Monday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பொன்னர்-சங்கர் – திரை விமர்சனம்

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பிரமாண்டம் என்றால் அது இயக்குநர் ஷங்கர்தான். ஆனால், அந்த ஷங்கரே இது வரை சரித்தி ரத்தின் பக்கம் ஒதுங்க வில்லை யென்றா லும், சர்வ சாதாரண மாக ஒரு சரித் திரக்கதையை படமா க்கியி ருக்கும் தியா கராஜன் ஷங்க ரையே மிஞ்சும் அளவு க்கு தனது இயக்குநர் முகத் தை அழுத்தமாக பதிய வைத் திருக்கும் படம். ஒவ்வொரு காட்சிகளிலும் பிரமாண்டத்தை கையாண்டு, கலைஞர் கை வண்ணத்தில் உருவான இந்த கதையை திரைப்படம் என்னும் காவியமாக்கி தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்த்தி ருக்கி றார்.

ஜெயராமை காதலித்ததால் தனது தந்தையின் கோபத்திற்கு ஆளான குஷ்பூ, நாட்டை விட்டே வெளியேற்றப் படுகி றார். வெளி யேறும் இந்த காதல் தம்பதிகளுக்கு பிறக்கும் இரட்டை குழந்தைகள்தான் பொன்னர் -சங்கர். குஷ்பூ-ஜெயராம் காதலுக்கு எதிரியான பிரகாஷ் ராஜ், நெப்போ லியன், விஜயகுமார் ஆகி யோருக்கு இந்த குழந்தைகளும் எதிரியாக, இவர் களை கொலை செய்ய திட்ட மிடுகி றார்கள். இதை அறியும் ராஜ் கிரண், யாருக்கும் தெரியாமல் இந்த குழந்தை களை காப்பாற்றி போர் பயிற்சி அளித் து வளர்த்துவருகிறார்.

இப்படி, தங்களது பெற்றொர்களுக்குக் கூட தெரியாமல் வளர்ந்து வரும் பொன் னரும், சங்கரும் தங்களை அழிக்க நினைத்த எதிரி களை கொன்று, தனது தாயின் சபதமான மாமன் மகள்களை கை பிடிப் பதுதான் கதை.

இதுபோன்ற சரித்திர கதைகளில் முக்கி யத்துவம் பெறும் வர்ண னைகளை நம்பும்படியாக காட்சிப்ப டுத்தியிருக்கிறார் தியாகராஜன். பொன்னர்-சங்கர் என்ற வீரர் களாக பிராஷந்த் இரட்டை வேடத்தில் வெளுத்து வாங்கி யிருக்கிறார். காத லிக்காக முத லையுடன் சண்டைப் போடுவதும், மலைப் பாம்பை வளை ப்பதும் என அசர வைத்திருக்கிறது அவ ருடைய ஆளுமை. போர்கள காட்சிகளில் பிரஷாந்தின் ஆக்ரோ ஷமும், தியாக ராஜனின் இயக்கமும் இணை ந்து நம்மை பிரமிக்க வைத்திருக்கிறது. அதுவும் கோட் டை மதில் சுவரின் மீது ஏறும் பிரஷாந்த், எதிரி களின் அம்பு களுக்கு மறைந்து கொண்டு கோட் டையினுள் முன்னே றும் காட்சியில் அசத்தியி ருக்கி றார்.

திவ்யா பரமேஸ்வரன், பூஜா சோப்ரா என்ற இர ண்டு கதா நாயகிகள். மாட லிங்கில் இருந்து இரக்கு மதியான இந்த மாடல் மங்கைகளை அரச குமரிகளாக்கியிருக்கிறார்கள். இவர் களது முதல் படம் என்பதாலோ என்னவோ,நிஜமான அரச அழகிகளை பார்த்ததுபோல நம்மை அசர வைத்திருக்கிறார்கள்.

ராக்கி அண்ணன் என்ற கதா பாத்திரத்தில் போர் பயிற்சி யாளராக நடித் திருக்கும் ராஜ் கிரணின் தோற்றமும், முக பாவனையும் கதா பாத்திரத் திற்கு பலம் சேர்த்திருக்கிறது. நரைத்த முடியும், நரைக் காத பலமும் என மாயவர் என்ற வேடத்தில் நம்மை

மலைக்கவைத்திருக்கிறார் நாசர். அரசராக நடிப்பதற்காகவே அவதா ரம் எடுத்ததுபோல இருக் கும் நெப்போலியனின் கதா பாத்திரம், வலி மை இருந்தும் சுற்றியிருக்கும் சூட்சியாளர்களின் சூட்சியால் மதியை இழந்த அரசர்களை நியாபகப்படுத்துகிறது.

பிராஷ்ந்துக்கு தங்கையாக நடித்தி ருக்கும் சினேகா, தனது அழகுடன் ஆக்ரோஷத்தையும் சேர்த்து வெளி ப்படுத்தி யிருக் கிறார். படை வீரர் களை பந்தாடும் இந்த அருக்கானியை, ஜான்சி ராணி கதாபாத்திரத் திலும் வைத்து பார்க்கலாம் போல!

குஷ்பூ, ஜெயராம்,பொன்வன்னன், விஜயகுமார் ஆகிய கதாபாத்தி ரங்கள் கதையின் உருவாக் கத்திற் கு பக்கபலமாக இருப்ப தோடு சரி. மற்ற கதாபாத்திர ங்களான பிரபு, ரியாஸ்கான், போஸ் வெங் கட், சீதா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் காட்சி களை நிரப்ப பயன் பட்டி ருக்கிறா ர்கள்.

இப்படிப்பட்ட படத்திற்கு இசை எந்த அளவுக்கு முக்கியம் என்ப தை தியாகராஜன் உணர்ந்திருக்கிறார். ஆனால், இசைய மைப் பாளர் இளை யராஜா தான் மறந்திருக்கிறார். படத்தின் டைடில் காட்சியிலேயே இது சரித்திரப் படம் என்பதை காட்ட வேண்டிய இளையராஜா, படம் முழுக்கவும் அதை காண்பிக்க வில்லை என்பதுதான் வருத்தம். பின்னணி இசையில் ராஜா பிண்ணியி ருப்பார் என்று நினைத்தால், அதை எண்ணி வருந்த வைத்து விட்டார்.

கம்யூட்டர் கிராபிக்ஸ் தொழில் நுட்பத் தை மிகவும் நுட்பமாக கையாண்டு இருக்கிறார்கள். இந்த துரையை கையாண்டு இருப்பவர் பிரஷாந்த், இரண்டு பிரஷாந்த் தோன்றும் ஒவ் வொரு காட்சிகளையும் மிகவும் நேர்த் தியாக செதுக்கியிருக்கிறார் இந்த விஷ் வல் எஃபெக்ட்ஸ் இயக்குநர். ஓளிப் பதிவாளர் ஷாஜி குமாரின் ஒளிப் பதி வும் நம்மை மிரட்டியி ருக் கிறது.

கமர்ஷியல் ஃபார்மூலாவில் பயணித்து கொண்டிருக்கும் நம்ம தமிழ் சினிமா வின் வரலாற்றை புத்தமாக எழுதும் இந்த நேரத்தில், இப்படிப் பட்ட வரலாற்று கதையை படமாக்கி யிருக்கும் தியாகராஜன், பிரஷாந்த் ஆகியோருக் காகவே ஒரு வரலாற்று புத்தகத்தை எழுதலாம்

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply