Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

போன் செய்யும் எண்ணை (அ) நபரை நினைத்தாலே போதும் ஆழைப்பைத் தானே அனுப்பும் செல்போன்

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞா னிகள் ஒரு புதிய முறையை கண்டறிந்துள் ளனர். இம் முறை மூலம் யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர் களை மனதில் நினைத்தால் போ தும். அவர் களுக்கு அழைப் பு சென்று விடும்.

இதுபற்றி விஞ்ஞானி ஸை பிங் ஜங் கூறியதாவது:

மனதில் நினைப்பதை புரிந்து கொண்டு செயலாற்றும் கணணிகள் ஏற்கனவே உள்ளன. இந்த தொழில்நுட்பத்தை செல்போனிலும் பயன் படுத்தியுள்ளோம். மூளையில் ஏற்படும் அதிர்வுகளை இ.இ.ஜி கருவி மூலமாக பதிவு செய்து அதற்கேற்ப இது செயல் படுகிறது.

இதற்காக புளூடூத் கருவியுடன் இணைந்த பட்டை ஒன்றை தலையில் அணிந்து கொள்ள வேண்டும். “யாருக்கு போன் செய்ய வேண்டும்” என்று மூளையில் ஏற்படும் நினைப்பு, அதிர்வு இ.இ.ஜி கருவி மூலம் பதிவு செய்யப்பட்டு இத்தகவல் புளூடூத்துக்கு அனுப்பப்படுகிறது. நினை த்த எண்ணுக்கு அழைப்பு போகும்.

நோக்கியா என்73 என்ற மாடல் செல்போனை வைத்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு 70 முதல் 85 சதவீதம் வரை வெற்றி கிடைத்திருக்கிறது. பிரத்யேக பயிற்சி எடுத்துக் கொண்டால் யார் வேண்டுமானாலும் நினைத்தவுடன் போன் செய்ய முடியும்.

நம்பர் அழுத்த முடியாத வயதானவர்கள், மாற்றுத் திறனாளி களை கருத்தில் கொண்டு இதை கண்டுபிடித்துள்ளோம். இவ் வாறு ஜங் கூறினார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: