Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நானோ கார் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் டாடா

நாட்டின் சிறிய நகரங்களில், நானோ கார்களுக்காக பிரத்யேக ஷோ ரூம்களை திறக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொட ர்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவன செய்தித் தொ டர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்க ப்பட்டுள்ளதாவது, நிறுவன த்தின் முத்தாய்ப்பான தயா ரிப்பான மினிடிரக் ஏசின் விற்பனை யை அதிகரிக்கும் பொருட்டு, இதேபோல் பிரத்யேக ஷோரூம் களை அமைத்தோம். அதன்பலனாக விற்பனையும் கணிசமான அளவு அதிகரித்தது. இதனையடுத்து, நானோ காரின் விற்பனையை அதிகரி க்கும் பொருட்டு, சிறு மற்றும் நடுத்தர நகரங்களில் நானோ கார்களு க்கென பிரத்யேக ஷோரூம் அமைக்கப்பட உள்ளது. 600 புதிய விற்ப னை மையங்கள் திறக்கப்பட உள்ளன. தற்போதைய அளவில், நிறுவனத்திற்கு 210 அக்சஸ் பாயிண்ட்களும், 151 அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டர்களும் இயங்கிவருவதாக அதில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: