கோடை காலம் என்றாலும் அழையா விருந்தாளியாக வந்து விடும் தொற்று நோய்கள். அதில் முக் கிய மானது… அவஸ்தைக்கு பெயர் போன `மெட்ராஸ் ஐ’ என் னும் கண்வலி.
நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் என்று கண்களில் தாய்ப் பாலை ஊற்று வது, எண்ணை ஊற்றுவது என்று ஏடா கூடா மாக எதுவும் செய்யக்கூடாது என்று எச்சரிக்கின்றனர் மருத்து வர்கள்.
கண்களை கசக்கினால் ஒரு சிலருக்கு திருப்தி ஏற்படுவது போன்று இருக்கும். ஆனால் அப்படி கண் களை கசக் குவது கூடாது.
இதனால் கண்களின் பாகங்களாகிய கரு விழி, வெண்ணிறமாகிய ஸ்கி லீரா, கண்ணில் உள்ள ஆடி, விழித்திரையில் பாதிப்பு ஆகி யவை ஏற்படும். இவைகளை மருத்து வர்கள் சரியாக கண்டு பிடித்து மருந்துகளை கொடுப்பார்கள். ஆனால் நாம் பொதுவாக ஏதாவது ஒரு மருந்தை ஊற்றி விடுவோம். இதனால் பார்வை பறிபோகும் அபாயம் ஏற்படும்.
கண்வலி வந்தால் சூரிய ஒளிக் கதிர்கள் கண்ணில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதிக பட்ச ஒளியையும் பார்க்க வேண் டாம். கண்களுக்கு பொருத் தமான கண்ணாடியை போட்டுக் கொள் ளுங்கள்.
இவர்களுக்கு கண் அழுத் தத்தி னால் தலைவலி உண்டாகும். இதனால் இந்த மாதிரியான நேரங் களில் கண் சிவப்பாகும். தலைவலி, பார் வைக்குறைவு ஏற்பட்டால் உடனே கண் மருத்துவரிடம் காண் பிக்கவும். ஒரு வித வைரஸ் கிருமி யால் ஏற் படும் இந்த கண் நோய் ஏற்பட்டவர்கள், அடிக்கடி சுத்த மான நீரில் கண்களைக் கழுவி விடவும். கண்களுக்கு மருந் திட்டு சுகா தாரமாக வைத்துக் கொள்ளவும். தினமும் காலை, மாலை குளிப்பது மிகவும் நல்லது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது