என்னைப்போன்ற நடிகைகளுக்கு தமிழ் சினிமாதான் மிகவும் வசதியானது என்று நடிகை காவ்யா மாதவன் கூறி யுள்ளார். தமிழில் காசி, சாது மிரண்டால் உள்ளிட்ட படங் களில் நடித் திருப்பவர் நடி கை காவ்யா மாதவன். ஏரா ளமான மலையாள படங்க ளிலும் நடித்திருக்கிறார். இவருக்கும், விஷால் சந்திரா என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து ஒரு ஆண்டிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவுக்கு
முழுக்கு போட் டிருந்த காவ்யா மாத வன், இப்போது வாய்ப்பு கேட்டு திரை யுலக பிரபலங்களின வாயிற் கத வை தட்டத் தொடங்கி யிருக்கி றார்.
தற்போது அவர் கிறிஸ்டியன் பிரதர் ஸ், சைனாடவுன் ஆகிய மலையா ளப் படங்களிலும், தம்பி துரை என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். மறுபிரவேசம் குறித்து அவர் அளித்துள்ள பேட் டியில், கதா நாயகி க்கு முக்கியத்துவம் உள்ள கதைய ம்சம் உள் ள படங்களில் நடிக்கவே எனக்கு விருப்பம் அதிகம். அதுபோன்ற படங்களில்தான் நடிப்புத்திற மை யை வெளிப்படுத்த முடி யும். எல்லா நடிகைகளுமே இது மாதிரி படங்களில் நடிக்கத்தான் ஆர்வமாக உள்ளனர். சினிமா வை விட்டு 6 மாதங்கள்தான் விலகி இருந்தேன். இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளேன். நிறைய கதா நாயகிகள் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவே விரு ம்புகின்றனர். காரணம் இங்குதான் நிறைய வித்தியாசமான முய ற்சிகள் நடக்கின்றன. தமிழ்சினிமாதான் மிகவும் வசதி யானது. அதனால் மலையாளத்தில் நடித்தாலும் நானும் தமிழ் படங்க ளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கிறேன். இங்குள்ள ரசிகர்கள் ரொம்ப அன்பானவர்கள், என்று கூறியுள்ளார்.
( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )
*-*-*
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது