Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு மாத நினைவு நாளில் தாக்கிய கொடூரம்!: பயங்கர நிலநடுக்கம் மீண்டும் ஜப்பானில் ….

கடந்த மாதம் இதே நாளில் ஜப்பானை புரட்டிப்போட்ட நிலநடு க்கம் மற்றும் சுனாமி இன் று தனது ஒரு மாத இடை வெளியில் மீண் டும் கோரத்தாண்டவத்தை வெ ளிக்காட்டியுள் ளது. இன்றை ய பயங்கர நில நடுக்கும் 7. 1 ரிக்டர் அள வாகி பதிவாகியிருக்கிற து. இதனால் ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் தாக் கிய இந்த பூகம் பத்தில் பலர் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப் படுகிறது.

இந்தநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி தாக்கும் என்ற எச்சரிக் கை விடப்பட்டுள்ளது. இன்னும் சிறிது நேரத்தில் சுனாமி தாக்கும் பட்சத்தில் 50 செ.மீட்டர் உயரம் வரை கடலில் அலையின் சீற் றம் இருக்கும் என்றும் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித் துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 11 ம் தேதி நடந்த அதே நாளில் இன்று 11 ம் தேதி பூகம்பம் ஏற்பட்டதால் ஜப்பான் மீண்டும் வளர்ச்சி பின்ன டைவுக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த பூகம்பம், சுனாமியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். ஆயிரக்கணக் கானோ ர் வீடுகளை இழந்தனர். உலகம் முழுவதும் இருந்து நிவா ரணப்பொருட்கள் இன்னும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டி ருக்கும் இந்த தருணத்தில் மீண்டும் இன்று நிலநடுக்கம் உருவாகியி ருக்கிறது.

டோக்கியோவின் அருகில் உள்ள புகுஷிமாவையொட்டிய பகுதிக ளில் இன்றைய நிலடுக்கம் உணரப்பட்டது. ஏற்கனவே கடந்த முறை ஏற்பட்ட சுனாமியினால் இந்த பகுதியில் உள்ள அணு உலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இன்றும் ஏற்பட்ட நடுக்க த்தினால் அணு உலைகள் மூடப்ட்டன. இதனால் பல்வேறு பகுதி களில் மின்சாரம் தடைப் பட்டுள்ளது.

இன்று பல இடங்களில் நினைவஞ்சலி கூட்டம்: கடந்த சுனாமி தாக்கி ஒரு மாதம் ஆனதையடுத்து இன்று பல இடங்களில் நினை வஞ்சலி மற்றும் இரங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. இந்த நேரத்தில் மக்களை மீண்டும் வதைக்கும் வகை யில் இயற்கை தனது கோரத்தாண்டவைத்தை காட்டியிரு க்கிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: