Monday, July 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எச்.டி.சி. டிசையர் இஸட், இந்தியாவில்…

எச்.டி.சி. நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் மக்களிடையே பிர பலமானவை. தனித் தன்மை கொண் டவை. இதன் டிசை யர் இஸட் மொபைல் போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் படும் என முன்பு அறி விப்பு வந்தது. தற் போது இந்த மொபை ல் ரூ. 25,590 அதிக பட்ச விலையாகக் குறிக் கப்பட்டு விற் பனைக்கு வந்துள் ளது.

இதில் ஸ்லைடர் குவெர் ட்டி கீ போர்டு, 800 மெஹா ஹெர்ட்ஸ் வேகத் தில் இயங்கும் குவால்காம் சி.பி.யு., ஆண்ட்ராய்ட் 2.2 ப்ரையோ சிஸ் டம் ஆகியவை உள்ளன. 3.7 அங்குல சூப்பர் கிளியர் எல்.சி.டி. வண்ண த்திரை தரப்பட்டுள்ளது. அண்மையில் வந்த எச்.டி.சி. சென்ஸ் யூசர் இன்டர்பேஸ் பதியப்பட்டு இயங்குகிறது.

இதன் ஆட்டோ போகஸ், எல்.இ.டி. பிளாஷ் இணைந்த 5 எம்.பி. திறன் டிஜிட்டல் கேமரா மூலம், எச்.டி. வீடியோ பதிவினை மேற்கொள்ள லாம். இதன் உள் நினைவகம் 1.5 ஜிபி. இதனை 32 ஜிபி வரை அதிகப் படுத்தலாம். ஆர்.டி.எஸ். கொண்ட ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, ஆப்டி கல் ட்ரேக் பேட், ஜி.பி.எஸ்., டிஜிட்டல் காம்பஸ், வை-பி, A2DP இணைந்த புளுடூத், தொடர்ந்து 9.8 மணி நேரம் பேசத் திறன் அளிக்கும் 1300 எம்.ஏ.எச். பேட்டரி ஆகியவையும் தரப்பட்டுள்ளன.

இது திருடப்பட்டாலோ, காணாமல் போனாலோ, இதனைக் கண்ட றியும் வசதி, சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட பின்னர், போன் சைலன்ஸ் மோடில் வைக்கப் பட்டாலும், அலாரத் தினை ஒலிக்கச் செய்யலாம். மேப் மூலம் அது எங்கிருக்கிறது என்று அறியலாம். போன் உரிமையாளர்கள், ரிமோட் மூலம், போனை இயங்க விடாமல் செய்வதுடன், அழைப்புகளை இன் னொரு மொபைல் எண்ணுக்கு பார் வேர்ட் செய்திடலாம். அந்த போனைத் திருப்பித் தரும்படி மெசேஜ் அனுப்பலாம். அதிலுள்ள டேட்டா அனைத்தையும் முழுமையாக நீக்கி விடலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: