Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பவர்பாய்ண்ட் – பவர் டிப்ஸ்

புல்லட் இல்லாத லிஸ்ட்
பவர்பாய்ண்ட்டில் ஸ்லைட் தயாரிக்கையில், சில வரிகளைப் பட்டியலிடுகையில் புல்லட்கள் தானாக உருவாகும். இவை இல்லாமல் இருப்பதை சிலர் விரும் புவார்கள். அவர்கள் இந்த புல்லட் ஏற்பட்ட பின் பேக் ஸ்பேஸ் அழுத்தி புல்லட்களை நீக்குவார்கள். இருப்பினும் ஒவ்வொரு வரியை அமைக்கையிலும் புல்லட்கள் தாமாக உருவாகும். புல்லட் இல்லாமல் அமைக்க வேண்டும் எனில் பட்டியலில் அடுத்த வரிக்குச் செல்கையில் SHIFT + ENTER தட்ட வேண்டும். அப்படித் தட்டி னால் கர்சர் புல்லட் இல்லாமல் அடுத்த வரிக்குச் செல்லும். பின் அடுத்த வரியை டைப் செய்திடலாம். டைப் செய்து முடித்தபின் மீண்டும் SHIFT + ENTER தட்டி அடுத்த வரிக்குச் செல்லலாம். ஆனால் மீண்டும் புல்லட் தேவை என்றால் அடுத்த வரிக்குச் செல்லும் முன் ஜஸ்ட் என்டர் தட்டிச் செல்லுங்கள். புல்லட் மீண்டும் வரத் தொடங்கும்.

கருப்பு திரையை நீக்க
வர்பாய்ண்ட் பிரசண்டேஷன் தொகுப்பின் இறுதி ஸ்லைட் முடித்து பைலை சேவ் செய்தி டுகை யில் கடைசி யாக கருப்பு வண்ணத்தில் திரை முழுவ துமாக ஸ்லைட் ஒன்று உருவா கும். அதில் “End of slide show click to exit” எனக் கிடைக்கும். ஒரு சிலருக்கு இந்த ஸ்லைட் தேவையில்லையே என்ற எண்ணம் ஏற்படும். பவர் பாய்ண்ட் தானாக உருவாக்கும் ஸ்லைட் இது. இதனன நீக்க கீழ்க்காணும் வழியில் செட் செய்திடவும். முதலில் “Tools” “Options” செல்லவும். Options அழுத்தியவுடன் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும். இதில் “View” என்னும் டேபி னை அழுத்தினால் புதிய டயலாக் பாக்ஸ் ஒன்று காட்டப்படும். இந்த பெட்டியில் “End with black slide” என்று இருக்கும் இடத்திற்கு எதிராக உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்று இருக்கும். அதனை எடுத்துவிடவும். ஓகே கிளிக் செய்து வெளியே வரவும். இனி இந்த கருப்பு திரை கிடைக்காது.

குறுக்கீடுகள் இல்லாத ஸ்லைட் ÷ஷா
உங்கள் திறமை அனைத் தையும் பயன்படுத்தி அருமை யான ஸ்லைட் ÷ஷா ஒன்றை அமைத்திருக்கிறீர்கள். இதனைப் பார்க்க வேண்டி யவர்களின் முன்னால் உங்கள் சுவையான விளக்கத்துடன் காட்டிக் கொண்டிருக் கிறீர்கள். அப்போது நீங்கள் தவறுதலாக மவுஸின் ரைட் கிளிக் செய்துவிட்டால் உடன் ஒரு பாப் அப் மெனு வரும். பின் அவசர அவசரமாக எஸ்கேப் கீ அழுத்தி அதனை நீக்குகிறீர்கள். இது உங்கள் இமேஜை பார்ப்பவர்கள் முன் கெடுக்கிறதே என நினைக்கிறீர்களா? இந்த பாப் அப் மெனு வராமல் செய்திடலாம். பின் வரும் வழியை மேற்கொள்ளுங்கள். முதலில் “Tools” “Options” செல்லவும். Options அழுத்தியவுடன் பல டேப் கள் அடங்கிய விண்டோ கிடைக் கும். இதில் “View” என்னும் டேபி னை அழுத்தினால் புதிய டயலாக் பாக்ஸ் ஒன்று காட்டப்படும். இந்த பெட்டியில் “Slide show” என்னும் டேபைக் கிளிக் செய்தால் இன்னும் ஒரு பெட்டி கிடைக்கும். இதில் உள்ள பல பிரிவுகளில் “Show menu on right mouse click” என்பதனைத் தேடிக் காணவும். இதன் முன் உள்ள கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் இனி இந்த பாப் அப் மெனு தொல்லை எல்லாம் இருக்காது. மீண்டும் இது வேண்டும் என எண்ணினால் மேலே கூறியபடி சென்று அதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

எழுத்துப் பிழைகளை மறைக்க
மிக அழகாக பவர்பாய்ண்ட் பிர சன்டேஷன் தொகுப்பு ஒன் றைத் தயார் செய்திருக்கிறீர் கள். அதனைப் பெருமை யுடனும் சிரத்தையுடனும் உங்களுடன் பணி புரிபவர்கள் அல்லது மாணவர்களுக்குப் போ ட்டுக் காட்ட விரும்பு கிறீர்கள். எவ்வளவு தான் முயற் சியுடன் ஸ்லைடுகளைத் தயாரித்திருந்தாலும் உங்களையும் அறியாமல் ஆங்கில சொற்களில் சில தவறுகள் இருந்தால் ஸ்லைடு களைக் காட்டும்போது சொற்களில் சிகப்பு அடிக் கோடுகள் இருந்து உங்கள் மானத்தை வாங்கும். பிழைகளைத் திருத்தி காட்டுவதே நல்லது என்றாலும் சில வேளைகளில் நேரம் இன்மையால் அல்லது உங்களுக்கென அடுத்தவர்கள் தயாரித்துத் தருவதால் பிழைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனை எப்படி தவிர்க்கலாம்? இந்த எழுத்துப் பிழைகளை மறைத்திட பவர் பாய்ண்ட்டில் வசதி உள்ளது. கீழே குறிப்பிட்டுள்ளபடி செட் செய்திடவும். Tools சென்று கிளிக் செய்து வரும் மெனுவில் “Options” தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் விண்டோவில் “Spelling and Style” என்ற டேபில் கிளிக் செய்திடவும். விரியும் மெனுக்கள் அடங்கிய விண்டோவில் “Hide all spelling errors” என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி ஸ்பெல்லிங் தவறுகள் காட்டப்பட மாட்டாது. இருந்தாலும் செல்கின்ற இடங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் எல்லாம் இந்த தவறுகளை மறைக்கும் வேலையை மேற்கொள்ள முடியாது. எனவே தவறுகளை முதலிலேயே திருத்திக் கொள்வது தான் நல்லது.

தொடர்ந்து இசை கிடைக்க
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஸ்லைட் ÷ஷாவின் போது மிக அருமை யாகத் தயாரிக்கப்பட்ட ஸ்லைட் ஒன்றைக் காட்டி விளக்கிக் கொண்டிருக் கிறீர்கள். பின்னணியில் மெல்லிய இசை இசைக்கப்படும் வேண்டும் என்பதற்காக சவுண்ட் பைல் ஒன்றை இயங்குமாறு செய்திருக்கிறீர்கள். இந்த சவுண்ட் பைல் நீங்கள் குறிப்பிட்ட விநாடிகள் வரை இயங்கி நின்று விடும். ஆனால் உங்கள் பிரசன்டேஷனைப் பார்ப்பவர்கள் அதிக சந்தேகங்களை எழுப்பி உங்களிட மிருந்து தகவல்களைப் பெற முயற்சிக்கையில் நீங்கள் பேசுவீர்கள். பின்னணி இசை கிடைக்காது. எனவே சவுண்ட் பைல் இயங்குவதை ஒரு லூப்பில் அதாவது நீங்களாக நிறுத்தும் வரை ஒரு வளையத்தில் இயங்கு வண்ணம் அமைக்கலாம். அதற்கு கீழ்க்கண்ட முறையில் செட் செய்திடவும்.
சவுண்ட் பைலை ஒரு ஆப்ஜெக்டாக அமைத்திருக்கையில், ஒரு ஸ்பீக்கர் ஐகான் ஒன்று ஸ்லைடில் தெரியும். இதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Edit Sound Object” என்ற பிரிவு தெரியும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள “Loop until stopped” என்ற பிரிவில் செக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து மூடவும். இனி அடுத்த ஸ்லைட் செல்லும் வரை, பிரசன்டேஷன் முடியும் வரை அல்லது நீங்களாக நிறுத்தும்வரை இசை தொடர்ந்து ரம்மியமாக ஒலித்துக் கொண்டே இருக்கும்.

பவர்பாய்ண்ட் தரும் பல வியூக்கள்
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் சாப்வேர் நாம் பணியாற்ற பல்வேறு தோற்றங்களில் ஸ்லைடுகளைத் தருகிறது. அவை குறித்து இங்கே காணலாம். இந்த வியூக்களைக் காண View மெனுவில் கிளிக் செய்து கிடைக்கும் வியூ பட்டியலில் உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.
Normal: இந்த வியூவைத் தேர்ந்தெடுத்தால் ஸ்லைட், அதன் அவுட்லைன் மற்றும் நோட்ஸ் டெக்ஸ்ட் பாக்ஸ் காட்டப்படும்.
Slide Sorter: அனைத்து ஸ்லைட்களின் சிறிய தோற்றத்தினை இந்த வியூவில் பார்க்கலாம். அதிக ஸ்லைட்கள் உள்ள பிரசன்டேஷன் ÷ஷாவில் இது மிக உதவியாய் இருக்கும். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட ஸ்லைடைத் தேடிப்பெறுவதில் இந்த வியூ நம் பணியை எளிதாக்கும்.
Notes Page: அப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்லைடின் தோற்றத் தினை சிறிதாகவும் அதற்கான நோட்ஸ் பேஜினைப் பெரிதாகவும் காட்டும். இது ஏறத்தாழ நார்மல் வியூ போலத்தான் செயல்படும். ஆனால் ÷ஷா அவுட்லைன் கிடைக்காது.
Slide Show:: வியூ மெனுவில் இந்த மெனுவினைத் தேர்ந்தெடுத்தால் அதன் மூலம் ஸ்லைட் ÷ஷாவினை இயக்கலாம்.
Black and White: அப்போதைய ஸ்லைடின் கருப்பு வெள்ளைத் தோற்றத்தை பெரிய அளவிலும் வண்ணத் தோற்றத்தை சிறிய விண்டோவிலும் இந்த வியூவில் பார்க்கலாம். பிரசன்டேஷனின் அனைத்து வண்ணங்களையும் நாம் பார்க்க வேண்டாம் என்று எண்ணுகையில் இந்த வியூ உதவும்.

பவர் பாய்ண்ட் பிரசன்டேஷனில் ஹெடரும் புட்டரும்
நீங்கள் தயாரித்த பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பில் ஒவ்வொரு ஸ்லைடிலும் சில தகவல்களைக் காட்ட விரும்பலாம். எடுத்துக் காட்டாக குறிப்பு, சிறு தகவல், நேரம், ஸ்லைட் எண் போன்றவற்றைத் தர விரும்பலாம். இதனை எப்படி மேற்கொள்வது என இந்த டிப்ஸில் பார்க்கலாம். ஹெடர் மற்றும் புட்டர்களை எப்படி அமைப்பது என்று தெரிந்து கொண்டால் இந்த செயல் பாட்டினை மேற்கொள்வதற்கான வழிகளை அறிந்து கொள்ளலாம்.
பிரசன்டேஷனைத் திறந்து கொண்டு View மெனு செல்லவும். அங்கு “Header and Footer” என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். “Header and Footer” என்ற தலைப்பில் ஒரு சிறிய டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Slide” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது நீங்கள் என்ற ஆப்ஷன்களில் தேவையானதைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது “Update automatically Date and time” என்ற ஆப்ஷனையும் மேற்கொள்ளலாம். இது “Include on slide” என்ற பிரிவில் கிடைக்க வரும். ஸ்லைடில் நம்பர் சேர்த்திட “Slide number” என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். புட்டரில் சேர்த்திட “Footer”’ என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள பாக்ஸில் என்ன டெக்ஸ்ட் இணைத்திட வேண்டுமோ அதனை டைப் செய்திடவும். அடுத்து ஸ்லைட் டேப் செட்டிங்ஸ் அனைத்தையும் சேவ் செய்திட Apply என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். “Notes and Handouts” என்ற டேப்பின் கீழ் “Header” என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் “Date and time” என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு நீங்கள் அமைக்க விரும்பும் அனைத்தையும் தேர்ந்தெடுத்த பின்னர் “Apply to All” என்பதில் கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் அமைத்தபடி ஹெடர் புட்டர் இடங்களில் நீங்கள் அமைத்த டெக்ஸ்ட் மற்றும் எண்கள், தேதிகள் தெரியவரும். எதனையாவது மாற்ற வேண்டும் என எண்ணினால் மேலே சொன்ன வகையில் மீண்டும் செயல்பட்டு முடிக்கவும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: