Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனச்சோர்வை விரட்ட . . .

மனச்சோர்வு என்பது மன அழுத்தம் என்றும் வழங்கப்படுகின்றது. உறக்கம் அசதியும் சோர்வும் ஒன் றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. மனச்சோர்வு பல வகைப்படும்.

இது ஏன் ஏற்படுகின்றது? அறிவியலா ளர்க்கே விடைதெரியாத கேள்வி இது!

எதற்கெடுத்தாலும் சோர்வுதான்! அடிப்படையாக, உள்ளே இருக்கும் உயிர்சக்தியை கெடுத்தால் நேரடியாக சோர்வுதான். அப்படி இல்லா விட்டாலும், உற்சாகத்தை கெடுத்தாலும் சோர் வுதான்.

கேட்க சாதரணமாகத் தோன் றினாலும், இது வாழ்க்கை அடிப் படை யையே மாற்றும் ஒரு விஷயம். கோர்வையாக ஒரு கணம் தாண்டி இன் னொரு கணம் வருவது தானே வாழ்க் கை. உற்சாகம் இல்லா விட் டால் எப்படி?

ஒரு துறையில் வேகமாய் முன்னேறிக் கொண்டே செல்கிற போது தெரியாமல் ஏற்படும் பின்னடைவுகள் ஒரு மனிதனை சோர் வடையச் செய்கிறது. ஏன்? எதனால்?

ஒரேயொரு காரணம்தான் உண்டு. மற்ற வர்கள் பார்க்கும் அதிர்ச் சிமிக்க பார்வை, ஒரு சிலரின் ஏளனப் பார்வை.

அந்தத் துறையில் இயங்கிக் கொண்டு இருப்பவர்களுக்குத் தெரியும், அந்தப் பின்னடைவை எளிதில் சமாளிக்க முடியும் என்று.

ஆனால், அடுத்தவர்களின் அனுதாபப் பார் வையாலும் சந்தேகப் பார்வை யாலும் அவர்க ளுக்கே சில சமயம் சோர்வு வந்துவிடும்.

அக்கறை யாலோ, பதட்டத்திலோ ஆளுக்கொரு அறிவுரையும் உபதேசம் சொல்லி, சேற்றில் சிக்கிய வண்டியை இழுப்பதாய் நினைத்து இன்னும் ஆழமாய் புதைப்பதும் சில நேரங்களில் நடக்கும்.

உண்மையில் மனிதர்கள் தங்களுக்கு வருகிற பின்னடைவின்போது என்ன மன நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதிலிருந்து மீள்வது நிகழும்.

உதாரணமாக, ஒருவர் உடல்நலக் குறைவுக்கு ஆளாகிறார் என்று வைத் துக் கொள்ளுங்கள். இப்படி நேர்ந்து விட்டதே என்று சோர்வாக அமர்வதை விடவும் சரியானவழி, தீர்வை நோக்கி நகர்வதுதான். அதாவது ஒரு மருத் துவரிடம் போவது. மருத்துவரிடம் போவது என்று முடிவெடுத்த விநாடி யிலிருந்தே அவர் அந்தப் பின்னடை விலிருந்து மீள்வதற்கான முதலடியை எடுத்துவைக்கிறார்.

உடலுக்குப் பின்னடைவு வருகையில் உடனே செயல்படும் மனிதர்கள், மனதுக்குப் பின்னடைவு வரும் போது சோர்வாய் அமர்வதும், தீர்வு நோக்கிய பயணத்தைத் தள்ளிப் போடுவதுமே அவர்களின் நிலை மோசமாகக் காரணம்.

பொதுவாகவே பின்னடைவுகள், நம்முடைய பய ணத்தின் வேகத்தை தீவிரப் படுத்தவோ, அல்லது சரியான திசையில் செல்லவோ நினைவூ ட்டுவதற்காகவே நேர்கின்றன.

பின்னடைவுகளைக் கையாள்வதில் இருக்கும் வெற்றிதான் இலக்கு எட்டுவதில் நம்மை துரிதப் படுத் துகிறது. இன்னும் தெளி வான பயண த்தை நமக்குத் தருகிறது.

உலகின் பல சாதனையாளர்கள், பின் ன டைவிலிருந்து மீள்வது பற்றி ஒரு வரியில் சொல்லியுள்ள உயிர்ப்பு மிக்க அனுபவப் பதி வுகள் சோர்வி லிருக்கும் யாரை யுமே தீர்வு நோக்கி நகர்த்தும் தனித்தன்மை வாய்ந் தவை.

* எதிர்பாராமல் ஏற்படுகிற பின்னடைவை சரியாக ஆராய்ந்தால், அது எதிர்கால வெற்றியை வரையறை செய்யும் வாய்ப்பாக அமை கிறது.

* சவாலான நிமிஷங்களை சாதா ரண மான மனிதர்கள் எதிர்கொள்ள மட்டுமே செய்கிறார்கள். சாத னையாளர்களோ, சவாலை எதிர் கொண்டு, இன்னும் பலமாய் வெளிப் படு கிறார்கள்.

* பதட்டம் தருகிற சூழ்நிலை என்பது, முடிந்து போகிற முட்டுச்சந்து என் று நினைப்பவர்கள் பதறுவார்கள். அது திருப்பங்கள் ஏற்படுத்தும் திருப்புமு னை என்று நினைப்பவர்கள் வளரு வார்கள்.

* எதிர்மறையான மனிதர்களை எதிர் கொண்டும் நேர்மறையாய் செயல்படுவது தான் உண் மையான முன் னேற்றம். எல்லாவற்றையும் நல்ல தாகவே பார்க்கும் நம்பி க்கை மனிதர்களை மட் டுமே கொண்டதல்ல வாழ் க்கை.

* ஒரு செயலைச் செய்ய உங்க ளால் முடியாதென்று நினை ப்பவர்களை சந்திக்க நேர்கிறதா? உங்கள் மேல் நம்பிக்கை வைத்துள்ள மனிதர்களின் நினைவு அங்கே தோன்றட்டும்.

* ஒரு செயலை நீங்கள் செய்தது பற்றிய விமர்சனங்கள் உங்கள் காதுகளில் விழு கின்றனவா? அதில் இருக்கும் நடுநிலை யான கருத்துக்கள் மட்டுமே நெஞ்சில் தங்கட்டும்.

* உங்கள்மேல் உங்களுக்கே சந்தேகம் தோ ன்றுகிறதா? உங்களுடன் நீங்கள் உட்கா ர்ந்து பேச, இதுதான் சரியான நேரம். உங்கள் பலங்கள் பலவீனங்களை அலசு ங்கள். சந்தேகம் என்கிற கறை காணாமலே போகும்.

* உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீது சந்தேகம் வருகிறதா? அது எல்லோரையும் சந்தேகிக்கும் நோயாக வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கொரு வழி இருக் கிறது. உங்களை உயர்த்துவ தற்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்களை நினைவில் கொண்டு நிறுத்துங்கள்.

* அதிகாலை நேர நடைப்பயிற்சியின் போது, உங்கள் திறன்க ளுக்காகவும், உங்கள் வாழ்க் கைக்காகவும், கடவுளுக்கு நன்றி சொல் லும் விதமாய், நன்றியுண ர்வை உங்களுக்குள் நிரப்பிக்கொள்ளுங்கள்.

* அச்சம் வரும்போதெல்லாம் நம்பி க்கை கொள்ளுங்கள். நம்பிக் கையின் உயரம், அச்சத்தின் உயரத்தைவிட அதிக மாய் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

* உள்ளுக்குள்ளே அயர்வு தலைகாட்டும் போது கடவுளை நோக்கி உங்களை முழு வதும் ஒப்படையுங்கள். அந்தப் பெரும் சக்தி தரும் சக்தியை மீண்டும் பெற்றுக் கொண்டு மீண்டு வாருங்கள்.

* நீங்களே உங்களை அறிந்திருக்கும் அறிவுகூட மேலோட்டமான அறிவுதான். அப்படியிருக்க, மற்றவர்கள் உங்களைக் குறைவாக எடைபோட்டால் அதற்காக வருந் தாதீர்கள். உரிய நேரத்தில் உங்கள் செய ல்திறன் வெளிப்படும்போதுதான். உலகு க்கும் உங்களுக்கும், உங்களைப்பற்றித் தெரிகிறது.

* சில விஷயங்களைத் தக்கவைக்க முயல் வதால் வாழ்வின் மற்ற விஷய ங்கள் பாதிக் கிறதா? சிறிதும் தயங்கா மல் அவற்றை வெளியேற விடுங்கள்.

* ஒரு சூழலை நீங்கள் கடப்பீர்களா மாட் டீர்களா என்ற கேள்வியுடன் எல்லோரும் உங்களை எதிர் நோக்குகிறபோது, அந்தச் சூழலை ஒரு விளையாட்டு மைதானமாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். சிரித்த முகத்துடன் அந்த விளையாட்டில் பங்கெடு ங்கள்.

உறக்கம் அசதியும் சோர்வும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது.

நீண்ட நேரம் தூங்கவேண்டாம், நல்ல ஆழ் ந்த தூக்கம் கிடைத்தால் போதும் என்று சொல் பவர்கள், தொடர்ந்து அசதியையும் சோர் வையும் சேமிக்கிறார்கள். இன்னொ ரு பக்கம், பலருக்கு ஆழ்ந்த தூக்கமே கிடைப்பதில்லை. எப்போதும் கண்களில் தூக்கம் மிச்சமிருக்கும். ஒரு மாதிரி போதை மனநிலையிலேயே இருப்பார்கள்.

பலர் பேசிக்கொண்டே இருக்கும் போது, எதிரே இருப்பவர் கண் அயர் வதைப் பார்க்க முடியும். இசைக்கச் சேரிகள், ஆன்மிகச் சொற் பொழிவு களில் இதுபோல் தம்மை மறந்து உறங்குபவர்கள் அதிகம். மீண்டும் எழுந்தவுடன் ஒருவித கூச்சம் தலை காட்டும்.

நிறைய பேருக்கு தூங்குவதில் பிரச்சி னை இருக்கிறது. விடிகா லை என்பது இவர்களுக்கு பாதிராத்தி ஒன்று அல்லது இரண்டு மணி.
எழுந்து உட்கார்ந்துகொண்டு, வீட்டில் உள்ளதையெல்லாம் குடைந்து கொண்டு இருப்பார்கள்.

கவலை நிறைய பேரைத் தூங்க விடாமல் செய்கிறது. இரவின் தனி மை மிகவும் அகோரமாக இருக்கிறது. உள்ளே பீறிடும் துக்கம் கவலையும் சோகம் ஆதங்கங்களும் இவர்களைத் தூங்க விடாமல் செய்கிறது. ஒவ் வொரு இரவை யும் இவர்கள் கழுத் தைப் பிடித்து வெளியே தள்ளுவது போல், வலியுடன் தள்ளிக்கொண்டு இருக் கிறார்கள். இதில் பலியாவது, தூக்கம். தூக்கமின்மை, எரிச்சலை மேன்மேலும் அதிகப்படு த்துகிறது.

பல்வேறு காரணங்களால் சிலர் இரவில் தூக்கமில்லாமல் தவிப்பார்கள். இதனால் கண் களில் சோர்வு ஏற்பட்டு சுறுசுறு ப்பின்றி காணப் படுவர். இதுபோ ன்ற பிரச்சி னைகளில் சிக்கித் தவிப்பவர்களின் சோர்வை நீக்கி, அவர்களை சுறுசுறுப் பாக மாற்ற ஓரன்ஞ்சை பழத்தி லிருந்து ஜூஸ் பிழிந் து அதை /பிரீசரில் வையுங் கள். பிரீசரை அதிக குளிரூ ட்டி, ஜூஸை ஐஸ் கட்டிகளாக உறைய வையு ங்கள். இவற்றை சுத்தமான வெள்ளைத்துணியில் கட்டி கண்களில் ஒத்தடம் கொடுங்கள். தினந்தோறும் இரவில் இப்படி செய்து வந்தால் ஒரே வாரத்தில் கண் சோர்வு நீங்கி உற்சாகம் பொங்கும்.

மனச் சோர்வு என்பது மன அழுத்தம் என்றும் வழங்கப்படுகின்றது. வேதனை இல்லாத மனிதரே இல்லை. ஆனால் சிலரை இது நோய் வடிவத்தில் பீடிக்கின்றது.

சரி இந்த நோய்க்கு என்ன அறிகுறி?

பசி எடுக்காமல் போவது!

உறக்கத்தில் மாறுபாடு!

உற்சாக மின்மை!

நம்பிக்கையின்மை!

குற்ற உணர்வு!

சிந்திக்க முடியாமை!

மரணம் பற்றிய எண்ணம்

தலைவலி வயிற்று வலி மனச்சோர்வு வருவதற்கு வயது தடையில்லை.
விடலைப் பருவத்தினடேயே இது அதிக மாகத் தென் படுகின்றதாம்! காதல் தோல்வி, மணமுறிவு இந்த இரண் டினாலும் மனச் சோர்வு ஏற்படலாம்.

பொருளாதார நெருக்கடி, குடும் பத் தலைவிக்குத் தலைவலி யாகி மன ச்சோர்வை உண்டாக் கக் கூடும். மனச் சோர்வு பல வகைப்படும். இது ஏன் ஏற்படுகின்றது? அறிவி யலா ளர்க்கே விடை தெயாத கேள்வி இது! குடும்பத்தில் ஏற்க னவே எவரேனும் இந்த நோய்க்கு ஆளாகியிருந்தால், மற்றவருக்கு இது ஏற்பட 70 வீத வாய்ப்புண்டு. இது குணப் படுத்தப்படக்கூடிய ஒரு நோய்தான்? பல வகை சிகிச்சை முறையை மருத்துவர் கையாள்கின்றனர். உலகில் 5 வீதத்தினர் வரை இந்நோய்க்கு ஆளாகியிருக்கின்றனர். நல்ல உணவு, உடற்பயிற்சி நல்ல நண்பர்கள் சீரான குடும்ப உறவு இவை இருந்தால் மனச் சோர்வு நம்மை அண்டாது.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: