோ… பத்து கேள்விகள் கொடுக்கப் பட்டுள் ளன. அதற்கு மூன்று பதில்களும் வழங்கியுள்ளோம். அதில் உங்களுக்கான… உங்களைப் பற்றிய பதில்களை டிக் செய்யுங்கள். இறுதி யில் அதற்கான மதிப் பெண் களை கூட்டி… அதற்கான முடிவை… அதா வது உங்களைப் பற்றிய பலம், பலகீன ங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

1. தினமும் நல்ல நேரமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?
அ) காலை
ஆ) மதியம், மாலை
இ) இரவு.

2. உங்களுடைய நடை எந்த மாதிரி இருக்கும்?
அ) மெதுவாக… தலைகுனிந்தபடி…
ஆ) வேகமாக…
இ) தலையை உயர்த்தியவாறு விரைவாக…

3. நீங்கள் பேசும்போது உங்களுடைய செயல் எப்படி இருக்கும்?

அ) விரல்களை இணைத்துக் கொண்டு… அல்லது கையை பிசைந்தபடி…
ஆ) கைகளை இடுப்பில் வைத்த படி பேசுவேன்.
இ) எதிரில் இருப்பவரை தொட்டு தொட்டு பேசுவேன் அல்லது அவரது விரல்களைப் பிடித்தபடி… பேசுவேன்.

4. நீங்கள் தரையில் அமர்ந்தி ருக்கும்போது… எப்படி?
அ) கால்களை நீட்டிக் கொ ண்டு…
ஆ) இரண்டு கால்களையும் ஒரே திசையில் மடக்கி வைத் திருப்பேன்.
இ) சம்மணம் போட்டு உட்கா ர்ந்திருப்பேன்.

5. உங்களுடைய மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவீர்கள்?
அ) லேசான புன்னகை
ஆ) நன்றாக சிரித்து வெளிப்படுத்துவேன்.
இ) விழுந்து விழுந்து சிரிப்பேன்.

6. கேளிக்கையில் இருக்கும்போது… எப்படி?
அ) யாருடனும் பேசாமல்… சேராமல் மூலையில் தனித்து இருப்பேன்.

ஆ) அறிமுகமானவர்களிடம் நானே போய் பேசுவேன்.
இ) அங்கிருக்கும் அனைவரது பார்வையும் என்னை நோக்கி திரும்புகிற மாதிரி நடப்பேன்.

7. மிகவும் அவசர வேலையாக சென்று கொண்டிருக்கிறீர்கள்? அப்போது யாராவது உதவி கேட்டால்..?
அ) அப்புறம் பார்க்கலாம்… நிறைய வேலை இருக்கிறது என்று சொல்லுவேன்.
ஆ) அவருக்கு என்ன உதவியோ… அதையும் நிறைவேற்றாமல்… என்னுடைய வேலையையும் சரிவர செய்ய முடியாமல் திண்டாடு வேன்.
இ) கட்டாயம் உதவி செய் வேன் என்று உறுதி கூறு வேன்.

8. உங்களுக்கு பிடித்த நிறம் எது?
அ) வெள்ளை, பிரவுன் மற் றும் காபி கலர்.
ஆ) மஞ்சள், நீலம் மற்றும் பச் சை.
இ) கருப்பு

9. படுக்கையில் படுத்திரு க்கும் போது எப்படி படுத் திருப்பீர்கள்?
அ) ஒரு பக்கமாக சரிந்து, வளைந்த நிலையில் படுத்தி ருப்பேன்.
ஆ) கால்களை நீட்டியபடி… கவிழ்ந்து படுத்திருப்பேன்.
இ) மல்லாந்த நிலையில் படுத் திருப்பேன்.

10. உங்களுக்கு அடிக்கடி வரும் கனவு?
அ) சந்தோஷமான கனவு…
ஆ) அடிக்கடி கீழே விழுவது போல் கனவு வரும்.
இ) கனவு காணும் பழக்கம் கிடையாது.

என்னங்க… எல்லாத்தையும் படிச்சு… உங்களுக்கான பதிலை `டிக்’ அடிச்சிட்டீங்களா…?

அ – 2 மதிப்பெண்
ஆ – 4 மதிப்பெண்
இ – 6 மதிப்பெண்
இப்போது அதற்கான மதிப்பெ ண்களை கூட்டுங்கள்.

50-க்கும் அதிகமான மதிப்பெண்:
நீங்கள் எந்த வேலையாக இருந்தாலும் அதை ஈஸியாக முடித்து விடுவீர்கள். உங்களுடைய நண்பர்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்களிடம் எப்போது வந்து கேட்டாலும், மறுக்காமல் உதவி செய்வீர்கள் என்பதால் உங்களுக்கு நண்பர்கள் வட்டாரம் ஜாஸ்தி. அதே மாதிரி, நண்பர்களிடம் காரியம் சாதிப்பதிலும் நீங்கள் கில்லாடி!

41-லிருந்து 50- மதிப்பெண் :
உங்களுடன் பழகுவது எளிது. எப்போதும் சிரித்து சிரித்து பேசி யே மற்றவர்களை உங்களுடைய நட்பு வட்டாரத்துக்குள் இழுத்துக் கொள்வீர்கள். மற்றவர்களின் சிக் கல்களுக்கு தெளிவாக ஆலோ சனை சொல்லுவீர்கள். ஆனால் அதே சிக்கல் உங்களுக்கு வந்தால் தெளிவான முடிவெடுக்க முடியா மல் குழப்பம்… அதனால் தடு மாற்றம் என்று உங்களை நீங்களே நொந்து கொள்வீர்கள்!

31 -லிருந்து 40-மதிப்பெண்:
நட்புக்கு மரியாதை கொடுக்கும் குணமுள்ளவர்கள் நீங்கள். அத னால் பல விஷயங்களை இழந்தாலும், நண்பர்களை விட்டுக் கொ டுக்க மாட்டீர்கள். சின்ன சின்ன விஷயத்தைக் கூட சீரியஸாக பார்க்கும் உங்களுக்கு மனக் குழப்பம் அதிகமாக இருக் கும்.

21-லிருந்து 30-மதிப்பெண்:
நீங்கள் சரியான கறார் பேர்வழி… `வெட்டு ஒண்ணு… துண்டு ரெண்டு’ என்று பேசுவதால் உங்களுக்கு நட்பு வட்டாரம் மிகவும் கம்மியாக இருக்கும். அப்படியே யாராவது நெருங்கி வந்தால்கூட அவர்களை நீங்கள் தவிர்த்து விடுவீர்கள். எப்போதும் காரி யத்திலேயே கண்ணாக இருக்கும் உங்களுக்கு பண ஆசையும் அதிகமாக இருக்கும். உங்களுடன் இருப்பவர்களும் சீரியஸாக இரு க்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

21-க்கும் கீழான மதிப்பெண்:
நீங்கள் ஒரு தனிமை விரும்பி. எல்லாரும் கூடி கும்மாளமிட்டாலும் உங்களிடமிருந்து ஒரு சத்தமும் வராது. காடு, மலை என்று சுற்றித் திரியத்தான் உங்களுக்கு ஆசை வரும். பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே ரவுண்ட்ஸ் வரும் உங்களுக்கு விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆசை வராது. மேலும் நண்பர்கள் மத்தியிலும் செல்வாக்கு இருக்காது. உங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சி என்பது கம்மிதான்!

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

*-*-*
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

One Comment

  • http://www.whitereedlaw.com

    This is a very good tip especially to those fresh to the blogosphere.

    Short but very precise info… Many thanks for sharing this one.

    A must read article!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: