Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணிணி எதிர்நோக்கும் 5 அபாயங்கள்

எப்போதும் போல கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு இடையூறு தந்து, நம் பெர்சனல் தகவல்களைத் திருடி அதன் மூலம் பல வகை யான மோ சடிகளில் ஈடுபடும் கும்பல் தொடர்ந்து இந்த வே லையில் ஈடுபட்டுக் கொண்டு தான் உள்ளது. பலவீன மான வழிகளைக் கண்டு அவற்றை அடைத்தாலும், சாப்ட் வேர் பயன்பாட்டு தொகுப்புகளில், மே லும் மேலும் பல புதிய இடங் களைக் கண்டறிந்து, அவற்றின் மூலம் கெடுதல் விளைவிக்க இவர் கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இணை யாக வும், சில கூடுதலான சாமர்த்தியங்களுடன் தற் போதைய ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் இயங்கி வருகின்றன. இருந் தாலும், எந்நேரமும் ஆண் ட்டி வைரஸ் தொகுப் புகள் நமக்குத் துணை இருக் காது. பல நேரங்களில் நம் சமயோ சிதப் புத்திசாலித் தனம் தான், இத்தகைய தீய விளைவுகளிலிருந்து முன் னெச் சரிக்கையாக இருக்க உதவும்.

இந்த ஆண்டில், இவ்வா றான தீய விளைவுகளுக்கு வழி தரக்கூடிய ஐந்து முக்கிய பிரிவுகளை, வைரஸ் எதிர்ப்பு ஆய்வு நிறுவனங்கள் பட்டிய லிட்டுள்ளன. குறிப்பாக, சோபோஸ் (Sophos) பாதுகாப்பு நிறுவன தொழில் நுட்ப ஆய்வாளர் கிர ஹாம் க்ளூலி முக்கிய சில பிரிவுகள் குறித்து எச்சரி க்கை தந்துள்ளார். அவை எவை என்று இங்கு பார்க்கலாம். இவர் தலை மை மேற் கொண்டிரு க்கும் குழு, பழைய புதிய மால் வேர் தொகுப்புகளாக, தினந் தோறும் 95,000 வகைகளை ஆய்வு செய்து வருகிறது என்பது இங்கு குறிப் பிடத் தக்கது.

1. முதல் அபாயம் – மொபைல் சாதனங்கள்: இங்கு மொபைல் சாதன ங்கள் என்று குறிப்பிடப் படுவது மொ பைல் போன்கள் மட்டுமல்ல. அவற்றையும் சேர் த்து நாம் செல்லும் வழியெல் லாம் செயல் பட எடுத்துச் செல் லும் கம்ப்யூட்டர் மற்றும் துணை சாதனங்களாகும். முத லாவதாக, மொபைல் போன் களில் ஸ்மார்ட் போன்கள் இவ் வகை அபாயத்திற்கு ஆளாகி ன்றன. உலக அளவில் 85% இளைஞர்கள் மொ பைல் போன் பயன் படுத்துகின்றனர். ஒரு சில நாடுகளில் இவர்களில் பலர் ஸ்மார்ட் போன் பயன்படு த்துகின்றனர். ஸ்மார்ட் போன் விலை யும் குறைந்து வருவதால், இவற்றின் எண்ணிக்கை யும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த போன்களில் பயன்படுத்தக் கிடைக்கும் அப்ளி கேஷன்கள் வழி யாகப் பல வைரஸ்களும் மால்வேர் தொகுப்புகளும் பரவத் தொடங்கிவிட்டன. அண் மையில் மார்ச் 1 அன்று கண் டறிந்தபடி, கூகுள் நிறுவன த்தின் அதிகார பூர்வமான ஆண்ட்ராய்ட் மார்க் கட்டில் இருந்த ஐம்பதுக்கும் மேற் பட்ட தர்ட் பார்ட்டி தொகுப் புகளில் ட்ராய்ட் ட்ரீம் (Droid Dream) என்னும் ட்ரோஜன் வைரஸ் இருப்பது கண்டறி யப்பட்டது. இந்த வைரஸ் உள்ள தொகுப்பினை இயக்கியவுடன், போனில் அதன் உரிமை யாளர் அனுமதியின்றி அனைத்து தகவல்களையும் கையாளும் வசதியை இந்த வைரஸ் பெறு கிறது. இதன் மூலம் மேலும் பல வைரஸ் கொண்ட அப்ளிகே ஷன் களை, போனுக்கு இந்த வைரஸ் டவுண்லோட் செய்து கொள்கிறது.
இந்த வைரஸ் குறித்து அறிந்த கூகுள் நிறுவனம், தன் ஆண்ட் ராய்ட் மார்க்கட்டில் உள்ள அனை த்து தொகுப்பு களையும் ஆய்வு செய்து, இந்த வைரஸ் இருந்த அப்ளிகேஷன்கள் அனைத் தை யும் நீக்கியது.

அதே போல மற்ற போன்களில் பரவி இருந்த இதே வைர ஸையும் தானாகவே நீக்கியது.

சீனாவில், இவ்வகையான வைரஸ்கள், ஆன்லைன் அமைப்புகள் வழியே மொபைல் போன்களில் பரவியது கண்டறியப்பட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

எனவே மொபைல் போனு க்கான அப்ளிகே ஷன்களை டவுண் லோட் செய்கையில், இணைய தளம் சென்று, அந்த அப்ளி கேஷன்கள் பாதுகாப்பான வை தானா என்று உறுதி செய்து கொண்டு செயல்பட அனைத்து வைரஸ் எதிர்ப்பு நிறுவனங்களும் கேட்டுக் கொண்டுள்ளன.

2. சமுதாய இணைய தள வழி: பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சோஷியல் நெட்வொர்க் இணைய தளங்கள் , மக்களிடையே நல்லு றவினை வளர்க்கும் அதே வேளை யில், வைரஸ்கள் வளர்ந்து பரவு வதற்கு ஏற்ற இடங்களாகவும் மாறி வருகின்றன. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு கள் தயாரிக்கும் பிட் டிபண் டர், இது குறித்துக் கூறுகையில், பேஸ்புக் தளத்தில் உள்ள 20% பேர், மிக எளிதாக மால்வேர் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையில் உள்ளவர்களாகக் காணப் படுகின்றனர் என்று அறிவித் துள்ளது. இந்த தளங்களில் ஸ்கேம்கள் வழியாக பல மோசமான விளை வுகள் ஏற்பட்டுள்ளன. போட்டோக் கள், வீடியோக்கள் ஆகிய வற்றினைத் தூண்டுதல்க ளாகக் கொண்டு இவை இந்த தள உறுப் பினர் களைச் சிக்க வைக்கின்றன. போலியான சில அப்ளி கேஷன்கள் வழியாகவும் இவை பரவுகின்றன. சிக் கிடும் நபர் களின் மொபைல் போன் எண், பிறந்த நாள், ஊர், பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்கள் குறி த்த தகவல்களைத் திருடி, அவர்க ளைப் போல போலியான ஒரு தோற்ற த்தை உருவாக்கி ஏமாற்ற முயல்கி ன்றனர்.
எனவே உங்கள் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு போட்டோ மற்றும் வீடியோவினைப் பார்க்க அழைக்கும் ஸ்கேம் தகவல் களை எச்சரிக்கையுடன் அணு க வேண்டும். அல்லது முற்றி லு மாகத் தவிர்க்க வேண்டும்.

3. போலி ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள்: அண்மைக் காலத்தில் பிரபலமான ஆண் ட்டி வைரஸ் தொகுப்புகளின் பெயரில், போலி யான சில அறிவிப்புகள் வெளியா கின்ற ன. இவற்றை நம்பி செய லில் இறங்குபவர் களின் கம்ப்யூட்டர் தகவல்கள் முழுமை யாகத் திருடப்படுகின்றன. சோபோஸ் நிறுவனம் இது வரை 8,50,000 க்கும் மேற்பட்ட போலி ஆண்ட்டி வைரஸ் அறிவிப்பு களைக் கண்ட றிந்து எச்சரிக்கை செய்திகளை வழங் கியுள்ளது. இவற்றை “scareware” என இந்நிறுவனம் அழைக்கிறது. முதலில் பிரபல மான ஆண்ட்டி வைரஸ் நிறுவ னத்தின் பெயரில், இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தருவ தாக, மக்களை இது ஏமாற்றுகிறது. சிக்குபவர்களுக்கு, ஏதேனும் ஒரு புரோகிராமை இயக்கி கம்ப்யூட்டரை ஆய்வு செய்வதாகக் கூறுகிறது. பின்னர், உங்கள் கம்ப்யூட்டர் மோச மான வைரஸ் வசம் சிக்கியுள்ள தாகவும், அதனை நீக்க ஒருமுறை கட்டணம் செலுத்தித் தங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசை காட்டிச் சிக்க வைக்கிறது. இதற்கு இணங்குபவர்களிடம் உங்களின் கிரெடிட் கார்ட் மூலம் கட்டண த்தைச் செலுத்தச் சொல்லிக் கேட்டுப் பின்னர், அந்த கிரெடிட் கார்டில் உள்ள பணம் அனை த்தையும் சுரண்டி விடுகிறது.
இது போல அறிவிப்பு வருகை யில், சம்பந்தப்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் களைத் தரும் நிறுவனங்களின் இணைய தளங்களுக்கு நீங்களாகச் சென்று, அவ்வாறு ஏதேனும் புதிய புரோகிராம் உள்ளதா என்று அறிந்து கொள்வதே நல்லது.
4. பி.டி.எப். டாகுமெண்ட் வழி: இந்த வழி மிக மிகப் பழைய வழி என்றாலும், இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இமெ யில் வழியாக ஸ்பேம் மெயில் களை, இணைக்கப் பட்ட பைல் களுடன் அனுப்பி, அவற்றை டவுண்லோட் செய்து திறந்தவுடன் கம்ப்யூட்டரில் பரவி தகவல் களைத் திருடுவது இந்த பழக்க த்தின் வழியாகும்.
இப்போது இவ்வாறு இணைக்கப் படுவது பெரும்பாலும் பி.டி.எப். பைல்களாகத் தான் உள்ளன. ஏனென்றால், வைரஸ்களை பி.டி. எப். பைல்களில் இணை ப்பது மிகவும் எளிதான ஒரு வழியாகும். 2010 ஆம் ஆண்டில், இவ்வாறு மோசமான நோக்க த்திற்காக அனுப்பப்பட்ட மெ யில்களில் 65% மெயில்களில் பி.டி.எப். பைல்களே வைரஸ் களுடன் அனுப்பப்பட்டன என்று கண்டறிந் துள்ளனர். இது முந்தைய 2009 ஆம் ஆண் டில், 52.6% ஆக இருந்தது. நடப்பு ஆண்டில் இது 76% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இதனைத் தடுக்க, நல்லதொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை எப்போதும் இயக்க நிலையிலும், அப்டேட்டட் நிலையிலும் வைத்திருக்க வும். இமெயில்களுடன் வரும் இணைப்பு களை, நீங்கள் எதிர்பார்த்த இணைப்பாக இல்லாமல் இருந்தால் திறக்க வேண்டாம். அப்படியே திறக்க வேண்டும் என எண்ணினால், ஆன்லைனில் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கொண்டு சோதி த்து முடிவுகளைக் கூறும் தளங்களுக்கு அவற் றை அனுப்பி, முடிவு பெற்ற பின் னரே திறக்கவும்.
5. இணைய வழி நிறுவன யுத்தம் : வர்த்தக ரீதியாகப் போட் டியிடும் நிறு வனங்கள், இப்போது ஒருவரை ஒருவர் காலை வாரும் வேலைக்கு இணைய த்தைப் பயன்படுத்தத் தொட ங்கி விட்டனர். போட்டி நிறுவனத்தின் சர்வ ருக்கு மால்வேர்களை அனுப்பி, அந்நிறு வனத்தின் ரகசிய தகவல் களைத் திருடும் வேலை அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் நடைபெறு கின் றன. விக்கி லீக்ஸ் தளத்தை முற்றுகையிட்ட முயற்சி மற்றும் எகிப்து, லிபியா மற்றும் துனிஷியா நாட்டில் தொடங்கிய போராட்டங்கள் ஆகிய வற்றின் பின்னணியில் இது போன்ற இணை யக் கெடுதல் வேலைகள் இருந் ததாகத் தெரிகின்றன. இன்னும் இந்தியாவில் இந்த வேலை தொடங்கப் படவில்லை. ஆனால் அந்த நாளும் சீக்கிரம் வரலாம் என்றே நிறுவனங்கள் கருது கின்றனர். இந்த முயற்சிகள் தனிப்பட்ட நபரைப் பாதிப்பதில்லை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: