Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில் மின்சக்தியை மிச்சப்படுத்த…

நாம் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில் தொடர்ந்து மின்சக்தி செலவாகிக் கொண்டிருப்பது என்பதை நாம் உணர்வ தில் லை. மின் சக்தியைப் பயன் படுத்தும் மற்ற சாதனங்கள் இயக்கத்தினை நாம் கண்டு, கேட்டு உணர்கிறோம். அத னால், மின்சக்தி செலவாகி றது என்பது நம் கண்கூடா கக் காணும் ஒரு விஷயமாகி றது. ஆனால், கம்ப்யூட்டர் விஷ யத்தில் நமக்கு இது ஓரளவிற்குத் தெரிந்தாலும், இதில் என்ன செலவாகப் போகிறது என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகி றது. இருப்பினும் இதன் பயன்பாட்டில் நாம் மிச்சப்படுத்தும் மின்சாரமும் நமக்கு ஒரு சக்திதான். எனவே எந்த வகையில் மின்சக்தியை மிச்சப்படுத்தலாம் எனச் சில எளிய வழிகளைப் பார்க்கலாம்.

1: ஸ்விட்ச் ஆப்: பயன்படுத்தாத போது மின் சக்தியை நிறுத்திட வேண்டும். அல்லது ஹைபர்னேட் மோடில் நிறுத்திட வேண்டும். கம்ப்யூட்டர் அப்போது “உறக்கத்தில்’ (Sleep mode) இருக்கும். தேவைப்படுகையில், மீண்டும் இயக்கத் திற்குக் கொண்டு வர லாம்.

2. துணை சாதனங்களை விலக்கல்: நாம் பயன்படுத்தாத போது, கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்கேனர், பிரிண்டர், ஸ்பீக்கர்களின் இணைப்பை நீக்கலாம். இந்த துணை சாதனங்கள் ஏதேனும் ஸ்விட்ச் போர்டில் இணைக்கப் பட்டு, அந்த ஸ்விட்ச் போர்டின் மின் இணைப்பை மொத்தமாகத் துண்டிக்க வசதி இல் லை என்றால், இவற்றின் இணைப்பு கேபிளை நீக்கி விட லாம். ஏனென்றால், இணைப்பில் இருக்கையில் சிறிய அளவு மின் சக்தியை இவை பெற்றுக் கொண்டிருக்கும். குறைந்த வாட் அளவு மின்சக்தியை இவை எடுத்துக் கொண்டிருந்தாலும், அதனை நிறுத்துவது, தொடர் நாட்களில் பெரிய அளவில் மின் சக்தியை மிச்சப்படுத்தும்.

3. பவர் மேனேஜ்மெண்ட்: நம் கம்ப்யூட்டரில் பவர் மேனேஜ் மெண்ட் பிளான் என்னும் திட்டம் பதியப்பட்டு தரப்படுகிறது. இத னைப் பயன்படுத்தி, கம்ப்யூட்டர் தன் செயல்பாட்டிற்கு எப்படி மின் சக்தியை இழுக்க வேண்டும் என்பதனை வரையறை செய் திடலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், Start கிளிக் செய்து, Control Panel செல்லவும். Hardware And Sound என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் Power Options என்பதைத் தேர்ந்தெடுக் கவும். இதில் கிடைக்கும் பவர் திட்டங்களை ஆய்வு செய்திடவும். Change Plan Settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு display, sleep, and brightness settings ஆகியவற்றை அட்ஜஸ்ட் செய் திடவும்.

4.ஸ்கிரீன் சேவர் தேவையா? பலர் கம்ப்யூட்டரில் ஸ்கிரீன் சே வர் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என எண்ணுகின்றனர். இதற்காக விதம் விதமாய் ஸ்கிரீன் சேவர்களை இணையத்தில் இருந்தும், நண்பர்களிடமிருந்தும் பெற்று பயன்படுத்துகின்றனர். இந்த ஆசை கொண்டவர்கள், பெரும்பாலும் அனி மேஷன் உள்ள ஸ்கிரீன் சேவர்களையே அமைக்கின்றனர். கம்ப்யூட்டர்கள் வரத் தொடங்கிய காலத்தில், திரைக் காட்சிகள் உறையாமல் இருக்க இது தேவையாய் இருந்தது. நவீன தொழில் நுட்பத்தில் ஸ்கிரீன் சேவர்கள், செயல் அடிப்படையில் தேவையற்ற ஒன்றுதான். எனவே அவற்றை எடுத்துவிடுங்கள். அல்லது மானிட்டரையே ஸ்விட்ச் ஆப் செய்து, பின் தேவைப்படும்போது ஸ்விட்ச் போ ட்டு காட்சியைக் கொண்டு வரலாம்.

5. ஒரு கண் வைக்கவும்: மேலே சொன்ன சின்ன சின்ன விஷய ங்களுடன், உங்கள் கம்ப்யூட்டர் செயல்பாட்டில் எவ்வளவு மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது என்று ஒரு கண் வைத்திருங்கள். இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் நிறைய இலவசமாகக் கிடைக்கின்றன. நான் பயன்படுத்துவது co2saver என்பதாகும். இதனை http://co2saver.snap.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இது மொ த்தத்தில் நீங்கள் எவ்வளவு மின் சக்தியினைப் பயன்படுத்துகி றீர்கள், அதிகம் எங்கே செலவாகிறது என்று காட்டி, நம் மைக் குறைவாகப் பயன்படுத்தத் தூண்டும்.

( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: