ஊழலை எதிர்த்து உண்ணாவிரதமிருக்கும் அன்னா ஹசாரே போராட்டத்துக்கு நாடு முழுவ தும் அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. மாணவர்கள், இளை ஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பட்ட மக்கள் ஊழலுக்கு எதிராக திரள ஆரம்பித்துள்ள னர். இந்த திடீர் எழுச்சி, மத்திய அரசை அதிர்ச்சியடைய வைத்து ள்ளது.
சமூக சேவகரும், காந்திய தொ ண்டருமான அன்னா ஹசாரே, மூன்றாவது நாளாக தனது உண்ணாவிரதத்தை டில்லியில் தொடர்ந்து வருகிறார். ஜந்தர் மந்தர் பகுதியில் மேடை அமை க்கப்பட்டு, அங்கு அவர் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலை யில், அவருடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா முழுவதும் மட்டுமின்றி, உலகின் பல நாடு களில் உள்ள இந்தியர் களும் அவர் போராட்டத்துக்கு ஆதரவு தருகின்றனர். ஹசாரேக்கு குவி கிற ஆதரவை கண்டு, நேற்று மனிதவள மேம்பாட்டு அமை ச்சர் கபில் சிபல் அரசு சார்பில் பேச முன்வந்தார். ஹசாரே சார்பில் சுவாமி அக்னிவேஷ், அமைச்சர் கபில் சிபலை சந்தித்து பேசினார். ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
“லோக்பால் மசோதா தயாரிக்கும் குழுவில் அரசு தரப்பில் 50 சதவீதம் பேர் இருந்தால், பொதுமக்கள் பிரதிநிதிகளாக 50 சத வீதம் பேர் இருக்க வேண் டும். அரசில் நடக்கும் ஊழல் கள் பெருகி விட்டன. எனவே, மசோதா தயாரிப்பு குழுவில் 50 சதவீதம் பேர், பொதுமக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும்’ என்பது ஹசா ரே தரப்பு கோரிக்கை. இதற்கு மத்திய அரசு சார்பில் பேசிய அமைச்சர் கபில் சிபல் மறுப்பு தெரி விக்கவில்லை. காரணம் திரும்ப திரும்ப அரசியல் வாதிகள் மேற் கொள்ளும் சட்ட வரை யறை மற்றும் முடிவுகள் குறிப் பிட்ட விஷயத்தை முன்னிறுத் தாமல் அதை நீர்த்து போக செய்யும் என்ற கருத்தில் பேச்சு நடத்திய அக்னிவேஷ் உறுதிபட தெரிவித்தார்.
அடுத்து, இந்த மசோதா தயாரிப்பு குழுவுக்கு, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைவராக இருப்பார் என்று அரசு தரப்பு கூறியது. அதற்கு, கூடவே கூடாது என, மக்கள் சார் பில் உள்ள பொதுக்குழு மறுப்பு தெரிவித்தது. மே லும், ஹசாரே தான் அந்த குழுவுக்கு தலைவராக இருக்க வேண்டு மென்றும் பொதுக்குழு வலியுறு த்தியது. ஆனால், ஹசாரே கூட லோக்பால் வரைவு மசோதா உருவா க்கும் குழுவிற்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி இருக்கலாம் என்று கருத்து தெரி வித்தார். பிறகு லோக்பால் மசோதாவை, வரும் ஜூன் 20ம் தேதிக்கு முன்பாக தயாரித்து முடித்து, வரும் மழைக்கால கூட்டத்தொடரிலேயே பார்லிமென்டில் தாக்கல் செய்திட வேண்டும் என, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு கபில் சிபல், “மே மாதம் 13ம் தேதி சட்டசபை தேர்தல்கள் நடக்கின்றன. அதனால், கால அவகாசம் இல்லை என்றும், மே 13ம் தேதி வரை லோக்பால் மசோ தாவை தொடவே முடியாது’ என்றார்.
இதற்கு பதிலாக அக்னிவேஷ் “சட்ட சபை தேர்தலை காட்டி லோக்பால் மசோ தாவை தள்ளிப்போட அரசு முயற் சிக்கிறது. அதற்கு இடம் தர முடியாது. லோக்பால் மசோதாவை விரைந்து தயாரித்து தாக்கல் செய் தால் தான் ஆதரவு தருவோம். ஓட்டுப் போடுவோம் என, இம்மாநில மக்கள் உறுதியுடன் கிளர்ந்து எழுந்து நிற்க வேண்டும். அப்போது தான் அரசி யல்வாதிகளுக்கு அறிவு வரும்’ என கூற, பொதுக்குழு அதை ஆமோதித்தது. அதேபோல ஹசாரே தான் தலைவராக இருக்க வேண்டும் என, இந்த இயக்கத்தின் பொதுக்குழு வலியுறுத்தியது. ஹசாரே உண்ணாவிரதப் பந்தலில் உள்ளவர்களே பொதுக் குழுவாக கருதப்படுவதால், அரசு அதை ஏற்கவில்லை என் றும், மீண்டும் அக்னிவேஷுடன் பேச கபில் சிபல் காத்திரு ப்பதாகவும் கூறப்பட்டது. இறுதியாக பேசிய அன்னா ஹசாரே, “நமது கோரி க்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப் படாத வரையில் நான் உண்ணா விரதத்தை கைவிட மாட்டேன். உறுதியுடன் தொடரு வேன்’ என்று மட்டும் கூறினார்.
“அர்த்தமில்லாத பேச்சுக்கள் பயனில்லை’: அன்னா ஹசாரே உண் ணாவிரதம் இருக்கும் ஜந்தர் மந்தர் பகுதி முழுக்க மக் கள் கூட் டம் நிரம்பி வழிகிறது. கடந்த இரு நாட்களில் அவர் எடை 1.5 கிலோ குறைந் திருக்கிறது. சிறிது ரத்த அழுத் தம் கூடியிருக்கிறது. ஆனா ல், அழுத்தம் திருத்தமாக அரசிடம் மக்கள் எதிர்பார்ப்பது என்ன என் பதை அவர் நிருபர்களிடம் கூறினார்.
ஹசாரே கூறியதாவது: பேச்சுவார்த்தை நடத்த நான் தயார். அதை தட்டிக் கழிக்கவில்லை. அதேசமயம் அதிகார மையத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா அல்லது பிரதமர் மன்மோகன் சிங் என்றால் சரி. முக்கிய முடிவுகளை எடுக்க முடியாத கமிட்டிகளிடம் பேசி என்ன பயன்? அமைச்சரவைக் குழு என்கிறார்கள். அவர்களா முடிவு எடுக்கின்றனர்? லோக்பால் மசோதா கொண்டு வரவில்லை என்றால், அது மக்கள் பண த்தைக் கொள்ளையடிக்க வழியாகும். நான் ஒன்றும் ஆர். எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., தூண்டுதலில் இதை மேற் கொள் ளவில்லை. சமுதாயத்திற்கு, கடந்த 35 ஆண்டுகளாக நான் தொண்டாற்றுகிறேன். நான் என் வீட்டிற்கே சென்றது கிடையாது. எனக்கு மூன்று சகோதரர்கள். அவர்கள் குழந்தைகளின் பெயரும் எனக்கு தெரியாது. எனக்கு வங்கி யில் பணம் ஏதும் கிடையாது. நான் பக்கத்தில் வைத்தி ருக்கும் ஜோல்னா பையில், ஏதாவது ஐந்து அல்லது 10 ரூபாயை போடச் சொல்லி மக்க ளிடம் கேட்பேன். அது தான் என் செலவுக்கு பணம். காங் கிரஸ் அல்லது பா.ஜ.,வுடன் எனக்கு என்ன வேலை? அவர்கள் இந்த நாட்டுக்கு அதிகம் பணியாற்றியதாக கூறினால், ஏன் நாட்டில் இன்று இவ்வளவு பிரச்னை? எல்லா கதவையும் அடைக்கும் போது சத்யாகிரகம் தவிர வேறு வழி இல்லை. பொதுவாக என் மேடையில் அரசியல்வாதிகளை ஏற்றுவதில்லை. காரணம் அதில் அவர்கள் பயன் பெற முயற்சிப்பர். இவ்வாறு ஹசாரே கூறினார். ஹசா ரேயின் உடல்நிலையை, டாக்டர்கள் அவ்வ ப்போது கண்காணித்த வண்ணம் உள்ளனர்.
பிரதமர் அவசர ஆலோசனை: ஹசாரே உண்ணாவிரதம் குறித்து பிரதமர் மன் மோகன் சிங், அமைச்சரவை சகாக் களுடன் நேற்று அவ சர ஆலோசனை நடத்தினார். இக்கூட் டத்தில் அமைச்சர் கபில்சிபல் உள்ளிட்ட மூத்த அமைச் சர்கள் கலந்து கொண்டனர்.
( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
we ought to support the movement
நீண்ட காலமாக, இடதுசாரி கட்சிகள் ஊழல் தடுப்புச் சட்டமான லோக்பாலைக் கொண்டு வர முயற்சித்த போதெல்லாம் உலக அழகிப் போட்டிகளையும், சினிமா நடிக நடிகையரையும், பங்குச் சந்தைக் கோடுகளையும் வெட்டி வெட்டிக் காட்டிக்கொண்டிருந்தன தொலைக்காட்சிகள். தேவகவுடா அரசை ஆதரிக்கும்போதும், பிறகு ஐக்கிய முன்னணி அரசில் காங்கிரஸை ஆதரிக்கும் நிலை வந்தபோதும் இடதுசாரிக் கட்சிகள் ‘லோக்பால் மசோதா’ நிறைவேற்றப்பட வேண்டுமென நிபந்தனைகள் விதிக்கத்தான் செய்தன. ஊழலில் திளைக்கும் காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளே ஆளும்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருந்துகொண்டு அந்த மசோதாவைப் பற்றி கவனமாக பேசாமல் இருந்தன. காங்கிரஸ் ஊழலை ஒழிக்க முன் வரும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே தரும். காரணம் சோனியா மீது ஊழல் புகாரும், கருப்புப்பண புகாரும் ஆதாரத்துடன் உள்ளது. ஆனால் அன்னா ஹசாரே ஏன் சோனியா ஊழல் குறித்து பேச மறுக்கிறார் என்பது புரியவில்லை. அதுமட்டுமல்ல ஊழலை ஒழிக்க அவருக்கு கடிதம் எழுதுவது ஏன் என்றும் புரியவில்லை. மத்திய அரசு தன்னுடன் பேசி ஊழலுக்கு எதிராக லோக்பால் சட்டம் இயற்றப் போவதாக ஒரு குழு அமைத்து போட்ட நாடகத்தை நம்பிய அன்னா ஹசாரே இன்று அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாக புலம்புகிறார். மதக் கலவரங்கள் தாண்டவமாடிய போது, விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொண்ட போது, அந்நிய நிறுவனங்கள் சாரி சாரியாய் நுழைந்து நம் வளங்களைச் சுரண்டுகிற போதெல்லாம் அன்னா ஹசாரே எங்கிருந்தார் என்ற குறிப்புகளைக் காணோம். அப்போதெல்லாம் மௌனவிரதம் கடைப்பிடித்த இந்த மகான் திடுமென சிலிர்த்துக்கொண்டு ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார். நடுத்தர வர்க்கம் அளவுக்கு அதிகமாகவே உணர்ச்சி வசப்படும். பஸ்ஸில் சக இந்தியனை நெட்டித் தள்ளி இடம்பிடிக்கும் இந்தக் கூட்டம், கிரிக்கெட்டில் தேசபக்தியை ஆரவாரமாய்க் கொண்டாடும். அருகில் இருப்பவனுக்காக அழவோ, சிரிக்கவோ முடியாத இந்தக் கூட்டம் எங்கோ நடக்கும் போட்டியை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பார்க்கும். அது அட்சரசுத்தமாக அன்னா ஹசாரே விஷயத்திலும் நடந்தது. தேசபக்தி கொட்டோ கொட்டுவென்று கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டியது. இந்த லோக்பால் மசோதா என்ன, இதன் எல்லைகள் என்ன, இதன் மூலம் எது ,சாத்தியம் என்ன என்பதைக் கடந்தகாலம், நிகழ்கால அனுபவங்களிலிருந்து பார்க்காமல், வழக்கம்போல் அந்தரத்தில் வைத்தே பார்க்கத் தலைப்படுகிறார்கள்.
ஊழல், இந்த தேசத்தின் பெரும் நோய். சகல இடங்களிலும், மட்டங்களிலும் ஊடுருவி நிற்கிறது. எதைத் தொட்டாலும் அங்கு அழுகிப்போன தார்மீக நெறிகளின் நாற்றமடிக்கிறது. மூக்கைப் பொத்திக் கொண்டு வெறுப்புற்றும், சகித்துக்கொண்டும் இருந்த மக்களின் உணர்வுகளுக்கு அன்னா ஹசாரே உருவம் கொடுக்கத் தேர்தெடுக்கப்பட்டு இருக்கிறார். ஊழல் சகதியின் ஊற்றுக்கண்ணை பார்க்காமல் வெற்றிடத்தில் அவரது பார்வை துழாவும்போதுதான் சந்தேகம் வருகிறது. சக மனிதர்கள் ஒருவருக்கொருவரைப் போட்டியாக பாவிக்கச் செய்து, களத்தில் நிறுத்தி வைத்திருக்கிற இந்த முதலாளித்துவ அமைப்போடு ஒட்டிப் பிறந்ததுதான் ஊழல். தனியார் மயமும், தாராள மயமும் வழங்கிய கொடை அது. இது விதி. இந்த வேர்களை அண்டாமல், அன்னா ஹசாரேவும் கிளைகளை வெட்ட வாளைச் சுழற்றுகிறார். லோக்பால் மசோதாதான் ஊழல் அரக்கனின் உயிரையெடுக்கும் ஆயுதம் என்பதாகச் சித்திரம் தீட்டப்படுகின்றன. லோக்பால் மசோதா சட்டமாகிவிட்டால் அடுத்த நொடியே நாட்டில் ஊழல் இல்லாமல் ஒழிந்துவிடும் என்பதுபோல அன்னா ஹசாரே மக்களை ஏமாற்றிவருகிறார். சினிமா பாணியில் ஒரு பாட்டு முடிவதற்குள் ஊழலை ஒழிக்க மக்கள் விரும்புகிறார்கள்.
தீண்டாமை எதிரான வலுவானச் சட்டங்கள் இருக்கின்றன. தீண்டாமை ஒழிந்தாவிட்டது. பெண்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான எவ்வளவோச் சட்டங்கள் இருக்கின்றன. பெண்கள் நலமாகவா இருக்கிறார்கள்? சட்டங்கள் தேவையென்றாலும், அவற்றை உறுதியோடு அமல்படுத்துகிற அரசு வேண்டும். அது எப்போது சாத்தியம் அன்னா ஹசாரே?
அன்னா ஹசாரேதான் பூனைகளுக்கு மணி கட்டப் போகிறார் என்கிறார்கள். ஆனால் அவரே இப்போது பூனையாகி இருக்கிறாரே. முதலில் மகாராஷ்டிராவில், ராஜ் தாக்கரேவின் கொள்கைகள் எனக்குப் பிடிக்கும், அவரது violence தான் எனக்கு ஒத்துவராது என தெரிவித்தார். Violence இல்லையென்றால் அது காந்தீயம் போலும் அவருக்கு. ‘மண்ணின் மக்கள்’ என்ற கோஷத்தோடு தமிழ், பீகாரி, இந்தி பேசும் பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடும் அவரது எந்தக் கொள்கைகள் அன்னா ஹசாரேவுக்குப் பிடித்துத் தொலைத்தனவோ? இனத் துவேஷம், மொழித் துவேஷம் கொண்டு அரசியல் நடத்தும் ராஜ்தாக்கரேவிடம் என்ன காந்தீயத்தை கண்டாரோ?
இரண்டாவது, முஸ்லீம் மக்கள் நரவேட்டையாடப்பட்ட குஜாரத்தின் முதல்வர் நரேந்திர மோடிதான் இந்தியத் தலைவர்களில் அவருக்குப் பிடித்தமானவராம். அன்னா ஹசாரேதான் இப்படி வாய்க் கூசாமல் சொல்லியிருக்கிறார். மதசகிப்புத்தன்மைக்காக குரல் கொடுத்து, உயிரையும் கொடுத்த மகாத்மா காந்தி எங்கே, இந்த அன்னா ஹசாரே எங்கே? இவரை எப்படி காந்தீயவாதி என்கிறார்கள்? இவரை எப்படி இந்த நாடு கொண்டாடுகிறது? ஊடகங்கள் நேர்மையாக நடந்தால் ஜனநாயகத்தின் நாலாவது தூண் நிமிர்ந்து நிற்கும்
நல்லையா தயாபரன்
We have to analyze and support. We should not blindly support.