Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிசேரியன் எதற்காக?

எத்தனையோ தாய்மார்கள் டாக்டர் நார்மல் டெலிவரி ஆகும் என்று சொன்னார். ஆனால் கடைசியில் ஆபரேஷன் பண்ணி விட்டார் என்று குறை பட்டுக் கொள்வார்கள்.

ஒரு தாயை, அவருக்கு எல்லா சோதனை களும் செய்து, அவர் நார்மல் டெலிவரிக்கு உகந்தவர் தான் என்று தீர்மானித்து, அவரை நார்மல் டெலி வரிக்கு உட்படுத்து கிறோம்.

ஆனால், பிரசவ வலி வரும் போதுதான், வலியின் தன்மையி லோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திறப்ப திலோ, குழந்தையின் நாடித்துடிப்பிலோ மாற்றங்கள் ஏற்பட்டு, குழந் தையின் பாதை வழியே பயணப்படுவது தடைபடுவ தை உணரு கிறோம்.

இவை அனைத்தும், அந்தக் கணம், பிரசவ வலி கண்ட பின்புதான் கவ னிக்க முடி யும் – கணிக்க முடியும் – அன்றி முன்கூட்டியே தீர்மா னிக்க இயலாது. எனவே, பல சமயங்களில் பிரசவ வலி கண்ட பின்பு, அந்த தீர்மானத்தை மாற்றி, சிசேரியன் செய்ய நேரிடுகிறது.

பெரும்பாலோர் “முதல் தடவை சிசேரியன் செய்த தால் இந்த முறை யும் டாக்டர் சிசேரியன் செய்து விட்டார் என்று மேம் போக்காகப் புலம்பு கிறார் கள். முதல் முறை செய் யும்போது, அந்தக் கருப் பையில் தையல் போடுவதால் அது காயப்பட்டு விடுகிறது. அதை வடு என்கிறோம்.

அந்த வடு எந்த அளவுக்கு உறுதி யானது என்று பெரிதாக யாராலும் கணி க்க முடியாது. எனவே, முதல் முறை சிசேரியன் செய்தவர்கள், அடுத்த பிரசவத்தில் அவர்க ளது நார்மல் டெலிவரிக்கான சாத்தியக் கூறுகள் 50% என்று தான் சொல்ல வேண்டும்.

பிரசவம் நெருங்கும்போது, குழந் தையின் தலை இடுப்பு எலும்புக்கு மேலாக இருப்பது பிரசவ வாய், ஏதுவாக இல்லாமல் இருப்பது போன்ற கண்டுபிடிப் புகள் இருந்தால், அந்தத் தாய்க்கு சிசேரியன் முன் கூட்டியே செய்து விட வேண் டிய தாகிறது.

ஏனெனில், அந்தத் தாயை பிரசவ வலிக்கு உட்படுத்தி னால், மேற் சொன்ன கண்டு பிடிப்புகளால், குழந்தை பிற க்க நேரமாகி அந்த நேரத் தில் கருப்பையிலுள்ள அந்த வடு, வலுவுற்று கருப்பையே வெடித்து, தாயின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே நார்மல் டெலிவரி என்ற விஷப்பரீட்சைக்கு இடம் கொடுக் காமல் முன் கூட்டியே சிசேரியன் செய்ய வேண்டி யதாகி விடுகிறது. சரி, சிசேரி யன் செய்வது என்றால் வலி கண்ட பிறகு செய்யக் கூடாதா? எதற்காக 10, 15 நாள் முன்பாக செய்ய வேண்டும் என்ற முணு முணுப்பு எழத்தான் செய்யும்.

பிரசவ வலி என்பது எந்த நேரத்திலும் முன் அறிவிப்பின்றி வருவது அந்த நேரம்தான் தாய் சாப்பிட்டிருப்பாள். எனவே அவளு க்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு யோசிக்க வேண்டி உள்ளது. அல்லது அவள் இருக்கும் இடத்திலிருந்து வலி கண்ட பிறகு பயணப் பட்டு வர நீண்ட நேரமாக லாம்.

அந்நேரத்தில் பிரசவ வலி யினால், தாய்க்கோ, குழந்தை க்கோ ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. இதை எல்லாம் மனதில் கொண்டு தான் குழந் தை முழு வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும் ஒரு வாரங்க ளுக்குப் பிறகு, அதாவது, 10, 15 நாட்கள் முன்பாகவே ஆபரே சன் செய்ய நேரிடுகிறது.

சில சமயம் டாக்டர்கள், தாய்மார்கள் வேண்டுகோளுக்கு இண ங்கி, நல் ல நாள் நல்ல நேரம் பார்த்து அந்த அறுவை சிகிச்சை செய்ய வேண் டியதாகி விடுகிறது.

இணையத்தில் கண்டெடுத்த வீடியோ
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: