Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலககோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி : டாஸ் வென்ற இலங்கை பேட்டிங், 4 ஓவரில் 9 ரன்கள்

உலககோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி மும்பையில் இன்று நடக்கிறது. டாஸ் வெ ன்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித் தது. இதன்படி முத லில் களம் இறங்கிய இலங் கை அணி முதல் 4 ஓவரில் விக் கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்து ஆடி வரு கிறது.

உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 2 வது முறை கோப்பையை பிடிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும், வெற்றி இந்தியாவுக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் ஜோதிடர்கள் முதல் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அபார நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்தியா- இலங்கை அணி கள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் பைனல் போட்டி இன்று மதியம் மும்பை வான் கடே மைதானத் தில் நடக்கிறது. இந்திய ஜனா திபதி பிரதீபா பாட்டீல் , இல ங்கை அதிபர் மகிந்தா ராஜப க்ஷே, பா.ஜ., மூத்த தலை வர்கள் அத்வானி, நிதின் கட்காரி, காங்., தலைவர் சோ னியா, பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அ மைச்சர்கள் உள்பட முக்கிய வி.ஐ.பி., க்கள் பங்கேற்று போட்டியை ரசிக்கின்றனர். பிரதமர் மன்மோகன் சிங் அசாம் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லவிருப்பதால் இவர் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும் தாம் இந்த போட்டியை அவ்வப்போது கவனித்து வருவேன் என்றும், வீரர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக பல அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

உலக கோப்பை போட்டியில் இந்தியா 1983 ம் ஆண்டில் கோப்பை யை பெற்றது. 28 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் உலக கோப் பை நமக்கு கிட்டும் என்ற எதிர்பார்ப்புகள் மத்தியில் இந்த போட் டி நடக்கிறது.

கேப்டன் தோனிக்கு கன்னி ராசி: அஜய் பாம்பி என்ற ஜோதிடர் தோனியின் ஜாதகத்தை கணித்துள்ளார் அதன்படி 30 வயதாகும் தோனிக்கு கன்னிராசியாகும். இந்தராசியில் சஞ்சரிக்கும் ராகு மற்றும் கேது கிரகங்கள் நன்மைதருவதாக உள்ளதாகவும், இதுபோன்ற கிரக அமைப்பு கடந்த 29-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதும் போது இருந்ததால் எளிதாக வெற்றி பெற முடிந்தது. அதேபோன்ற கிரக அமைப்பு இன்றும் உள்ளதால் இந்தியா கோப் பையை எளிதாக பெறும் என அவர் தெரிவித்தார். இவரைப் போல் மற்ற பெரும்பாலான ஜோதிடர்களும் இந்தியா வெல்லும் என்றே கணித்துள்ளனர்.

நாங்கள் சளைத்தவர்கள் அல்ல உறுமுகிறார் சங்ககரா: இறுதி போட்டி குறித்து மும்பையில் பேட்டியளித்த இலங்கை கேப்டன் சங்ககாரா, இறுதி போட்டியில் இந்தியா எவ்வளவு வலுவான நிலையில் இருக்கிறதோ, இலங்கையும் அதே அளவு வலுவாக இருக்கிறது. நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை . எங்கள் அணி உலக கோப்பை தொடர் முழுவதும் நிதானமாக விளை யாடி, நல்ல நிலையில் இருக்கிறது. எனவே எங்களை குறைவாக மதிப்பிட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

பைனலுக்கு வந்த பாதை

இந்தியா லீக் சுற்று:

1. 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்துடன் வெற்றி.

2. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி “டை’ ஆனது.

3. அயர்லாந்துடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

4. 5 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வென்றது.

5. தென் ஆப்ரிக்காவுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.

6. வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

காலிறுதி:

7. ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அரையிறுதி:

8. பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இலங்கை லீக் சுற்று:

1. 210 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவுடன் வெற்றி

2. பாகிஸ்தானிடம் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

3. கென்யாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

4. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டது

5. 139 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது

6. 112 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது

காலிறுதி:

7. இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

அரையிறுதி:

8. நியூசிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மூன்றாவது முறையாக பைனலில் விளையாட உள்ள இந்தியா, இலங்கை அணிகள், தலா ஒரு முறை உலக கோப்பை வென்று ள்ளன. இதன்மூலம் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, இரண்டாவது முறையாக உலக கோப்பை வென்று சாதிக் கலாம்.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

*-*-*
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: