Wednesday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலககோப்பை கிரிக்கெட் போட்டி: சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியா

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இந்திய அணியில் ஆஷிஸ் நெஹராவுக்கு பதிலாக ஸ்ரீசாந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதன்படி தொடக்க வீரர்களாக தில்சானும், தரங்காவும் களம் இறங்கி நிதானமாக விளையாடி வந்தனர். ஜாகீர்கான் வீசிய 7-வது ஓவரில் முதல் பந்தில் தரங்கா 2 ரன் அடித்திருந்த போது ஷேவாக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் களம்  இறங்கிய  கேப்டன் சங்ககரா பொறுப்புடன் விளையாடி வந்தார் மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த தில்சான் ஹர்பஜன் சிங் வீசிய 17-வது ஓவரில் போல்டு ஆனார் அவர் 33 ரன்கள் எடுத்தார்.
அப்போது ஸ்கோர் 2 விக்கெட்டை பறிகொடுத்து 60 ரன்னாக இருந்தது.   அடுத்து வந்த ஜெயவர்த்தனே கேப்டன் சங்ககராவுடன் ஜோடி சேர்ந்தார் இருவரும் விக்கெட்டை காப்பாற்றும் நோக்கத்துடன் விளையாடி வந்தனர். 27.5 ஓவரில் சங்ககரா 48 ரன் எடுத்திருந்தபோது யுவராஜ் சிங் பந்தில் டோனியிடன் கேட்ச் ஆனார்.
அடுத்ததாக வந்த சமரவீரா அடித்து விளையாடினார் எதிர் முனையில்   ஜெயவர்த்தனே அரை சதம் அடித்தார். ஸ்கோர் 179 ரன் இருக்கும்போது யுவராஜ் சிங் வீசிய ஓவரில் சமரவீரா 21 ரன் எடுத்திருந்தது போது எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். அதன் பின் வந்த கபுகேந்திரா 1 ரன்னில் பெவுலியன் திரும்பினார்.
அவரை தொடர்ந்து வந்த குலசேகரா ஜெயவர்த்தனேவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். சிறிது நேரத்தில் ஜெயவர்த்தனே சதம் அடித்தார். 40-வது ஓவரில் குலசேகரா ரன் அவுட் ஆனார். அவர் 32 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த பெரைரா அதிரடியாக விளையாடி ரன் குவித்தார்.

இறுதியாக இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் சேர்த்தது. ஜெயவர்த்தனே 103 ரன்னு டனும் பெரைரா 22 ரன்னுடனும் களத்தில் அவுட் ஆகாமல் இருந் தனர். பந்து வீச்சாளர்கள் தரப்பில் அதிக பட்சமாக ஜாகீர்கான், யுவராஜ்சிங் தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர்.

275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

*-*-*
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply