Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (03/04)

அன்புள்ள அம்மாவுக்கு —
எனக்கு திருமணமாகி, இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. என் திருமணம், காதல் திரு மணம் என்பதால், இதுவரை, என் வீட்டில் என்னை  . என் றாலும், அந்த குறை தெரியாது, என் கணவர் பார்த் துக் கொள் கிறார். எனக்கு, ஒரு வயதில், பெண் குழந்தை உண்டு. என் மாமியார், மாமனாரை அம்மா, அப்பாவாக எண்ணி, அவர் களை அப்படித்தான் கூப்பிடுவேன்.

என் வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. என் கணவர் பணி நிமித்தம்,, ஒரு நாள் விட்டு, ஒரு நாள் தான் இரவில் வீட்டில் இருப்பார். அவர், வீட்டில் இல்லாத நேரத்தில், தனியாக இருக்க வேண்டாம் என்று, என் அத்தையும், மாமாவும் என் அறையில் தான் படுத்துக் கொள்வர்.

ஒரு மாதத்திற்கு முன், என் அத்தை வெளியூர் சென்றிருந்தார்; என் கணவரும், வேலைக்கு சென்று விட்டார். அன்று, என் கணவரின் அண்ணன், அண்ணி மற்றும் என் மாமனார் வீட்டில் இருந்தனர். வீட்டின்முன் அறையில், வழக்கம் போல், என் மாம னார் படுத்துக்கொண்டார். அடுத்த அறையில், என் கணவரின் அண்ணனும், அண்ணியும் படுத்திருந்தனர்.

இரவு, திடீர் என்று என் மாமனார், என்னிடம், தப்பான எண்ண த்துடன், பக்கத்தில் வந்து படுத்தார். அந்த இரவில் என்ன செய் வது என்று தெரியாமல், அவரை திட்டிவிட்டு, படுத்துக் கொண் டேன். என் மகளுக்கு பால் கொடுக்கும் போது, நான் தூங்கி விட்டால், வந்து பார்ப்பாரோ என்ற பயத்தால், இரவு முழுக்க எனக்கு தூக்கம் வரவில்லை.

விடிந்ததும், இரவு நடந்ததை, யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்தேன். பின், என் கணவரின் அண்ணியிடமும், என் கணவரிடமும் கூறினேன். “எதுவாக இருந்தாலும், நான் வீட்டுக்கு வந்தவுடன் பேசிக் கொள்ளலாம்….’ என்று கூறி விட்டார் என் கணவர்.

ஆனால், என் கணவரின் அண்ணன், என் மாமனார் வீட்டுக்கு வந்தவுடன், அவரை திட்டி, அடிக்கச் சென்று விட்டார்.

உடனே அவரிடம், நான்தான் அவரின் அருகில் சென்று, தப்பான எண்ணத்துடன் படுத்ததாக கூறினார் என் மாமனார்; அதையே, என்னிடமும் கூறினார். அதை கேட்டவுடன், எனக்கு கோபம் வந்து, அவரை அடித்து விட்டேன்.

என் குடும்பம், கூட்டுக் குடும்பம் என்பதால், அவரும், நானும், ஒரே வீட்டில் தான் இருக்க வேண்டும். எனக்கு அவர் முகத்தை பார்க்கும் போதெல்லாம், அந்த இரவு நடந்தது தான், நினைவுக்கு வருகிறது.

மற்றவர்களும், என் கணவரும், “நடந்ததை மறந்து விடு; அவரை மன்னித்து விடு…’ என்று கூறுகின்றனர்; என்னால், அது முடிய வில்லை. என் கணவரிடம், “நாம் தனிக்குடித்தனம் சென்று விடலாம்…’ என்று கூறுகிறேன்.

நான் என்ன முடிவை எடுப்பது என்று நீங்களே கூறுங்கள்.
— இப்படிக்கு,
உங்கள் அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —

உன் கணவர், இரவுப் பணிக்கு போகும் போதெல்லாம், உனக்கு துணையாக, மாமானரும், மாமியாரும், உன் அறையில் படுத் திருக்கின்றனர். நள்ளிரவில் இயற்கை உபாதையை கழிக்க எழும் உன் மாமனார், குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு, ஜாக்கெட் பட்டன் போடாமல், படுத்திருக்கும் உன்னை, பார்த்தி ருக்கக் கூடும்.

தவிர, நிறைய பெண்கள் தூங்கும் போது, சிறிதும் லஜ்ஜை இன்றி, அலங்கோலமாய் படுத்திருப்பர். நிறைய வீடுகளில் அம்மாக்கள், பெண்கள் தூங்கும் போது, வலப்பக்கம் ஒருக்களித்து படுக்க சொல்லித் தருவதில்லை. விளைவு, பரிசோதனைக் கூடங்களில், ஆணியடிக்கப்பட்டு, மல்லாக்க கிடக்கும் தவளைகள் போல் கிடக்கின்றனர்.

உன்னுடைய அலங்கோல காட்சிகளை, பல நாள் பார்த்து, மனம் திரிந்து போய் இருந்திருக்கிறார் உன் மாமனார். பொதுவாக, மாமனார்கள், 65 – 70 வயதில் இருப்பர்; உன் மாமனாருக்கு, 55 வயது இருக்கும். இந்த மாதிரியான கிழங்கள் ஆபத்தானவை. இவற்றை, பாம்பு என்று ஒதுங்கவும் முடியாது; பழுது என்று மிதிக்கவும் முடியாது.

உன் துணைக்கு, மாமியார் மட்டும் படுத்திருக்க வேண்டும். கிழம் தனியாக படுக்காமல், மனைவியுடன் ஜோடி சேர்ந்து படுத்திரு க்கிறது. பார்க்க கூடாத காட்சிகளை பார்த்து, சூடேறியிருக்கிறது. பகல்களில் கூட கிழம், நீ ஆடை மாற்றுவதை, குளிப்பதை அகஸ் மாத்தாய் நோட்டமிடும் போல…­

நீ தான் விரும்பி, அவரிடம் போய் படுத்துக் கொண்டாய் என்ற மாமனாரின் அக்மார்க் பொய்யை, கணவனும், கணவன் வீட்டா ரும் நம்பியிருந்தால் உன் கதி?

உன் மாமனாரின் கடந்த கால திருவிளையாடல்கள், அவர் களுக்கு தெரியும் போல; அதனால் தான், அவர்கள் அந்த கிழத்தை நம்பவில்லை.

நீ, அந்த கிழநரியை அடித்தது, தப்பே இல்லை. ஒரு அடியுடன் நில்லாது, அவரை துவைத்து எடுத்திருக்க வேண்டும்.

அடிபட்ட பாம்பு, உன் மாமனார். உன்னை பழிவாங்க, தக்க சந்தர்ப் பம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார். சாத்தானின் நாள் ஒன்று வரும். உன்னிடம் தவறாக நடக்க முயற்சிப்பார்; மறுப்பாய். உன் கழுத்தை நெரித்துக் கொல்லப் பார்ப்பார் அல்லது நீ கையில்  வைத்து, சாத்தி, அவருக்கு மரணக்காயம் ஏற்பட வைப்பாய். இந்த முட்டல், மோதலில் உன் கைக்குழந்தையும், சிக்கலாம்.

இதை, உன் கணவரிடமும், மாமியாரிடமும் விளக்கு. “எவ்வித அசம்பாவிதமும் நடக்காமலிருக்க, தனிக்குடித்தனம் போக அனுமதியுங்கள்…’ என, இறைஞ்சு.

தனிக் குடித்தனத்துக்கு ஒரேயடியாக மறுத்தால், கீழ்க்கண்ட நிபந்தனைகளை விதித்து, கணவனின் கூட்டுக் குடும்பத்தில் தங்கு —

* உன் கணவரின் இரவுப் பணியை, பகல் பணியாக மாற்றி, வா ங்கச் சொல்.

*உன் மாமனாரின் ஜாகையை, எதாவது ஒரு உறவினர் வீட்டுக்கு மாற் றச் சொல். ஒரு வருடத்திற்கான, தற்காலிக ஏற்பாடு இது.

* பாத்ரூம் அட்டாச்டு அறையை, கேட்டு வாங்கு. தூங்கும்போது, கதவை உட்புறமாக பூட்டு.

*மாமனாரின் நடத்தையிலோ, பார்வையிலோ மாற்றம் இல்லா விட்டால், “மாமா என்றோ, அப்பா என்றோ கூப்பிட மாட்டேன்;

“குப்பைத்தொட்டி’ என்றுதான் கூப்பிடுவேன்…’ என்று சொல்.

*முத்தாய்ப்பாக, “நள்ளிரவில் மீண்டும் தொந்தரவு செய்தால், திட்ட மாட்டேன், அறைய மாட்டேன், இரும்புக் கம்பியை வைத் து, மாமனாரின் தலையில், ஒரே போடாக போட்டு விடுவேன். விளை வுகளுக்கு, நீங்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்…’ என்று கூறு.

எல்லாவற்றுக்கும் மேலாக, உன் பிறந்த வீட்டுக்கு வெள்ளைக் கொடி காட்டி, அவர்களுடன் சேரப் பார். அவர்கள் வந்துவிட்டால், உனக்கு அசுர பலம்தான்.

— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

 

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: