இன்றைய அவசர உலகில் பெரும்பாலானவர்கள் தூக்கமில் லாமல் தவிக்கிறார்கள் என்று கூறுகிறது ஒரு சர்வே! முன் பெல்லாம் உடல் உழைப்பு தான் பிரதான மாக இருக்கும். அத னால் படுத்தவுட னேயே தூக்கம் கண்களை தழுவி விடும்!
ஆனால் இன்றைக்கு பெரும் பாலான வேலைகளில் உடல் உழைப்பை குறை த்து… அறிவு சார்ந்த பணிகள்தான் அதிகம். அதனால் தூக்கமி ன்மை யும் பெருகி வருவது சகஜம்தான். என்றாலும் உறக்கத்திற்கான வழி முறை யை நாம் பின்பற்றினால் தூக்கம் என்பது துக்கமாக இருக்காது!
அதற்கான 15 டிப்ஸ்கள் இதோ…
* குறிப்பிட்ட நேரத்தில் படுக்கவும். தாமத மாக படுப்பதால் உருண்டு, புரண்டு கொண் டிருப்போமே தவிர, தூக்கம் வருவது சிரமமாக இருக்கும்.
* உறக்கம் வரவில்லை என்று தெரியும் போது, படுக்கையில் நேரத்தை செலவிட வேண்டாம். தூக்கம் வரும் அந்த நிமிடத்தில் படுத்தால் போதும்.
* படுக்கை அறை என்பது தூங்குவதற்கு மட்டுமே… திருமணம் ஆகியி ருந்தால், மனைவி, கணவர் இருவருக்குமான வாழ்க் கையை ரசிக்கு மிடம். ஆதலால் படுக்கையறை க்குள் இந்த இரண்டை மட் டுமே சிந்தி க்க வேண்டும். வேறு எந்த நினை ப்பையும் சுமந்து கொண்டு படுக்கை யறைக்குள் நுழைய வேண் டாம்.
* ஒரே படுக்கையில் தொடர்ந்து படுக்கவும். படுக்கையை மாற்றி னாலும் தூக்கம் வராமல் தொந்தரவாக மாறிவிடும்.
* தூக்கம் வரவில்லை என் றவுடன் படுக்கை யறை யை விட்டு வெளி யே றுங்கள். ஏதாவது போர டிக்கும் புத்தகத்தை படிக்க லாம். அல்லது ஒரு வேலையை செய்து கொண் டிருந்தால் சிறிது நேரத்தில் தூக்கம் வந்து விடும்.
* தூங்குவதற்கு சில நிமிடங் களுக்கு முன்னால் லேசான சுடுநீரில் குளித்தால் உறக்கம் நன்றாக வரும்.
* தூங்கும்போது தளர்வான… அதாவது லூசான உடைக ளை அணிய வும். குறிப்பாக காட்டன் உடைகள் நல்லது. ப்ரஷ்ஷான உடை களை… அணிந்து… படுத்தால் மகிழ்ச்சியான தூக்கம் வரும்.
* படுக்கையறையில் வெளிச் சம், சத்தம், வெப்பம், குளிர் என்று தொந் தரவு தரும் விஷயங்கள் இருக்க வேண் டாம். குறிப்பாக `கடகட’ வென் று சுத்தும் மின் விசிறியின் சத்தம் உங்களுடைய தூக்கத் திற்கு தடையை ஏற்படு த்தும்.
* நிம்மதியான தூக்கத்திற்கு படுக்கையின் அமைப்பும் அவசியம். முது குக்கு நல்ல சப்போ ர்ட்டாக இருக் கும் பெட் அமைப்பு இருந் தால் நல் லது. படுக்கை மீது அழகான விரிப்புகளும், அழகான தலையணை உறைகளும் உங்களுடைய தூக்கத்தை சந்தோஷமாக மாற்றும்.
சுருக்கத்துடன், அழுக்காக படுக்கை விரி ப்பு மற்றும் தலையணை உறைகள் இருந் தால் தூக்கம் வருவதற்கு தடை ஏற்படும். அதேபோல், கம்பளி போன்ற வற்றால் போர்த்தி படுத்தாலும் எரிச் சலை உருவா க்கும். அதற்கு முன்னதாக நைலான் துணியை போர்த்தி அதன் மேல் கம்பளி போர்வையை போர்த்த லாம்.
* தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட்டு விட வும். தூங்குவதற்கு முன் ஒரு கப் பால் சாப்பிடலாம். பாலில் உள்ள குறிப்பிட்ட சத்து மூ ளையிலிருந்து நமக்கு தூக்க த்தை வரவழைக்கும்.
* காபி, டீ, குளிர்பானம் மற் றும் சாக்லேட் உணவுகளை இரவில் சாப்பி டக்கூடாது. இதில் உள்ள காபின், நமது உடலில் 5 மணி நேரத்திற்கு இயங்கும். சிலருடைய உடல் வாகுக்கு 12 மணி நேரம் கூட செயல் படும். இந்த காபின் தூக்கத்தை கெடுக்கும் தன்மை உடையது.
* மது குடித்தால் தூக்கம் வரும் என்பது தவறான கருத்து. மது, புகை தூக்கத்தை கெடுக்கும் வஸ் துகள். மது அருந்தி தூங்கினால் இடை யில் முழிப்பு வரும். அதே போல் புகை பிடிப் பதால் அதிலுள்ள நிகோடின் தூக்கத்தை கெடுத்து, தலை வலியை உண்டாக்கும்.
* தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் தூக்கம் ஈஸியாக வரு ம். தூங் குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு வரை உடற்பயிற்சி செய் யலாம். தினமும் காலையில் உடற்பயிற்சி என்பது தூக்கத்திற்கான தடையை நீக்கி விடும்.
* உடலில் எந்த நோய் தாக்கினாலும் அத னால் பாதிப்பு ஏற்படுவது தூக்கத்திற்கு தான். சிகிச்சைக்காக டாக்டரிடம் செல்லும்போது தூக்கத்தின் தன் மையைப் பற்றி கூறுவது நல்லது. சில வகையான மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவதால் அடிக்கடி சிறுநீர் வெளி யேறும். இத னாலும் இரவில் தூக்கம் கெடும்.
* வாழ்க்கையில் சிக்கல், வேலை நெரு க்கடி, மன இறுக்கம், மனக் குழப் பம் ஆகிய வற்றை நினைத்து பயப்பட்டால் இரவில் தூக்கம் என்பது சிரமம்தான்.
- cat
இரவில் படுக்கப் போகும்போது, இந்த மாதிரி விஷயங்களை `காலை யில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று நிம்ம தியாக தூங்கப் பழகுங்கள்.
தூங்கும்போது வேறு எந்த நினைப்பும் வேண்டாம்.
( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
like லைலைக் யூ டியூப் லைட்