Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (17/04)

அன்புள்ள ஆன்ட்டி —
நான் ஒரு டாக்டர். என் கல்லூரி வாழ்க் கையில், நான் செய்த தவறு, என் எதிர்கா லத்தையே பாதித்து விடும் முன், என் வாழ் க்கைக்கு நல்ல வழிகாட்டுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் எழுதுகிறேன். இக் கடிதம், என்னைப் போ ன்று தவறு செய் யும், தவறு செய்ய விருக்கும் மற்ற மாணவியருக்கு, ஒரு பாடமாக அமை யட் டும்.

தஞ்சாவூரில், நல்ல குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவள். நான், அண்ணன், தம்பி, தங்கை என்று, குடும்பத்தில் நான்கு பிள் ளைகள். என் அத்தை மகனுக்கு, நான் தான் என்று, சிறுவயது முதல் பேசி வைத்திருந்தனர்.

ஆனால், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, என் குடும்பத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. என் அத்தை, கொஞ்சம், கொஞ்ச மாக என் குடும்பத்தை ஒதுக்கினார்; ஆனால், என் அத்தை பைய ன், என்னையே சுற்றி, சுற்றி வந்தான். என் அண்ணனுக்கும், இது தெரியும். “முத்தம் கொடு… நான், உன்னை திருமணம் செய்யப் போகிறவன்…’ என்பான்; நான் சம்மதிக்கவில்லை.

பள்ளியிலும், சீனியர் மாணவன் ஒருவன், என்னை விரும்பி னான்; அதையும், நான் கண்டு கொள்ளாமல், படிப்பில் கவனம் செலுத்தி, அதிக மதிப்பெண் பெற்று, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன்.

என் அண்ணன் இன்ஜினியரிங் முடித்தான். இருவரும் சம்பாதி த்து, குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும்; பிறகு தான், திருமணம் என்று முடிவு செய்தோம்.

ஆனால், கல்லூரிக்குள் நுழைந்த பின், என்னையே சுற்றி வந்தான் சக மாணவன்; நண்பர்கள் ஆனோம். ஆனால், அவன் ஏற்கனவே பள்ளியில் வேறொரு பெண்ணை காதலித்ததாகவும், அவன் தாய், “தற்கொலை செய்து கொள்வேன்…’ என்று பயமுறுத் தியதா ல், அந்தப் பெண்ணை, அவன் நிராகரித்ததாகவும் பலமுறை என்னிடம் கூறி, வருந்தினான்.

பிறகுதான், அவனை விரும்ப ஆரம்பித்தேன். என் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பும் என்று எண்ணியதால், நான், அவனிடம் கூற வில்லை; ஆனால், அவன் என்னிடம், “நீ, என் வாழ்க்கையில் கூட இருந்தால், நன்றாக இருக்கும்…’ என்று கூறினான். “நான், உன் னை காதலிக்கிறேன் என்று சொல்ல மாட்டேன்; ஆனால், எனக்கு உன்னை மிகவும் பிடித்திருக்கு…’ என்றான்.

ஒரு நாள், “உன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும்…’ என்று கூறினான்; நான் மறுத்தேன். காதல் உரையாடல்களை தொலை பேசியில் பேசினோம்.

தனிமை கிடைத்த போது, கட்டியணைப்பது, முத்தமிடுவது என்று ஆரம்பித்தான். பிறகு, தவறு என்று தெரிந்தும், நானே, நான் கைந்து முறை, செக்ஸ் வைத்துக் கொள்ள உடன்பட்டேன்.

கடைசி வருட தேர்வு எழுதியதும், “என் அம்மாவிடம் கேட்டு, அவர்கள் சம்மதித்தால், திருமணம் செய்து கொள்கிறேன்…’ என்றான்; ஆனால், கடைசியில், பிரிந்து சென்றான்.

இப்போது, தவறு செய்த குற்ற உணர்வு, என்னை வதைக்கிறது. இன்னொரு ஆண் மகனை ஏமாற்றுவதற்கு இஷ்டமில்லை. இப் போது, படித்து, முடித்து சம்பாதிக்கிறேன்; என் அண்ணனும், கைநிறைய சம்பாதிக்கிறான். என் அண்ணனும், பெற்றோரும், எனக்கு, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்க ளையும் ஏமாற்ற எனக்கு இஷ்டமில்லை. எனக்கு ஒரு வழி கூறு ங்கள் ஆன்ட்டி.

இப்படிக்கு,
அன்பு மகள்.

அன்புள்ள மகளுக்கு —
உன் கடிதம் கிடைத்தது. உன் வாழ்க்கையில் இதுவரை மூன்று ஆண்கள் குறுக்கிட்டிருக்கின்றனர். முதலாமவன், “முத்தம் கொடு … திருமணம் செய்து கொள்கிறேன்…’ எனக் கூறி, உன் னையே சுற்றி வந்த அத்தை மகன். உன் குடும்பத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, உன் குடும்பம் வறுமையில் வாடிய போது, அத்தை மகன் ஒதுங்கிக் கொண்டான். இரண்டாமவன், நீ மேனிலைப் பள்ளியில் படிக்கும் போது, உன்னை காதலித்த சீனியர் மாண வன். நீ, அவனுக்கு உடலையும் தரவில்லை, மனதையும் தரவி ல்லை. மூன்றாமவன், நீ மருத்துவம் படிக்கும் போது, உன்னை காதலித்த சக மாணவன். முதலிருவருக்கும் தராத உடலையும், மனதையும், மருத்துவக் கல்லூரி மாணவனிடம் தந்திருக்கிறாய்.
மூன்றாவது ஆணிடம் நீ எச்சரிக்கையாக இல்லாததற்கு, கீழ் கண்ட விஷயங்கள் காரணமாய் இருக்கும் என நம்புகிறேன்.

*மருத்துக் கல்லூரியில் சேரும் வரை, உன் குடும்பத்து பொரு ளாதார நிலையையும், உன்னுடைய எதிர்காலத்தையும் அதிகம் யோசித்து பார்த்திருக்கிறாய்; அதனால், உன் உடலை, ஆசை ஜெயிக்கவில்லை.

* மருத்துவப் படிப்பு படிக்கும் போது, “படிப்பு முடிந்தபின், டாக் டராக போகிறோம்; லட்சம், லட்சமாய் சம்பாதிக்க போகிறோம்…’ என்ற எண்ணம் வந்துவிட்டது உனக்கு.

மருத்துவப் படிப்பில் ஆணும், பெண்ணும் அதிகம் பழகும் வாய்ப் புண்டு. “நான் ஒரு டாக்டர்; எனக்கு, பாதுகாப்பாய் செக்ஸ் வைத் துக் கொள்ள தெரியும்…’ என்ற எண்ணம், சிலருக்கு வந்து விடுகி றது. தவிர, உடல் கூறு இயல் போன்ற தலைப்புகள் படிக்கும் போது, செக்ஸ் பற்றிய அச்சம் அகன்று விடுகிறது.

உன்னுடன் பழகிய மருத்துவக் கல்லூரி மாணவன், செக்ஸ் விஷய த்தில், “எக்ஸ்பர்ட்!’ பள்ளி நாட்களில், ஒரு பெண்ணை காதலித்ததையும், உன்னுடன் பழகிக் கொண்டே வேறொரு த்திக்கு முத்தம் கொடுத்ததையும், பெருமையாக உன்னிடம் கூறியிருக்கிறான். உன்னை அவன் பிடித்தது கூட, படிப்படியாக தூண்டில் முயற்சிகளால் தான்.

முதலில், “நீ, என் வாழ்க்கையில் கூட இருந்தால் நன்றாக இருக் கும்…’ என்றிருக்கிறான்; அடுத்து, “நான், உன்னை காதலிப்பதாக கூற மாட்டேன்; ஆனால், உன்னை, எனக்கு பிடிச்சிருக்கு…’ என, பசப்பி இருக்கிறான். அடுத்து, தற்செயலாக நடப்பது போல், உன்னை இடித்து, உரசியிருக்கிறான். தொடர்ந்து, போனில் காமப் பேச்சு பேசி, உன்னை நெகிழ்த்தி இருக்கிறான்.

பின், தாம்பத்யத்திற்கு முந்தைய விளையாட்டு விளையாடி, உன் மன உறுதியை வேரோடு சாய்த்திருக்கிறான். மொத்தத்தில், திட்டமிட்டு திருடும், கன்னக்கோல் திருடன் அவன். காரியம் முடிந்ததும், இப்போது, எம்.டி., படித்து விட்டு, அம்மா சம்ம தித்தால், உன்னை மணந்து கொள்வதாக கூறுகிறான்.

உன்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்வதற்கு, அம்மாவிடம் அனு மதி வாங்கினானா?

திருமணத்திற்கு முன், தவறு செய்தோர் திருந்தி, திருமணம் செய்து, மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். உனக்கு கணவனாய் வருப வன் கூட, ஏதேனும் தவறு செய்து, அதிலிருந்து மீண்டிருக்க சாத் தியம் உண்டு. செய்த தவறுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேள். இனிமேல், தவறுகள் செய்யாதிருக்கும் மன உறுதி வேண்டி பெறு. மருத்துவக் கல்லூரி காதலனை, மீதி ஆயுளில் சந்திக்கும் சந்தர்ப்பங்களை கத்தரி.

உன் பெற்றோருக்கும், தம்பி, தங்கைகளுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நீயும், உன் அண்ணனும் செய்தல் வேண்டும். உன் அண்ணனும், பெற்றோரும் பார்த்து வைக்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்.

உன்னிடம் மருத்துவம் பார்க்க வரும், “டீன்-ஏஜ்’ பெண்களுக்கு, திருமணத்திற்கு முந்தைய செக்ஸ் ஏற்படுத்தும் ஆபத்துகளை விளக்கிக் கூறி, அவர்களை நெறிப்படுத்து. ஆண்களை பாதுகாப் பான தூரத்தில் நிறுத்தி, நிர்வகிக்கும் கலையைக் கற்றுக் கொடு. உன்னுடைய மருத்துவ சேவையே, உன் குற்ற உணர்வை போக் கும் அருமருந்து.

உன் திருமணம் சிறப்பாய் நடக்க, வாழ்த்துக்கள்!

—என்றென்றும்

தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: