Thursday, August 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழக சட்டசபை தேர்தல்: அதிகபட்சமாக‌ 80% ஓட்டுப்பதிவு..

இதுவரை இல்லாத அளவு விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு: ஆர்வ மாக திரண்டு வந்தனர் மக்கள்

தமிழகத்தின் அடுத்த ஆட்சியை நிர்ணயிக்கவுள்ள சட்டசபை பொதுத் தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று விறு விறுப்பாக நடந்தது. மாநிலம் முழுவதும் ஆர்வத் துடன் திரண்டு வந்து பொது மக்கள் ஓட்டளித்தனர். பெரிய அளவிலான அசம்பாவித சம்பவ ங்கள் இன்றி, அமைதியாக தேர்தல் நடந்ததால், முதன் முறையாக ஓட்டு ப்பதிவு 80 சதவீதமாக உயர்ந்தது.

தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று காலை 8 மணி க்கு துவங்கியது. பெரும் பாலான தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நேரத்தி ற்கு முன் பாகவே, வாக் காளர்கள் வந்து வரிசை யில் காத்திரு ந்ததால், ஓட்டுப்பதிவு விறுவிறு ப்பாக நடந்தது. சில ஓட்டு ப்பதிவு மையங் களில் ஓட்டு ப்பதிவு இயந் திரம் பழுது காரண மாக தாமதம் ஏற்பட்டது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஓட்டுப் பதிவு சதவீதம் வேகமாக அதிகரித்த வண்ணம் இருந்தது. கடும் வெயி லையும் பொருட் படுத்தாமல், ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசை யில் நின்று ஓட்ட ளித்தனர்.தேர்தல் கமிஷன் மூலம், புகைப் படத்துடன் கூடிய பூத் சிலிப் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. இது தவிர, கட்சிகள் சார் பிலும் பூத் சிலிப் வழங்கப் பட்டிருந் ததால், வாக்காளர்கள் இதை எடுத்து வந்து எளிதாக ஓட்டுப்பதிவு செய்தனர். சென் னையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி, அ.தி. மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, துணை முதல்வர் ஸ்டா லின், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட, அரசியல் கட்சித் தலைவர்கள் ஓட்டளி த்தனர். தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப் பதாக ம.தி.மு.க., அறிவித் திருந்த நிலையில், அக்கட்சியின் பொ துச் செயலர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் ஓட்ட ளித்தார். மாநில காவல்துறையோடு இணைந்து, துணை ராணு வப் படை யினர், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார் என, ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டு இருந் தனர். பதட்டமான தொகுதிகள் என, அடையாளம் காட்டப் பட்டு இருந்த தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டு இருந்தன.

ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் கள்ள ஓட்டு போடுவதாக வந்த புகாரையடுத்து, துணை ராணுவப்படையினர் அங்கு குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப் பட்டது. சேலத்தில் போலீசார் தாக்கியதில் அ.தி.மு.க., தொண்டர் இறந்த தாக புகார் எழுந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் கமி ஷன் கடும் கட்டுப்பாடுகளை விதித்திருந்ததால், அரசியல் கட்சி களின் ஆர்ப்பாட்டம் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப் பட்டு இருந்தது. இதன் காரணமாக ஓட்டுப்பதிவின் போது குறிப்பி டத்தக்க அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி தேர்தல் அமைதி யாக நடந்தது.ஓட்டுப்பதிவை, கண்காணிப்பு கேமராக்கள் மூலம், தேர் தல் அதிகாரிகள் கண்காணித்த வண்ணம் இருந்தனர். இதனால், ஓட்டுச்சாவடிகளில் தேவையற்ற குழப்பங்களுக்கு இடம் தராத வகையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அலுவலர்களின் செயல் பாடு அமைந்திருந்தது.

தமிழக டி.ஜி.பி., போலோநாத் கூறும்போது, “தமிழகம் முழுவ தும் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந் தது. பெரிய அளவிலான புகார்கள் ஏதும் வரவில்லை. ஓட்டுப்பதிவு அமைதியாக நடக்க பொதுமக்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு அளி த்தனர்’ என்றார்.

மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்த நிலையிலும், பெரும்பாலா ன ஓட்டுச்சாவடிகளில், வாக்காள ர்கள் வரிசையில் காத்திரு ந்தனர். அவ்வாறு காத்திருந்தவர்களுக்கு, “டோக்கன்’ வழங்கப்பட்டு, ஓட்ட ளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஓட்டுப் பதிவு முடிந்ததும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், “சீல்’ வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்க ப்பட்டன.வன்முறை, மோதல்கள், ஓட்டுச்சாவடி கைப்பற்றல் போன்ற பெரிய அளவிலான அசம்பாவித சம்பவ ங்கள் ஏதும் இல்லாமல் அமைதியாக தேர்தல் நடந்ததால், ஓட்டு ப்பதிவு 75 முதல் 80 சதவீதமாக உயர்ந்தது என, தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார்.

ஓட்டுப்பதிவு துவங்கிய நேரம் முதல், மாலை வரை பொதுமக்கள் ஆர்வத்தோடு ஓட்டுச்சாவடிக்கு அலை அலையாய் வந்து ஓட்ட ளித்துள்ளது அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத் தியு ள்ளது. மக்கள் மத்தியில் யாரு க்கு ஆதரவாக அலை வீசுகி றது என்பதை புரிந்துகொள்ள முடி யாமல், அரசியல் கட்சிகள் குழப் பத்தில் ஆழ்ந்துள்ளன.

கடந்த சட்டசபை தேர்தல் ஓட்டு ப்பதிவு சதவீதம்

2006 சட்டசபை தேர்தல்

மொத்த வாக்காளர்கள்:
ஆண்கள் – 2,31,13,794
பெண்கள் – 2,34,89,558
மொத்தம் – 4,66,03,352
ஓட்டு அளித்தவர்கள்:
ஆண்கள் – 1,67,35,616
பெண்கள் – 1,61,50,033

ஓட்டு சதவீதம்:

ஆண்கள் – 72.41%
பெண்கள் – 68.75%
மொத்தம் – 70.82%
செல்லும் ஓட்டுகள் – 3,29,91,555
செல்லாத ஓட்டுகள் – 5,828 (மொத்த ஓட்டில் 0.02% சதவீதம்)
மொத்த ஓட்டுச் சாவடிகள் – 51,450

2001 சட்டசபை தேர்தல்

மொத்த வாக்காளர்கள்:

ஆண்கள் – 2,38,54,950
பெண்கள் – 2,36,24,050
மொத்தம் – 4,74,79,000

ஓட்டு அளித்தவர்கள்:
ஆண்கள் – 1,46,22,260
பெண்கள் – 1,34,25,817

ஓட்டு சதவீதம்:

ஆண்கள் – 61.30%
பெண்கள் – 56.83%
மொத்தம் – 59.07%
செல்லும் ஓட்டுகள் – 2,80,37,314
செல்லாத ஓட்டுகள் – 6,637 (மொத்த ஓட்டில் 0.02% சதவீதம்)
மொத்த ஓட்டுச் சாவடிகள் – 54,907

1996 சட்டசபை தேர்தல்

மொத்த வாக்காளர்கள்:

ஆண்கள் – 2,14,05,752
பெண்கள் – 2,10,73,213
மொத்தம் – 4,24,78,965

ஓட்டு அளித்தவர்கள்:
ஆண்கள் – 1,47,88,077
பெண்கள் – 1,36,51,172

ஓட்டு சதவீதம்:

ஆண்கள் – 69.08%
பெண்கள் – 64.78%
மொத்தம் – 66.95%
செல்லும் ஓட்டுகள் – 2,71,54,721
செல்லாத ஓட்டுகள் – 12,81,987 (மொத்த ஓட்டில் 4.51% சதவீதம்)
மொத்த ஓட்டுச் சாவடிகள் – 54,789

1991 சட்டசபை தேர்தல்

மொத்த வாக்காளர்கள்:
ஆண்கள் – 2,02,09,586
பெண்கள் – 1,96,99,201
மொத்தம் – 3,99,08,787

ஓட்டு அளித்தவர்கள்:
ஆண்கள்- 1,33,27,036
பெண்கள் – 1,21,51,608

ஓட்டு சதவீதம்:
ஆண்கள் – 65.94%
பெண்கள்- 61.69%
மொத்தம்- 63.84%
செல்லும் ஓட்டுகள் – 2,46,49,408
செல்லாத ஓட்டுகள் – 8,25,567 (மொத்த ஓட்டில் 3.24% சதவீதம்)
மொத்த ஓட்டுச் சாவடிகள் – 43,000

கடந்த தேர்தல்களில் தமிழகத்தில் பதிவான ஓட்டு சதவீதம்

2001 சட்டசபை :59.07
2004 லோக்சபா : 60.81
2006 சட்டசபை :70.81
2009 லோக்சபா :68

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply