Monday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேர்தல் விதிமுறை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

  • பிரசாரத்தின் போது, சாதி, மத, மொழி உணர்வுகளை தூண் டும் வகையில் பேசி னாலோ அல்லது இறை யாண்மையை பாதிக்கும் வகையில் பேசினாலோ இந்திய தண்டனை சட்டம், பிரிவு-125, 153.(ஏ) மற் றும் 153.(பி) யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
  • பொது இடங்களில், சுவர் விளம்பரம் மற்றும் போஸ்டர்கள் ஒட்டினால், தமிழ்நாடு, பொது இட சீர்குலைப்பின் பிரிவு- 2-4(ஏ)ன்கீழ் வழக்கு பதிவு செய்து, ஒரு ஆண்டு சிறை தண்ட னை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
  • பிரசார மற்றும் பொதுக்கூட்டங்களில் வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்களை கட்சிகள் வினியோ கிப்பது தெரியவந்தால், பொதுமக்கள் குடியுரிமை சட்டத் தின் பிரிவு-171.(பி) ன் கீழ் வழக்கு பதிவுச் செய்ய ப்பட்டு, ஒரு வருடம் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.
  • வாக்காளர்களுக்கு உணவு மற்றும் மது வினியோகம் செய் வது கண்டுபிடிக்கப்பட்டால் பொதுமக்கள் குடியுரிமை சட்ட த்தின் பிரிவு-123, 151 மற்றும் 135.(சி)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குறைந்த கால சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
  • பிரசாரத்தின் போது வெளியிடப்படும் துண்டு பிரசுர ங்களில் அச்சகத்தின் முகவரி இல்லாவிட்டால், பொது மக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-127.(ஏ) ன் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, ஆறு மாத சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.
  • தேர்தலில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்திற்கும் தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி சீட்டு பெற் று, அதை வாகனத்தின் முன் ஒட்டியிருக்க வேண்டும். மீறி னால், இந்திய தண்டனை சட்டம், பிரிவு-171.(எச்) யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
  • தேர்தலில் ஆள்மாறாட்டம் செய்தாலோ அல்லது வேறு விதமான குற்ற செயல்களில் ஈடுபட்டாலோ இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு- 171.(டி) ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு வருடம் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கப்படும்.
  • தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் வரும், ஏப்ரல் மாதம் 11ம் தேதி மாலை 5மணிக்குள் முடிக்கப்பட வேண்டும். மீறுபவர் கள் மீது, பொதுமக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-126 ன் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
  • வாக்குப்பதிவு தினத்தன்று கட்சிகளால் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகள் வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்க வேண்டும். இதை, மீறுப வர்கள் மீது பொதுமக்கள் குடியுரிமை சட்டத்தின் பிரிவு-130 ன் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டு அபராதம் விதிக் கப்படும். எனவே, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட் சிகள் விதிமுறைகளை பின்பற்றி தேர்தலை அமை தியான முறையில் நடத்த ஒத்துழைக்க வேண்டும்.
  • தேர்தல் பிரசாரத்திற்கு கட்சித்தலைவர்கள் போகும் போது அவர்களின் வாகனத்திற்கு பின்னால் அதிகபட்சம் 10 வாகனங்கள்தான் செல்ல வேண்டும். அவை தவிர பாதுகா ப்பு வாகனங்களும் உடன் செல்லலாம்
  • ஆண், பெண் ஓட்டு சாவடிகளை மாற்றி பொது ஓட்டு சாவடி அமைப்பு
  • வாக்காளரின் போட்டோவுடன் “பூத் சிலிப்புகளை’ வீடு வீடாக சென்று, தேர்தல் கமிஷனே வழங்கும்.
  • வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, மகன், மகள், மனைவி சொத்து பட்டியலையும் தாக்கல் செய்ய வேண்டும்.
  • வேட்பாளர் செலவு கணக்கிற்காக, வங்கியில் தனி கணக்கு துவங்க வேண்டும். அதிகபட்சமாக 16 லட்சம் ரூபாய் செல விடலாம். வேட்பாளர்களின் டெபாசிட் தொகை உயர்வு. (தனி தொகுதிகளில் 2, 500ல் இருந்து 5000 ரூபாயாகவும், பிற தொகுதிகளில் 5000ல் இருந்து 10 ஆயிரமாகவும் அதிகரிப்பு)
  • விளம்பரங்கள் வெளியிடுவதை கண்காணிக்க குழு. சுவர் விளம்பரங்கள், பிளக்ஸ் போர்டுகளில் இடம்பெறும் வாசக ங்களையும், தேர்தல் பிரிவின் அனுமதி பெற்று வைக்க வேண்டும்.
  • காரில் கட்சி கொடி கட்டினால், அதற்கான அனுமதியை வாங்கி காரிலேயே வைத்திருக்க வேண்டும்.
  • >ஓட்டு சாவடி அலுவலர்கள் ஓட்டுப்பதிவு நிலவரம் குறித்து தேர்தல் கமிஷனுக்கு மட்டுமே தெரிவிக்க வேண்டும். அங்கி ருந்து தான் மாவட்ட நிர்வாகங் களுக்கு தகவல் தெரி விக்கப்படும்.
  • பொது இடங்களில்,கொடிக்கம்பங்களில் கட்சிக்கொடிகள் அகற்றப்பட வேண்டும். கம்பங்களில் வண்ணங்களை அழி க்க வேண்டும்.
  • கிராமப்புறங்களில் மட்டுமே தனியார் சுவர்களில், அனு மதியுடன் கட்சிகள் விளம்பரங்கள் எழுதலாம். பிற பகு திகளில் தனியார் சுவர்களிலும் போஸ்டர், பேனர், படம் இருக்கக் கூடாது.
  • மக்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு கூடுதலாக பணம் எடுத்துச் செல்ல தடை.
  • மூன்று மது பாட்டில்களுக்கு மேல் எடுத்துச்செல்ல தடை.
  • கிராமப்புறமாக இருந்தாலும், இரவு 10 மணிக்குள் பிரசாரத்தை முடிக்க வேண்டும்.
  • ஒருவரே பல ஓட்டுக்களை பதிவு செய்யும் போக்கை தடுக்க இடது கை சுட்டுவிரலில் நகம்& சதைப் பகுதியில் சில்வர் நைட்ரேட் எனும் அழியாத மை வைக்கப்படுகிறது. இதில் சிலருக்கு இடது கை சுட்டு விரல் இல்லாமல் இருந்தால் அடுத்த நடுவிரலுக்கு இட வேண்டும்.
  • அந்த விரலும் இல்லாவிட்டால் மற்ற விரல்களில் இட்டுக் கொள்ளலாம். இடது கையில் எந்த விரலுமே இல்லாத வாக்காளர் என்றால் வலது கை சுட்டுவிரலில் இடலாம். அந்த விரலும் இல்லாவிட்டால் அடுத்தடுத்த விரல்களில் இந்த மையை இட்டுக் கொள்ளலாம்.
  • இரண்டு கைகளிலுமே ஏதேனும் விபத்து மூலம் விரல்கள் துண்டிக்கப்பட்டிருந்தால் இடது கை மணிக்கட்டில் இதற்கான மையை இட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
  • வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் வழங்கும் வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்பை கொண்டும் ஓட்டுப் போடலாம்
  • ஓட்டுபோட விருப்பமில்லை என்று பதிவு செய்ய 49ஓ விதியின் படி 17ஏ விண்ணப்பத்தில் (வாக்களர் அட்டவணை புத்தகம்) வாக்களரின் பதிவு எண் குறிக்கப்பட்டு உங்கள் பெய ருக்கு நேராக யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று எழுதப்பட்டு அலுவலர் முன்னிலையில் அதற்கு நேராக உங்கள் கையெழுத்தோ இல்லை கைரேகையோ பதிய ப்பட வேண்டும்.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

*-*-*
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply