Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நோயின்றி ஆரோக்கியமாக வாழும் மனிதர்களின் ரகசியம்

நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழும் மனிதர்களின் ரகசியம் அவர்கள் உண்ணும் உணவு முறையில்தான் ஒளிந் திருக் கிறது.

நமது உணவுகளில் அமிலத் தன்மையும் காரத் தன்மையும் அடங்கி யுள்ளன. ஒவ்வொரு வகையான உணவிலும் ஒவ் வொரு தன்மை தூக்கலாகவும் குறைவாகவும் உள்ளன.

ஆரோக்கியமான உடல் அமைப்பிற்கு எண்பது சதவீத காரத் தன் மையும் இருபது சதவீத அமிலத்தன்மையும் கொண்ட உணவு தேவை. இந்த விகிதத்தில் இருந்தால்தான் நிறைந்த சக்தியும், நீடித்த ஆயுளும் ஆரோக் கியமும் கிடைக்கும். யோகி கள் உண்ணும் உணவை மூன்று வகையாகப் பிரி தனர்.

சாத்வீக உணவு, ரஜோ உணவு, தாமச உணவு என்பவையே அ வை மூன்றும். சாத்வீக உணவு தூய்மையான உணவு. ரஜோ உணவு உயர்ச்சி களைத் தூண்டக் கூடியது. தாமச உணவு என்பது சுத்தமற்ற, ஆரோக்கியமற்ற கெட்டு ப்போன உணவு.

யோகியர் சாத்வீக உணவையே தேர்வு செய்கின்றனர். பால், வெண் ணெய், பழங்கள், காய்கறிகள், தானியங்கள், தேன் ஆகியவை முதல் வகையான சாத்வீக உண வில் அடங்கு கிறது. மாமிசம், மீன், பருப்பு வகைகள், சூடான பொரு ட்கள், உணர்ச்சிகளைத் தூண்ட க்கூடிய ரஜோ உணவாகும்.

புளித்த கெட்டுப்போன கருவாடு மாமிசம், மது, லாகிரி வஸ்துகள் தாமச உணவு வகையாகும். மிருகங்களின் மாமிசம், தானியங்கள், அரிசி இவற்றில் அமிலத்தன்மை அதிகம் உள்ளன. பச்சைப் பட்டாணி, வெங்காயம், கீரை வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றில் காரத்தன்மை உள் ளது.

அமிலத்தன்மை ஒரு சதவீதமும், காரத் தன்மை நான்கு சதவீதமும் கொண்ட உணவையே ஆரோக்கிய வாழ்க் கைக்குத் தேர்வு செய்ய வே ண்டும். குடு ம்ப நலம் பேணும் தாய்மார்கள் சிறந்த உணவு உண்ண வேண்டும்.

வேலை அலுப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் பட்டினி கிடக்கும் பெண்கள் மிகுந்த சக்தி இழுப்புக்கு ஆளாக நேரிடுகிறது. இழந்த சக்தியை ஈடு செய்யவும், உடல் நலம் பேணவும் தேவையான சலோரி சத்துள்ள உணவைக் கண்டறிந்து சாப் பிடுவது அவசியம்.

மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு 1800 லிருந்து 2000 கலோரி வரை உணவு தேவைப்படுகிறது. இதனை அடைவதற்குத் தக்க உணவை அறிந்து சாப்பிடுதல் மிகவும் அவசியம்.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: