Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அனைத்து நாடுகளின் தொலைபேசி குறியீட்டு (ISD codes) எண்களை அறிந்திட உதவும் தளம்….

தொலை தொடர்பு இணைப்பு என்பது இன்று சொடுக்குப் போடும் விநாடிகளில் ஏற்படுத்தப் படும் ஒரு செயலாக மாறிவிட்டது. எந்த நாட்டிலிருந்தும் எந்த நாட் டிற்கும் தொலைபேசி மூலம் தொடர் பினை மேற் கொண்டு தகவல் களைத் தெரிவிக்கலாம். ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு குறியீட்டு எண்ணைக் கொ ண் டுள்ளன. இந்தியாவிற்கு 91 என்பது அனை வரும் அறிந்த ஒன்று. ஆனால் அனைத்து நாடு களின் குறியீட்டு எண்ணை எப்போதும் நினைவில் கொள்ள முடியாதே. இந்த தேவை யை நிறைவு செய்திட, இணையத்தில் ஒரு தளம் இயங்கு கிறது. http://www.simplecountrycodes.com என்ற முகவரியில் உள்ள தளம், அனைத்து நாடுகளுக்கான தொலைபேசி குறியீட்டு எண் ணைத் தருகிறது. இந்தத் தளம் சென்று, எந்த நாட்டிற்கு நீங்கள் அழைப்பை ஏற் படுத்த விரும்பு கிறீர்கள்? என்ற கேள்வியுடன் கட்டம் தரப்பட்டு, நாட் டினைத் தேர்ந்தெடுக்க ஒரு நீள் கட்டமும் தரப்படும். இதில் நாம் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டினைத் தேர்ந்தெடுக்கலாம். அடுத்து, இரண்டாவதாக, நாம் எந்த நாட்டிலிருந்து அந்த நாட்டினைத் தொடர்பு கொள்கிறோம் என்ப தனையும் தேர்ந்தெடுத்துக் காட்ட வேண்டும். பின்னர் Lookup Coundry code என்ற பட்டனில் கிளிக் செய்தால், தேவைப் பட்ட குறியீட்டு எண் கிடைக்கும். மிகவும் பயனுள்ள இந்த தளத்தை நினைவு கொள்ள வேண்டிய தளப் பட்டியலில் வைத்துக் கொள் ளுங்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: