Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பேஸ்புக் பாவனையாளர்கள் கவனம்!

பேஸ்புக் பாவனையாளர்களின் கவனத்துக்கு!

இணையத்தள சமூக வலையமைப்பான பேஸ்புக்கைப் பாவிப் பவர்கள் இன்னொரு விடயத்திலும் இப்போது கவனம் செலுத்த வேண்டி யுள்ளது.

பேஸ்புக் வலையமைப்பு இப்போது காப்புறுதிக் கம்பனிகளால் அவதானிக் கப்பட்டு வருகின்றமை அண்மைய சம்பவம் ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

நதாலி புலன்சார்ட் என்ற முப்பது வயதுப்பெண் மொன்றியலைச் சேர்ந்தவர் IBM நிறுவனத்தில் தொழில்நுட்பவியலாளராகப் பணிபுரிபவர். 2008 ல் இவர் அழுத்த நோயால் பாதிக்கப் பட்டு ள்ளதாகக் கூறி மருத் துவ விடுமுறை எடுத்தார்.

இவருக்கு மாதாந்த மருத்து வக் காப்புறுதி நலக் கொடுப் பன வுகளும் கிடைக்க ஆரம் பித்தன. இவ்வாறு ஒரு வரு டம் கழிந்த நிலையில் எவ் வித அறிவிப்பும் இன்றி இவரு க்கான கொடுப் பனவுகள் திடீரென நிறுத்தப்பட்டன.

ரொறன்ரோ காப்புறுதிக் கம்பனியில் இது பற்றி விசாரித்தபோது தான் விடயம் தெரியவந்தது. இந் தப் பெண் பேஸ்புக்கில் அண்மை யில் பாவித்துள்ள படங்களை இந்த நிறுவனம் அவதானித் துள் ளது.

அதில் அவர் ஒரு கடற்கரை மற் றும் களியாட்ட விடுதி என்பன வற்றில் உல்லாசமாக இருக்கும் படங்களை இந்தப் பெண் வெளி யிட்டுள்ளார். இந்தப் படங்களின் பிரகாரம் அவருக்கு தற்போது மன அழுத்தங்கள் எதுவும் கிடையாது என்ற முடிவுக்கு வந்த காப் புறுதி நிறுவனம் அவருக்கான மாதாந்த மருத்துவ நலக் கொடுப் பனவுகளை நிறுத்திக் கொண்டது.

இந்தப் படங்களைப் பார்த்தபின் எந்த விதமான விசாரணை களையும் மேற்கொ ள்ளாமல் இவர் மோசடி புரிவதாகக் கருதி காப்புறுதி நிறுவனம் கொடுப்பனவுகளை நிறுத்திக் கொண்டது.

ஆனால் தனக்கு இழைக்கப்பட்டது அநீதி என்றும், தனது வைத்தி யருடன் கலந்து பேசாமல், தனக்கு எவ்வித அறிவித்தலும் வழங் காமல் கொடுப் பனவுகள் நிறுத்தப்பட்மைக்காக அந்தப் பெண் மேற்படி நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய் துள்ளார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: