Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கம்பியூட்டர் திரையிலிருந்து ரிவி திரைக்கு ஒளிப்படக் காட்சிகளை மாற்றுவது எப்படி?

இன்டர்நெட் வழியாக வீடியோக்கள், திரைப்படங்கள் கிடைப் பதனால், பலரும் இது போல தேவை களை உண ர்ந்து, அதற்கான வழிகளில் ஈடுபட்டு வரு கின்றனர்.

நல்லதுதான் சிறிய மானிட் டரில் தோன்றும் திரைக் காட்சிகளை, பெரிய திரை யில் பார்த்து மகிழ்வது சிற ப்பாக த்தான் இருக்கும்.

ஆனால் சி.ஆர்.டி. மற்றும் எல்.சி.டி. டிவிக்களை, கம்ப்யூட் டருடன் இணைப்பது எப்படி என்பதுதான் இங்கு எழும் அடிப் படைக் கேள்வி. இந்த செயல் பாட்டில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப் படைகளை இங்கு தருகிறேன்.

கம்ப்யூட்டருடன் எல்.சி.டி. டிவிக்க ளை மட்டுமே இணைக்க முடியும் எனப் பலரும் எண்ணுகின்றனர். இது தவறு. சி.ஆர்.டி. டிவிக்களையும் இணைக்க லாம். அதற்கான வசதி அந்த டிவியில் அமைக்கப்பட் டிருக்க வேண்டும். அண்மைக் கால த்தில் வரும் சில நிறுவன டிவிக்கள் இந்த வசதியைப் பெற்றுள்ளன.

1.எச்.டி.எம்.ஐ (HDMI): புதிதாய் வரும் சி.ஆர்.டி. டிவிக்களில், இந்த HDMI போர்ட் தரப்படுகிறது. இதன் வழி யாக, அதற்கான சரியான கேபிள் களை வாங்கி, டிவியுடன் இணைக்க லாம். கம்ப்யூட்டரிலும் இந்த போர்ட் இருக்க வேண்டும். டிவி ரிமோட் அல்லது டிவியில், HDMI இன்புட் சேனலைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.

2. டி.வி.ஐ.(DVI): இதற்கான அடுத்த பெஸ்ட் கனக்ஷன் வகை DVI ஆகும். இதன் மூலம் இணைக்கப்படும்போதும், நல்ல டிஜிட்டல் இமேஜ் கிடைக்கும். இது பொதுவாக, பெர்சனல் கம்ப்யூட் டரில் காணப்படும். டி.வி.ஐ. கேபிள் ஒன்றின் மூலம் இரண்டையும் இணைக்கலாம். டிவியில் இந்த போர்ட் இல்லாமல் HDMI மட்டும் உள்ளது என்றால், DVI to HDMI கன்வர்டர் கேபிள் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

3.வி.ஜி.ஏ. (VGA): இப்போது வரும் சி.ஆர்.டி. டெலிவிஷன் களிலும், மற்றும் அனைத்து வகை க் கம்ப்யூட்டர்களிலும், பொதுவா கத் தரப்படும் இணைப்பு வகை இது. அதே போல, விஜிஏ கேபிள் களும் குறைந்த விலையில் எளி தாகக் கிடைக்கும். ஒரு முனையை கம்ப்யூட்டரிலும், இன்னொன்றை டிவியிலும், ஜஸ்ட் லைக் தட் இணைத்துப் பார்க்கலாம். டிவி அல் லது ரிமோட்டில் அதற்கான சேனல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதனை மறக்க வேண்டாம்.

4. எஸ். வீடியோ (Svideo): இதனை இறுதித் தேர்வாகவே வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென் றால், இதன் மூலம் கிடைக்கும் காட்சி அவ்வளவு சிறப் பாக இருக்காது.

பொதுவாக இந்த வகை இணைப்பு சி.ஆர் .டி. டெலிவிஷன் மற்றும் கம்ப்யூட்டர் களில் கிடைக்கும். கம்ப்யூட்டரில் உள்ள எஸ்- வீடியோ போர்ட்டில் கேபிளின் ஒரு முனையை இணைத்து, மற்றொரு முனையை வீடியோ இன் என்று இருக்கும் மஞ்சள் நிற இன்புட் சாக்கெட்டில் இணைக்க வேண்டும். பின்னர், இதற்கான சரியான சேனலை, டிவியில் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு சின்ன விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும்.

DVI, VGA அல்லது SVideo என்ற வகையில் இணைப்பினை ஏற்படுத்து கையில், படங்கள் மட்டுமே டிவியில் கிடைக்கும். ஒலி உங்கள் கம்ப்யூட்டர் ஸ்பீக்கரில் கிடைக்கும் ஒலி மட்டுமே இருக்கும். ஏனென்றால் இந்த கேபிள்கள், இமேஜ் மட்டுமே கட த்திச் செல்லும். ஆனால் HDMI கேபிள் இணைப்பில், இந்த குறை இல்லை.

டிவியில், ஒலி வேண்டும் என்றால், தனியே, 3.5 மிமீ மினி ஸ்டீரியோ மேல் ஜாக் ஒரு புறமும், ஆர்.சி.ஏ. மேல் கேபிள் இன்னொரு புறமும் கொண்ட தனி கேபிள் கொண்டு இணைக்க வேண்டும்.

எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் இவை தேவைப்படும் நீளத்தில் கிடைக்கின்றன. இவ்வாறு இணைத்த பின்னர், சில லேப் டாப்களில், கட்டளை வழியாக மாற்றங்களை ஏற்படுத்த வேண் டும். பொதுவாக, அனைத்து லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் இந்த கட்டளை Fn + F8 கீகளை அழுத்தி அமைப்பதாகவே இருக்கும்.

இல்லை எனில், குறிப்பிட்ட லேப்டாப்பின் மேனுவலைப் பார்த்து அறிந்து கொள்ளவும். அதே போல, கம்ப்யூட்டரின் ரெசல்யூ சனையும் மாற்ற வேண்டியதிருக்கலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: