டச் ஸ்கிரீன் மொபைல்:
ஸ்பைஸ் நிறுவனத்தின் போன்கள் குறைந்த விலையில் கூடுதல் வசதிகள் தரும் சிறப்பி ற்குப் பெயர் பெற்ற வை. அந்த வகையில் மார்ச் மாதத்தில், டச் ஸ்கிரீன் கொண்ட மொ பைல் ஒன்றை, ஸ்பை ஸ் நிறுவனம் விற்ப னைக்கு அறிமுகப்படு த்தி யுள்ளது. ஸ்பைஸ் எம்-7500 ப்ளோ என் பது இதன் பெயர். இளை ஞர்களின் டச் ஸ்கிரீன் கனவு போனாக இது அமைந்து ள்ளது. இதன் அதிகபட்ச விற்பனை விலை ரூ. 3,699.
இந்த மொபைல் போனி ல் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். 2.8 அங்குல வி.ஜி. ஏ. டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோ எடுக்க, 1.3 மெகா பிக்ஸெல் கேமரா ஒன்று இணைக்கப்பட்டு ள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக், எம்பி3 பிளேயர் மற்றும் எப்.எம். ரேடியோ இசை ரசிகர்களை மகிழ்விக்கும். புளுடூத், வாப் மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். ஆகியவற்றின் மூலம் நெட்வொர்க் இணைப்பி னை ஏற்படுத்தலாம். பேஸ்புக், நிம்பஸ் மற்றும் ஸ்நாப்டு ஆகிய சோஷியல் நெட்வொர்க் கிங் தள இணைப்பு டூல்கள் உள்ளன. இன்ஸ் டன்ட் மெசே ஜிங் வசதிகளையும் மேற் கொள்ளலாம். இதன் 1000 ட்அட திறன் கொண்ட பேட்டரி, தொட ர்ந்து 4 மணி நேரம் பேச மின்சக்தி வழங்கு கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 250 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது.
டூயல் சிம் மொபைல்:
டெக் டாட் காம் நிறுவனம், இரண்டு சிம் இயக்கத்தில் இயங்கும் மொபைல் போன் ஒன்றை ரூ.2,600 அதிக பட்ச விலையிட்டு விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. டி-60 (T60) என அழைக் கப்படும் இந்த போன், இசைப் பிரியர்களுக்கெனவே தயாரிக்கப் பட்டுள்ளது. யமஹா அமைத்த சிப் செட் ஒன்று இசைக்காகவே இதி ல் இணைக்கப்பட்டுள்ளது. இசையை இயக்கவெனத் தனி கீகள் தரப்பட்டுள்ளன. இதில் தரப்பட்டுள்ள 1500 ட்அட திறன் கொண்ட பேட்டரி, மூன்று மணி நேரம் ஓடும் மூவி ஒன்றை இடைவெளி இன்றி இயக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
வீடியோ, ஆடியோ பிளேயர், எல்.இ.டி. டார்ச், 2.4 அங்குல எல்.சி. டி. திரை, ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத், 1.3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, 8 ஜிபி வரை மெமரி திறன் அதிகப்படுத்த வசதி, எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை மற்ற சிறப்பு வசதிகளாகும்.
இந்தியாவிற்கேற்ற காலண்டர், கான்பரன்ஸ் அழைப்பு ஏற்படுத்தும் வசதி, ஸ்பீக்கர் போன், பெர்சனல் டேட்டா வினை பாஸ்வேர்ட் வைத்து காக்கும் வசதி ஆகியவையும் தரப்பட்டு ள்ளன.
இந்த வசதிகளுடன் அதிக பட்ச விலையாக ரூ.2,600 எனத் தரப் படும் இந்த மொபைல் போன், பட்ஜெட் விலையில் போன் வாங்க விரும்புபவர்களை நிச்சயம் கவர்ந்திழுக்கும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது